பருத்திபள்ளி நாடு (பருத்திபள்ளி ஊரை சுற்றி உள்ள பகுதிகள் ),ஏழூர் நாடு ( ஏழூர் ,கரடிப்பட்டி , பகுதிகள் ),வல்லவரையர் நாடு (நாமக்கல் கதிரானல்லூர்,மொஞ்சனூர் பகுதிகள் ),வாழவந்தி நாடு (மனப்பள்ளி ,மோகனூர் பகுதிகள் ),முலையூர் நாடு (கொல்லிமலைக்கு தென் கிழக்கு பகுதிகள் ),கொல்லிமலை நாடு(வேட்டம் பாடி ,தூசியூர் ,காளப்ப நாயக்கன்பட்டி,கொல்லிமலை பகுதிகள் ),ராசிபுர நாடு போன்ற சிறு நாடுகள் மழகொங்கத்தில் இருந்ததை கல்வெட்டுகள் கூறுகிறது . திருச்செங்கோடு ,கொக்கராயன் பேட்டை பகுதிகளை கீழ்கரை பூந்துறை நாடு என அழைக்க பட்டது . வேலூர் ,சோழசிராமணி கபிலர்மலை பகுதிகளை கீழ்கரை அரைய நாடு என என அழைக்க பட்டது.
பருத்திபள்ளி நாடு ,ஏழூர் நாடு,வல்லவரையர் நாடு ,ராசிபுர நாடு இந்த நாடுகளை சேல நாடு என அழைக்க பட்டத்தை கல்வெட்டுகள் கூறுகிறது .பருத்திபள்ளி நாடு ,ஏழூர் நாடு,பூந்துறை நாடுகளை நாடாள்வார் நாடு என அழைக்க பட்டத்தை கல்வெட்டுகள் கூறுகிறது. நாமக்கல் கதிர நல்லூர் பகுதியை சேர்ந்த மூஞ்சை வல்லவரையன் என்பவர் பழு வேட்டரையரின் மகளை திருமணம் செய்தவர் இதை விருத்தாசலம் கல்வெட்டுகள் மூலம் அறியலாம் .முதலாம் பராந்தக சோழனின் பட்டத்தரசி பழுவேட்டரையரின் மகள் என்பதை செப்பேடுகள் கூறுகிறது .
'ஸ்ரீ கோக்கண்டன் மாந்தரனுக்கு செல்லா நின்ற ஆண்டு 8 இவ்யாண்டு பெருமாள் கீழ் வாழ்ந்து வரும் மழநாட்டான் மூர் கூற்றத்துக்கு கீழ் கூற்றில் எதகம்பாடி வெள்ளான் கூத்தன் காடி நிருத்தியான நெருப்பரை ஆசாரிகள் மகன் நிருத்தசூரன் தந்தையும் தாயாரையும் சாத்தி செய்வித்த கிணறும் வட்டும்'
(திண்டுக்கல் ,ஓட்டன்சத்திரம் கப்பலூர் தண்டபாணி கோயில் அருகே உள்ள தூண் ;கிபி 9)
மந்தரனுக்கு கீழ் பணியாற்றிய மழ கொங்கத்தை சேர்ந்த வெள்ளான் ஆசாரியார் என்பவர் பற்றி கூறப்பட்டு உள்ளது .மாந்தரன் என்பவர் சேர வேட்டுவ குலத்தின் கிளை குலமான மாந்த வேட்டுவ குலத்தை சேர்ந்தவன் .
முதலாம் ராசா ராசா சோழனின் ஆட்சியில் கொள்ளிடம் வடகரையில் இருந்து கொல்லிமலை வரையில் இருந்த பகுதிகளை 'மழ நாடான இராஜாஸ்வரய வளநாடு 'என அழைக்க பட்டது .
'பூ வரியும் பொழிற் சோலை காவிரியை கடந்திட்ட அழகமைந்த வார் சிலையின் மழகொங்க மடிப்பெடுத்து மீண்டொலிய மணிஇமைக்கு மெலிலமைந்த நெடும்புரிசை பாண்டிகொடுமுடி சென்றெய்தி'(பாண்டியர் செப்பேடுகள் ,கிபி 8)
ஆக நாமக்கல் பகுதிகளை மழகொங்கம் என அழைக்க பட்டதை இந்த செப்பேடு உறுதிபடுத்துகிறது . மழகொங்கம் சோழ நாட்டின் எல்லையாக இருந்தது .மழகொங்கம் பகுதியில் 'மழபாடி' என்ற ஊர் வேட்டுவ குலத்தின் காணியாக இருந்ததை சேலம் சங்ககிரி கல்வெட்டு (கிபி 13) கூறுகிறது .
புல்லை வேட்டுவ குலத்தவர்கள் ,மூல வேட்டுவ குலத்தவர்கள்,இரும்புலி வேட்டுவ குலத்தவர்கள்,பொன்ன வேட்டுவ குலத்தவர்கள்,பாண்டிய வேட்டுவ குலத்தவர்கள் ஆகியோர் மழகொங்கம் பகுதிகளை ஆண்டார்கள் என்பதை இப் பகுதியில் கிடைத்த கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது .
'ஸ்வஸ்தி ஸ்ரீ பரகேசரி செங்கோல் பற்றிய ஆண்டு ஐந்தில் திரு வேங்கைவாசல் சிவருக்கு விலை மா மேல் மாத ....க்கு நாதன் மழநாட்டு வேள் வெச்சான் மேதக்கன நந்தா விளக்கு '( புதுகோட்டை அருகே திருவேங்கை வாசல் கோயில் ;கிபி 853).
பாண்டிய வேந்தன் தனக்கு ஒப்பான மழவ மன்னன் மகள் ஒருத்தியை மணந்தான் என்றும் அவளுக்கு பிறந்தவன் ஐடிலவர்மன் என்றும் அவனுக்கு பராந்தகன் என்ற பெயரும் உண்டு என்பதைவும் பாண்டிய செப்பேட்டு சுலோகங்கள் (14,17) கூறுகிறது .
விஜயாலய சோழனின் எழுச்சிக்கு காரணமாக இருந்தவர்கள் மழகொங்கத்தை (மழ நாடு ) ஆண்ட வேட்டுவ குலத்தவர்கள் . விஜயாலய சோழன் தஞ்சாவூரை பல்லவ மன்னன் கம்ப வர்மனிடம் இருந்து கைப்பற்றினான் என்று இத் தலூர் செப்பேடு கூறுகிறது . ஆதித்த சோழன் மழகொங்கத்தை (மழ நாடு ) ஆண்ட வேட்டுவ குலத்தவர்கள், கோநாட்டை ஆண்ட வேட்டுவ குலத்தவர்களை (குடுமி வேட்டுவ குலம்,வளவ வேட்டுவ குலம்,மலைய வேட்டுவ குலம்,காச வேட்டுவ குலம் நடுவில் வேட்டுவ குலம்,) மற்றும் சேர கொங்கு நாட்டை (அமராவதி கரை பகுதிகள் ) ஆண்ட வேட்டுவ குலத்தவர்களை கொண்டு கொங்கு நாட்டை ஆண்டு கொண்டு இருந்த கங்கர் மன்னர்களளை (ராசா வேடர் ) வென்று கொங்கு நாட்டை கைப்பற்றினான்.
No comments:
Post a Comment