Saturday, 16 July 2016

முனையதரையர்

                                                           
           முனையதரையர் மன்னர்கள் முன்னை (மின்ன ) வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்கள் .

 மின்ன (முன்னை) வேட்டுவ குலத்தவர்கள் திருமுனைபாடி நாட்டை ஆண்ட என்பதையும் ,கிபி 12 நூற்றாண்டுகளின் திருமுனைபாடி நாட்டில் இருந்து கொங்கு நாட்டை நிர்வாகம் செய்வதற்கு  கொங்கு நாட்டிற்கு வந்தார்கள் என்பதை கல்வெட்டுகள் உறுதி படுத்துகிறது .முன்னை என்ற சொல்லின் மருவு ,மின்ன என்ற சொல்

திருநாவலூரைத் தலைநகராகக் கொண்டு திருமுனைப்பாடி நாட்டை ஆட்சி செய்தவர் நரசிங்க முனையரையர் ஆவார். 63 நாயன்மார்களில் ஒருவரான இவர் .
                                 
'முனையதரையர் வேட்டுவன் ஆளவந்தானான இருங்கோளன்' என்பவன் கிபி 12 ஆம் நூற்றாண்டுகளில் அரசியல் அதிகாரியாக இருந்தான் என்பதை ஜம்பை கல்வெட்டு (1938:436) கூறுகிறது .

முனையதரையர் மன்னருக்கு 'இருங்கோளன்' என்ற பட்ட பெயர் இருந்ததை இக் கல்வெட்டு கூறுகிறது .

நரசிங்க முனையரையர் புராணம்:- 1. இம்மரபினரைப் பற்றிய
கல்வெட்டுக்கள் சில உண்டு. அவற்றுள் பழமையானது மூன்றாம் நந்திவர்மன் மகனான
நிருபதுங்கனது (கி.பி. 865 -900) 16ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டாகும்.
அத்திருவதிகைக் கல்வெட்டில், "முனைப்பேரரையர் மகன் முனையர்கோன்
இளவரையன்" என்பது காண்கிறது. நிருபதுங்கன் தந்தையான கழற்சிங்கரும், சுந்தரரும்,
அவரை வளர்த்த நரசிங்க முனையரையரும் ஏறத்தாழ ஒரு காலத்தவர். (கி.பி. 840 -
865) ஆகலின் மேற்சொன்ன கல்வெட்டில் குறிக்கப்பட்ட முனைப்பேரரையர் நமது
நரசிங்க முனையரையர் ஆகலாம் என்று கோடல் பொருந்தும்.

2. நிருபதுங்கனுக்குப் பிற்பட்ட அபராஜிதவர்மன் ஆட்சியில் முனையதரையன்
அபராசிதன் குலமாணிக்கப் பெருமானார் என்று ஒருவன் இருந்தான் என்று
திருநாவலூர்க் கல்வெட்டு ஒன்று குறிக்கின்றது. (S.I.I. VII, 999) இவ்வரச மரபினர்
தொடர்ந்து சோழர் ஆட்சியிலும் இருந்து வந்தனர்.

3. வீரராசேந்திரன் ஆட்சியில் வீரராசேந்திர முனையதரையன் என்பவன்
இருந்தான். (S.I.I. IV, 529).

4. விக்கிரமசோழனிடம் (கி.பி.1118 - 1135) அமைச்சனாகவும் தானைத்
தலைவனாகவும் ஒரு முனையதரையன் இருந்தான் (விக்கிரமசோழன் உலா வரி. 139-42).

5. நரசிங்க முனையரையர் கழற்சிங்கனான மூன்றாம் நந்திவர்மன் காலத்தவர்.
அவர் திருவாதிரை விழாவில் அடியாரை உபசரித்து ஒவ்வொருவர்க்கும் 100
பொன்னுக்குக் குறையாமல் கொடுத்து உண்பித்தவர் என்பது சேக்கிழார் திருவாக்கு.
இங்ஙனம் அவர் காலத்தில் திருவாதிரை விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது;
அடியார்க்கு உபசாரம் செய்யப்பட்டது என்பதைக் கல்வெட்டால் அறியலாம்.
"வழுவூரான் என்பவன் குன்றாண்டார் கோவிலில் (புதுக்கோட்டைச்சீமை) நடைபெற்ற
திருவாதிரை விழாவில் 100 பேர்க்கு உணவளிக்க அரிசி தானம் செய்தான் (347 of
1914) என்று நந்திவர்மனது 3ஆம் ஆட்சி ஆண்டுக் (சுமார் கி.பி. 842) கல்வெட்டுக்
கூறுகிறது.

வல்லங் கிழான் மல்லன்   திருசிற்றம்பலம்யுடையனான முனையதரையன் என்பவரை பற்றி கோவை அன்னூர் கல்வெட்டு (கிபி 1260 களில்) கூறுகிறது. .,புகழ் வேண்டியான் முனையதரையன் என்பவரை பற்றி காங்கேயம் கல்வெட்டு (கிபி 1230 களில் ) கூறுகிறது .மேல்கரை  பூந்துறை நாட்டு  நசியனூர்  முனையதரையன் என்பவரை பற்றி கல்வெட்டு (கிபி 1341) கூறுகிறது .
முன்னை வேட்டுவ குலத்தை பற்றி கிபி 16 ஆம் நூற்றாண்டு கொடிவேரி கல்வெட்டு கூறுகிறது .

No comments:

Post a Comment