Saturday, 16 July 2016

மாவலி வாணதிராயர்


மாவலி வாணர் ,வாணகோ அரசர்கள் மாவலி வேட்டுவ குலத்தை சேர்ந்த மன்னர்கள் .

 வேட்டுவ குலத்தை மாவலியர் என அழைக்கபட்டதை பற்றி கல்வெட்டுகள் ,செப்பேடுகள் மற்றும் ஓலை சுவடிகள் கூறுகிறது .சாந்தப்படை வேட்டுவ குலம்,உரிமைபடை  வேட்டுவ குலம்,புன்ன வேட்டுவ குலம்,வன்னி வேட்டுவ குலம்,பெருமாள் வேட்டுவ குலம் போன்ற வேட்டுவ குலத்தவர்களை மாவலியர் என்று அழைக்கபட்டத்தை கல்வெட்டுகள் மற்றும் பட்டயங்கள் கூறுகிறது .


'..காங்கேயனை வென்று கடையனை வித்திடோம் வேட்டு மாவலிக்கு விருந்திடோம் பாண்டியன் ..'
(புதுகோட்டை கல்வெட்டு எண்-787,கிபி 16)
வேட்டு மாவலி -வேட்டுவ மாவலி(மாவலி வேட்டுவ குலம்) .

வேட்டுவர்களை பாணர் (மாவலியர்) என அழைக்க பட்டதை வேட்டுவ பாளையக்காரர் வரலாறு கூறுகிறது
கல்வெட்டுகள் ,பட்டயங்கள் 'மாவலியர்' வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறுகிறது .

மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய வேட்டுவன் விக்கிரம சோழ மகதை நாடாழ்வாரின் கி.பி.1210 இன் கல்வெட்டு இடம் - அரியலூர் மாவட்டம்,அரியலூர் வட்டம் பெரியமறை சுவேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டபக் கிழக்குச்சுவர் காலம் - மூன்றாம் குலோத்துங்கன்,யா.32,கி.பி.1210 .

ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவர்த்திகள் மதுரையும் ஈழமும் கருவூரும்பாண்டியன்முடித்தலையும் கொன்உ வீரா அபிஷேகமும் லிஜையா அபிஷேகமு பண்ணி அருளிய திரிபுவ வீரதேவற்கு யாண்டு முப்பத்திரண்டாவதுன அகளங்கபுரத்து உடையார் திருப்பார்பதீஸ்வரமுடைய நாயனார்க்கு ஆறகளூருடைய பொன் பரப்பினான வேட்டும் இராஜா ராஜா தேவனாரான விக்கிரம சோழ மகதை நாடாழ்வார் திருநாமஞ் சாத்தி செய்த திருவோலக்க மண்டபம் எடுத்து வலிய பெருமானென்று இது செய்வித்தான் சென்னிவலக்கூற்றத்து ஆற்றூருடையான் பட்டன் பொன்பரப்பினான சித்திரராயன் ஸ்ரீமாயேஸ்வர ரக்‌ஷை .

வேட்டும்-வேட்டுவன்

 வேலூர் குடியாத்தம் பகுதிகளை தலைமையிடமாக கொண்டு ஆண்ட மாவலி வாணாதிராயர்கள்:
சங்க காலத்தில் பாணர் ( மாவலி வாணாதிராயர்கள்)  இப் பகுதிகளை ஆண்டார்கள் . பிறகு இவர் வழியில் வந்தவர்கள் கிபி 4 முதல் கிபி 10 வரை  கல்வெட்டுகளிலும் ,செப்பேடுகளிலும் பேசபடுகிறார்கள் .
பிறகு சோழர்  மன்னர்களுக்கு கீழ் படைதலைவராகவும் ,அமைச்சர்களாகவும் இருந்தவர்கள்:

முதலாம் பரந்த சோழனின் ஆட்சியில் (கிபி 913) கும்பகோணம் கல்வெட்டு ஒரு மாவலி வாணாதிராயர்கள் பற்றி கூறப் பட்டுள்ளது .
சுந்தர சோழனின்  படை தலைவனாக ஒரு மாவலி வாணாதிராயர்கள்   இலங்கை போரில்(கிபி 965) கலந்து கொண்டு உயிர் துறந்ததை பற்றி  கும்பகோணம் கல்வெட்டு கூறுகிறது .
முதலாம் ராசா ராசா சோழனின் கல்வெட்டில் ஒரு 'ராசா ராசா வாணகோவரையர்' பற்றி கூறப்பட்டு உள்ளது .

முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் ஒரு 'ராஜேந்திர சோழ மாவலி வாணாதிராயர்கள்' பற்றி திருவண்ணாமலை கல்வெட்டு கூறுகிறது .
முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சியில்  இலங்கேஷ்சுவர  வாணகோவரையர் பற்றி அரியலூர் கல்வெட்டு கூறுகிறது .விக்கிரம சோழ ஆட்சியில்  'விருதபயங்கர  சுத்த மல்லனான  வாணகோவரையர்' பற்றி கூறப் பட்டு உள்ளது .
பிறகு

சேலம் ஆத்தூரை தலைமை இடமாக கொண்டு ஆண்ட வாணகோவரையர்கள் வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்கள். 

1.ராசா ராசா வாணகோவரையர்
2.மகத நாடாள்வான்
3.குலோத்துங்க வாணகோவரையர்
4.வன்நெஞ்ச வாணகோவரையர்

 மதுரை அலங்காநல்லூர் பகுதியை தலைமை இடமாக கொண்டு ஆண்ட வாணகோவரையர்கள் வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்கள்
1.திருமாலிருஞ்சோலை மாவலி வாணாதிராயர் (கிபி 15)
2. சுந்தரதோள்உடையான்  மாவலி வாணாதிராயர் (கிபி 15,16)
3. இறந்தகாலம் எடுத்த சுந்தரதோள்உடையான்  மாவலி வாணாதிராயர் (கிபி 16)-இவர் மதுரை நாயக்க மன்னரோடு போர் செய்து தோற்ற பிறகு ஆட்சி அதிகாரத்தை இழந்தவர் .

மணலி வாணாதிராயர்(இவர் மதுரை நாயக்க மன்னரோடு சண்டை செய்தவர் ),காளை வாணாதிராயர் போன்றோர் மதுரை நாயக்கர் ஆட்சியில் இருந்த குறுநில தலைவர்கள் .






'வாணகோ வேட்டுவதி அரையர் ' பற்றி கல்வெட்டு ( ARE 241/1979-80) கூறுகிறது .
ஆனைமங்கலம் என்னும் ஊரை ஆண்ட 'வேட்டுவதி வாணகோவரையார் 'பற்றி கல்வெட்டு (செங்கம் நடுகற்கள் 1971/39) கூறுகிறது .
மேற்கொவலூர் நாட்டை ஆண்ட 'வாணகோவரையார் வேட்டுவதி அரையர் ' பற்றி கல்வெட்டுகள் (செங்கம் ...நடுகற்கள் 1971/45) கூறுகிறது .

'கரும்புறதார்க் கெல்லாம் அரசரான மாவலி வாணா' என்று காளமேகபுலவர் கூறுகிறார் .( காளமேக புலவர் ,தனிப்பாடல் திரட்டு ,508).
கரும்புறத்தார் -வேடர் .

மணிமேகலை காலத்துச் சோழ வேந்தனாகிய நெடுமுடிக் கிள்ளியின் தேவி சீர்த்தி யென்பவள் மாவலி மரபில் தோன்றிய ஓர் அரசன் மகள் என்று சீத்தலைச் சாத்தனார் கூறுகின்றார்.
'நீரிற் பெய்த மூரிவார்சிலை
மாவலி மருமான் சீர்கெழு திருமகள்
சீர்த்தி யென்னுந் திருத்தகு தேவியொடு,
(மணிமேகலை 19. 51 - 116).

'மூத்தஅரைசர்,இளவரைசர் என்ற இரு துணை பெயர்கள் வருகின்றது .இவற்றில் மூத்தஅரைசர் என்பது மூத்த அரையர் பரம்பரை யை குறித்து வந்தது என்று கருதபடுகிறது .உண்மையில் இந்த சொல் ஒரு குலத்திலே மூத்த (senior lineage) குலம் என்பதை குறித்து வந்தது .பெரும்பாண மூத்தஅரைசர் , பெரும்பாண இளவரைசர் என்று கூறுவதில் இருந்து இது உறுதி படுகிறது .தற்கால முத்தரையர் என்ற குலத்துக்கும் பெரும்பாண முத்தரைசர் கும் தொடர்பேதும் இல்லை .மேலும் வாணா கொவரையர் பரம்பரை இல் வாணகோ மூத்தஅரைசர் என்றும் வாணகோ இளவரைசர் என்றும் கூறப்படும் இரு பிரிவுகள் இதனை வலி உறுத்துகிறது . இளவரைசர் என்பது ஒரே குலத்தின் இளைய பிரிவினை (Junior lineage) குறித்து வந்தது எனலாம்' (தொல்குடி -வேளிர்-அரசியல் (செங்கம் நடுகற்கள் ) ).

'...வீர சேனாதிபதி பருவான வேட்டுவ இளவரைசர் சேனை எரிந்து பட்டார் கல் '( தருமபுரி ,அரூர் கல்வெட்டு .கி பி 8).

மாவலி வேட்டுவ குலத்தை சேர்ந்த புலிகுத்தி கல் :
திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அரிய வகை ‘புலி குத்திக் கல்’
கொடுவாயில் காணப்படும் நடுகல் 100 செ.மீ அகலமும், 120 செ.மீ உயரமும் கொண்டதாகும். இதன் மேற்பகுதியில் மூன்று வரிகளைக் கொண்ட தமிழ் எழுத்துச் செய்தி உள்ளது. இதில் வீரனின் தலை நேராகப் புலியைப் பார்த்த வண்ணம் உள்ளது. காதில் காதணியும், கழுத்தில் சரப்பளி என்னும் ஆபரணமும் கையில் வீர காப்பும் இடையில் மட்டும் நல்ல வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடையும் அணிந்துள்ளார். இடையில் குறு வாள் வைத்துள்ளார். தன் இரண்டு கைகளிலும் ஈட்டியைப் பிடித்துப் புலியின் வயிற்றுப் பகுதியில் குத்தும் நிலையில் வீரக்கல் வடிவமைக்கப்பட்டுள்ளது. புலியின் முன்னங்கால் இரண்டும் எழுந்த நிலையில் வீரனை தாக்கவும், ஈட்டியைத் தடுக்கும் நிலையில் உள்ளது. பின்னங்கால் வீரனின் இடது கால் மேல் உள்ளது. புலியின் வால் மேல் நோக்கி உள்ளது.

“கொடுவாயில் முத்து (ப்) புவன வாணராயன் மகன் முத்தனுக்குத் தாய் வெட்டுவித்த கல்“
என்று அக் கல்வெட்டில் தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது, கொடுவாயில் உள்ள முத்து புவன வாணராயன் மகன் முத்தன் என்பவர் மாட்டு மந்தை மற்றும் மனிதர்களை காப்பற்ற புலியுடன் சண்டையிட்டு வீர மரணமடைந்துள்ளார். அவரின் நினைவாகவும், வீரத்தின் அடையாளமாகவும் அவனது தாய் ஏற்படுத்திய நடுகல் என்பது அதன் பொருளாகும். தன் மகனுக்கு தாய் ஏற்படுத்திய வீரக்கல் என்பதால் இது மிகச் சிறப்புடையதாகும்.

மாவலி வேட்டுவ மன்னர்களின் வைப்பாட்டிகளுக்கு பிறந்த பிள்ளைகளுக்கு 'பிள்ளை வாணகோவரையர்', 'பிள்ளை மகாபலி வாணராயர் ', 'பிள்ளை குலசேகர வாணராயர் ' போன்ற பட்ட பெயர்களை கொடுத்து அதிகாரிகளாகவும் ,குறுநில தலைவர்களாகவும் வைக்க பட்டதை பற்றி கல்வெட்டுகள் கூறுகிறது . மேலும் வேட்டுவ அரசர்கள் தங்களுடைய அரசியல் அதிகாரிகளுக்கு 'வாணராயர்' என்ற பட்ட பெயர் கொடுக்க பட்டதை கல்வெட்டுகள் கூறுகிறது ..

No comments:

Post a Comment