Saturday, 16 July 2016

வேட்டுவர்(தமிழ் ) இனத்தின் மக்கள் தொகை

இன்று வேட்டுவர்(தமிழ் ) இனத்தின் மக்கள் தொகை ஏறக்குறைய 11 இலட்சம் பேர்

கிபி 1931 வரை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புஎடுக்க பட்டது .
கிபி 1901 மக்கள் தொகை கணக்கெடுப்பில் வேட்டுவர்(தமிழ் ) 74889 பேர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .
கிபி 1901 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 'மாவலியர்'(மாவலி வேட்டுவ குலம்) வேட்டுவ இனத்தின் உட்பிரிவு என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கிபி 1901 மக்கள் தொகை கணக்கெடுப்பில் காவல வேட்டுவ குலங்கள் மற்றும் வேட வேட்டுவ குலங்கள் வேட்டுவர்(தமிழ் ) இனத்தில் கணக்கெடுப்பு எடுக்கபட்டு உள்ளது .
கிபி 1901 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 'பூலுவர்'(பூலுவ வேட்டுவ குலம் ) 6240 பேர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பூலுவ வேட்டுவர் வேட்டுவ இனத்தின் உட்பிரிவு என்ற வரலாற்று அறிவு இல்லாமல் சாதிகள் பட்டியலில் 'பூலுவர்' என்று கூறப்பட்டு உள்ளது . இந்த அறிக்கையை பின்பற்றியே கிபி 1985 அம்பாசங்கர் சாதிகள் பட்டியல் அறிக்கையிலும்' பூலுவர் ' என்று கூறப்பட்டு உள்ளது.

புன்னம் வேட்டுவ குலம் வேட்டுவரில் ஒரு பிரிவு .இந்த வரலாற்று அறிவு இல்லாமல் கிபி 1985 அம்பாசங்கர் சாதிகள் பட்டியல் அறிக்கையில் ,புன்னம் வேட்டுவ கவுண்டர், என்று தனியாக சேர்க்கபட்டு உள்ளது .

வேட்டுவர் (தமிழ் ) என்று சாதிகள் பட்டியலில் இருந்த பெயரை கிபி 1985 அம்பாசங்கர் சாதிகள் பட்டியல் அறிக்கையில் 'வேட்டுவ கவுண்டர் ' என்று கூறப்பட்டு உள்ளது .கிபி 1985 அம்பாசங்கர் சாதிகள் பட்டியல் அறிக்கையில் வேட்டுவர் (தமிழ் ) 125886 பேர் என்று கூறி இருப்பது தவறான புள்ளி விவரமாகும் .(கிபி 1901 மக்கள் தொகை கணக்கெடுப்பில் வேட்டுவர்(தமிழ் ) 81129 பேர் இருந்தார்கள் .இந்தியா சுதந்திரம் வாங்கிய போது மக்கள் தொகை 30 கோடி இருந்தது .இன்று வேட்டுவர்(தமிழ் ) இனத்தின் மக்கள் தொகை ஏறக்குறைய 11 இலட்சம் பேர் இருப்பதை மறைக்க பட்டு இருக்கிறது .)

இன்று வேட்டுவர்(தமிழ் ) திண்டுக்கல்,கோவை ,திருப்பூர் ,ஈரோடு,கரூர் ,நாமக்கல் ,சேலம் போன்ற மாவட்டங்களின் அதிக அளவிலும் ,மதுரை ,புதுகோட்டை ,திருச்சி ,கிருஷ்ணகிரி,தேனி,தஞ்சாவூர்,நீலகிரி போன்ற மாவட்டங்களில் குறைந்த அளவிலும் வாழ்ந்து வருகிறார்கள் .

No comments:

Post a Comment