Saturday, 16 July 2016

சோழ அரசர்


சோழ அரசர்கள் சோழ வேட்டுவ குலத்தை சேர்ந்தவன் என்பதற்கு பல கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கிறது .

சோழ அரசர்களை சென்னி ,வளவர் ,செம்பியர் போன்ற பெயர்களில் அழைக்கபட்டது.

'ஸ்வஸ்தி ஸ்ரீ திருமருவிய செங்கோல் வளவன் தன திரு தமையனோடு போய்'
(IPS-110,கி பி 11,சோழர் )
'ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் மருவிய செங்கோல் வேந்தன் த '
(IPS-111,கி பி 11,சோழர் )
''ஸ்வஸ்தி புயல் வாழ்த்து மணவாளர் புலியனையவும் சகரம் செலயனைத்தும் னூளும் திசை நடப்ப கொற்றவைவும் திருவும் வாழ கொடுங்கலி ..'
(IPS-166,கி பி 12,சோழர் )

'ஸ்வஸ்தி ஸ்ரீ வீர ராஜேந்திர தேவருக்கு யாண்டு நாலாவது முத்தூர் காவலன் வளவரில் உத்தமசோழ பல்லவரையன் மகன் சிங்கனான அங்கராயன் முத்தூர் பெரிய நாச்சியாருக்கு ..'
(1910:165,கிபி 1211,முத்தூர் சோழிஸ்வரர் கோயில் ).
'ஸ்வஸ்தி ஸ்ரீ வீரராஜேந்திர தேவருக்கு யாண்டு நாலாவது கெதிர் நாலாவது காங்கேய நாட்டில் காடவூரில் காவலன் வளவரில் ..மனைகிழத்தி சோழாண்டி பட்டாலியில் ..'
(1920:165,கிபி 1215,பட்டாலி ஊர் )
'ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவருக்கு யாண்டு எட்டாவது காங்கேய நாட்டு முத்தூர் ... வேந்தரில் சல்லன் பு .நவர்'
(1910:162;கிபி 1211,முத்தூர் சோழிஸ்வரர் கோயில்)
.
'..முத்தூர் காணியாளபிள்ளையரில் காவுள வேந்தரில் கருமதசரவண கவுண்டர் மகன் சோழியப்பானும்..'
( முத்தூர் பட்டயம் ,கிபி 15)
வேந்தர் வேட்டுவ கூட்டம் என்று அழைக்கபட்டதை முத்தூர் பட்டயம்) கூறுகிறது .

'ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவருக்கு யாண்டு ஐம்பத்தி அஞ்சாவது வடகரை நாட்டு குளவாற்றூர் ஊரில் இருக்கும் ஊராளி செம்ப வேட்டுவன் தொன்டையன் பிள்ளனான செயங்கொண்ட சோழ கொங்கு ஆள்வான் இக்குளம் அட்டி காலும் வெட்டி விச்சேன்'
(குலோத்துங்க சோழனின் 55 ஆவது ஆட்சி ஆண்டு ,கிபி 1125,கொடிவேரி பவானி அணைகரை கல்வெட்டு )
செம்ப (செம்பியன் ) வேட்டுவ கூட்டத்தை பற்றி இக் கல்வெட்டு கூறுகிறது .
'...காங்கேய நாட்டு பட்டாலியில் காவலன் குறும்பில்லரில் போடன் மனைகிழத்தி கோவி ..நாயனார் ..'
(1920:271,கிபி 1285,பட்டாலி ஊர் காங்கேயம் )
குறும்பில் -குறும்பிலர்-குறும்பில்லர்
'கொடு வில் எயினக் குறும்பில் செப்பின் '(பெரும் பாண் -129)

'வில்லோர் குறும்பில் ததும்பும் 'அகம் -261:14
''ஸ்வஸ்தி ஸ்ரீ வீரராஜேந்திர தேவருக்கு யாண்டு இரண்டாவது கெதிர் ஆறாவது விஜயமங்கலத்து பட்டாலி வேட்டுவன் சொக்கன் கூரன் .."
(SITI VOL-3,NO-1092,விஜயமங்கலம் கல்வெட்டு,கிபி 13)

குறும்பில்லர் வேட்டுவ கூட்டத்தை பட்டாலி வேட்டுவ கூட்டம் என்று அழைக்க பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது .
எயினர் -வேட்டுவர்
வேட்டுவரின் குல தெய்வம் கொற்றவை(போர் தெய்வம் ) ஆகும் .சோழ அரசரின் குல குல தெய்வம் கொற்றவை ஆகும்.

சோழ மன்னன் மும்முடி வேட்டுவ குலத்தை சேர்ந்தவன் என்று பிரமியம் கல்வெட்டு கூறுகிறது .(சோழ மன்னர்களின் கிளை குலத்தினர் பிரமியத்தை தலைமை இடமாக கொண்டு கொங்கு நாட்டை ஆண்டார்கள் ).

திங்களூர் ஊரும் ஊரளிகளும் - திங்களூர் ஊரில் ஊரை ஆள்பவனை குறிக்கும் .
திங்களூர் ஊரும் ஊராரும் அல்லது ஊரார் -திங்களூர் ஊரில் வாழ்ந்து வரும் மக்கள் அனைவரையும் குறிக்கும் .
வேட்டமங்கலம் ஊரும் அரையர்களும் -வேட்டமங்கலம் ஊரில் வாழ்ந்து வரும் அரையர் மக்களை குறிக்கும் .

தென்கரை நாடு அரையர்கள் ,தலையூர் நாட்டு அரையர்கள்,மணலூர் நாட்டு அரையர்கள் பற்றி கல்வெட்டுகள் கூறுகிறது .
அரையர்கள் மற்றும் ஊராளி பற்றி கொங்கு நாட்டில் கிடைத்த 50 துக்கு மேற்பட்ட கல்வெட்டுகள் வேட்டுவ இனத்தை சேர்ந்த கல்வெட்டுகள் .

இறந்த போர் வீரனுக்கு நடுகல் நடும் வழக்கம் வேட்டுவ குலத்தின் வழக்கம். கோப்பெருஞ் சோழனுக்கு நடுகல் நட்டு இருக்கிறார்கள் என்பதனை புறநானூறு 221,222,223 பாடல்கள் மூலம் அறியலாம் .

பாடல் எண் : 3அந் நகரத் தினில்இருக்கு வேளிர்குலத் தரசளித்து மன்னியபொன் னம்பலத்து மணிமுகட்டில் பாக்கொங்கில் பன்னுதுலைப் பசும்பொன்னால் பயில்பிழம்பாம் மிசையணிந்த பொன்னெடுந்தோள் ஆதித்தன் புகழ்மரபிற் குடிமுதலோர்.
பொழிப்புரை : அக்கொடும்பாளூர் நகரத்தில், இருக்குவேளிர் குலத்தில் தோன்றி ஆட்சி செய்து, நிலை பெற்ற பொன்னம்பலத்தின் அழகிய உச்சியில், பொன்னிலமாய கொங்கு நாட்டின் புகழ் பெற்ற தும், எடைமிக்கதும், தூயதுமான பசும் பொன்னினால் விளங்கும் ஒளியுருவின் மேல் வேய்ந்து, பொன்னணிகள் அணிந்த தோளை உடைய ஆதித்த சோழனின் புகழ் தங்கிய மரபின் குடி முதல்வராய்,
குறிப்புரை :பா கொங்கின் - பொன் மணல் பரவப் பெற்ற கொங்கு நாடு. பா - பரவப் பெற்ற. கொங்கு நாட்டின் மண்பகுதி பொன் மணல் துகள்கள் மிக்கு இருப்பது ஆதலின் `பாக் கொங்கின்\' என்றார். துலைப் பசும்பொன் - எடை மிக்க அழகிய பொன். இருக்கு வேளிர் குலத்தவர், பொன்னம்பலத்தைப் பொன் வேய்ந்த ஆதித்த சோழரின் குடி முன்னோர் மரபில் தோன்றியவர் இடங்கழியார் என்பார்.
(இடங்கழி நாயனார் புராணம்,தேவாரம்)

இருக்கு வேளிர் குலத்தவரும்,சோழ அரசனும் ஒரே குலத்தை சேர்ந்தவர்கள் என்று இடங்கழி நாயனார் புராணம்,தேவாரம் பாடல்-3 கூறுகிறது .ஆதித்த சோழன் கொங்கு நாட்டை வென்றதை கல்வெட்டுகள் ,கொங்கு தேச ராசாக்கள் நூல் ,சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .
ஆக இந்த தேவார பாடல்களில் சொல்ல பட்ட செய்திகளை யாராலும் மறுக்க முடியாது .

இருக்குவேளிர்கள் கொங்கு வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்கள் என்பதை பொன் அமராவதி கல்வெட்டுகள் கூறுகிறது .
"கொங்கு நாட்டு அரசர்கள் சோழ நாட்டில் இருந்தும் ,பாண்டிய நாட்டில் இருந்தும் கேரளத்திற்கு எதிராக தங்களுக்கு உதவுவதற்கு வேட்டுவர்களை அழைத்து வந்தனர் என வழக்கு வரலாறு கூறுகிறது .ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழ மன்னர் ஆதித்திய வர்மன் கொங்கு நாட்டை வெற்றி கொள்ள உதவியவர்கள் இவ்வேட்டுவர்களே என வழக்கு வரலாறு கூறுகிறது" (தென்இந்திய குடிகளும் குலங்களும்-தொகுதி 7)

.    செம்பிய (செம்ப) வேட்டுவ குலத்தவர்களை சோழ வேட்டுவ குலம்,புலி வேட்டுவ குலம் ,சூரிய வேட்டுவ குலம் ,வளவன்  வேட்டுவ குலம் ,மும்முடி வேட்டுவ குலம், போன்ற பெயர்களில் அழைக்கபட்டனர்                                     

1 comment:

  1. பலே! அனைத்தும் ஆய்வுக் களஞ்சியமாகவுள்ள அருமையான கட்டுரைகள்! வாழ்த்துகள்.

    ReplyDelete