அண்ணன்மார்- ஓர் ஆய்வு
'வாங்கலான் பாட்டனவன் வாழ்வு சிறுகாற்புலியூர்
தீங்கு செய்த செல்லத்தான் சிற்றப்பன் -ஓங்கு தந்தை
நாமமொழி குன்றனையன் நன்னுநகர் சிற்றலை
தாமரை நாட்சியார் தாய் , என்னும் வெண்பா கிடைத்து இருக்கிறது என்று தி .அ முத்துசாமி கோனார் (கிபி 1858-1944)அவர்கள் எழுதிய கொங்கு நாடு அடைவு இயல் என்னும் நூலில் கூறி உள்ளார் .
கொங்கு வெள்ளாள இனத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில் சண்டை சக்கரவுகள் இருந்ததையும் ,அந்த குடும்பத்தினர் கொங்கு நாட்டில் கிழங்கு நாட்டு (வேட்டமங்கலம் ,நொய்யல் ,மறவாபாளையம்,துக்காச்சி ,வடிஉடையமங்கலம் ,ஆவுடையார் பாறை பகுதிகள் ) திருகாபுலியூர் (சிறுகாற்புலியூர்) என்னும் ஊரை சேர்ந்தவர்கள் என்பதையும் இந்த வெண்பா உறுதிபடுத்துகிறது . தங்காய் என்னும் தங்கை தன் மூத்தோரை அண்ணன்மார் என்றதால் இப்பெயர் வந்தது .
இந்த சண்டை சக்கரவுகள் 60 ஆண்டுகளுக்கு முன் நடந்தது தி .அ முத்துசாமி கோனார் எழுதிய கொங்கு நாடு அடைவு இயல் என்னும் நூலில் கூறி உள்ளார் .ஆக இந்த சண்டை சக்கரவுகள் ஏறக்குறைய கிபி 1870 ஆம் ஆண்டுகளில் நடந்து இருக்க வேண்டும் .நடந்த நிகழ்வுகளை வெண்பாவாக பாடியுள்ளார்கள் .
'கொங்கு நாட்டினராகிய இவர்களை பொன்னிவள நாடு என்று யாரோ ஒருவர் பாடி அச்சிட்டுயுள்ளார்கள் ' என்று தி .அ முத்துசாமி கோனார் எழுதிய கொங்கு நாடு அடைவு இயல் என்னும் நூலில் கூறி உள்ளார்.
வேட்டுவ இனத்தின் மீது வெறுப்பு உணர்வு கொண்ட ஒரு சாதி வெறி பிடித்த வெள்ளாளனாள் பாடி அச்சிட பட்டு இருக்க வேண்டும் .இதனால்தான் 'பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூலுக்கு ஆசிரியர் பெயர் இல்லாமல் அச்சிட பட்டு இருக்கிறது .
கிபி 1934-40 இந்த காலகட்டங்களில் 4855 வரிகள் ,128 பக்கங்களை கொண்டு 'பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூலை அச்சிட பட்டு இருக்க வேண்டும்.
கொங்கு கிழங்கு நாட்டு திருகா புலியூர் என்ற ஊரை சேர்ந்த ஒரு வெள்ளாள குடும்பத்தில் நடந்த சண்டை சக்கரவுகளை ,வேட்டுவ இனத்துக்கும் ,வெள்ளாள இனத்துக்கும் நடந்த சண்டையாக 'பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூலில் கூறப்பட்டு உள்ளது .மேலும் திருகா புலியூர் என்ற ஊரில் உழவு தொழில் செய்து வந்த பொன்னர் ,சங்கர் இவர்கள் பொன்னி வள நாட்டை சேர்ந்தவர்களாகவும்,மன்னர்களாகவும் கூறபடுகிறது .மேலும் வேட்டுவ குலத்தவர்களை கெட்டவர்களாகவும் ,பன்றி வளர்ப்பவர்களாகவும் ,நாய் பிடிப்பவர்களாகவும் ,பெண் பித்தர்களாகவும் ,நாகரிகம் இல்லாதவர்களாகவும் ,மோசமானவர்களாகவும் கூறபடுகிறது.
தமிழ் மண்ணை ஆண்ட வேட்டுவ குலத்தவர்களை இழிவுபடுத்தவும் ,உழவு தொழில் செய்த வெள்ளாளர்களை ஆண்ட பரம்பரையினர் என கூறி கொள்ளவும் 'பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூல் உருவாக்க பட்டு உள்ளது . இந்த நூலை அடிப்படையாக வைத்து அண்ணன்மார் சாமி கதை ,குன்னுடையன் கதை ,தங்காள் கதை என பலநூல்களை எழுதி விட்டு இந்த நூல்கள் ஏட்டு பிரதியில் இருந்து எடுத்து எழுத பட்டதாக பச்சை பொய்யை கூறி இருக்கிறார்கள் . 'வெட்ட வெட்ட தலையும் ' என பொன்னர் ,வேட்டுவருக்கு வரம் கொடுத்ததை உண்மை என மக்களை நம்ப வைப்பதற்கு 'வெட்ட வெட்ட தலைக்கும் வேட்டுவ படை ' எனும் போலிபழமொழிகளை மக்கள் மத்தியில் பரப்பி விட்டு இருக்கிறார்கள் .
அண்ணன்மார் (பெரியண்ணன் -சின்னணன் ) கடவுள்களோடு ,அண்ணன்மார்(பொன்னர் -சங்கர் ) களை தொடர்பு படுத்தி வுள்ளர்கள் .
மணப்பாறை பகுதியில் இருந்த அண்ணன்மார் (பெரியண்ணன் -சின்னணன் ) கடவுள்களை முத்தரையர் இனத்தினர் ஆரம்பத்தில் வழிபட்டு வந்தார்கள் .காலபோக்கில் இறந்த முத்தரையர் இனத்தை சேர்ந்த முன்னோர்களுக்கு அந்த கோயில்களில் முத்தரையர் இனத்தினர் கற்களை நட்டு வழிபட்டு வந்தார்கள். வெள்ளாளர்கள் உருவாக்கிய கட்டு கதையை (பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ) அண்ணன்மார் (பெரியண்ணன் -சின்னணன் ) கடவுள்களோடு தொடர்பு படுத்திய பிறகு முத்தரையர் இனத்தை சேர்ந்த கற்களை பொன்னர் -சங்கர் உடைய கற்களாக எழுதி கொண்டார்கள் .
அண்ணன்மார் (பெரியண்ணன் -சின்னணன் ) கதை :
அண்ணன்மார்கள் (பெரியண்ணன் -சின்னணன் ) பர்வத ராஜா குலத்தை சேர்ந்தவர்கள் .இவர்களுடைய தங்கை பெயர் லோக்கமதா .பல்லவர்கள் உதவியோடு ஜைனர்கள் பர்வத ராஜா குலத்திற்கு தீங்கு செய்து வந்தார்கள் .இதனால் அண்ணன்மார்கள் (பெரியண்ணன் -சின்னணன் ) தீங்கு செய்தவர்களை அளிப்பார்கள் .பிறகு பாண்டிய நாட்டில் விசர் என்னுமிடத்தில் அண்ணன்மார்கள் (பெரியண்ணன் -சின்னணன் ) மற்றும் லோக்கமதா இவர்களுக்கு சிலை வைத்து வழிபட்டதை பற்றி கூறுகிறது என்று மு அருணாசலம் தனது நாட்டுபுறபாடல் எனும் நூலில் (கிபி 1976) கூறியுள்ளார் .
வசந்தபுரம் ,கவுண்டம்பாளையம் ,எழுமாத்தூர் போன்ற இடங்களில் உள்ள அண்ணன்மார்கள் (பெரியண்ணன் -சின்னணன் ) கடவுள்களை வேட்டுவ இனத்தினர் வழிபட்டு வருகிறார்கள் .
தீரன் சின்னமலை வரலாறு:
கிபி 1968 யில் புலவர் குழந்தை என்பவர்
தீரன் சின்னமலை என்ற கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கி ஆங்கி லேயர்களை
எதிர்த்து போர் செய்தார் என்று போலி வரலாறுகளை உருவாக்கினர். பிறகு வந்த
வெள்ளாள வரலாற்று ஆசிரியர்கள் தீரன் சின்னமலை என்பவர் கோட்டையை கட்டி
ஆண்டர் என்று எழுதினார்கள் .
காவல வேட்டுவ இனத்தை சேர்ந்த பட்டாலி
வேட்டுவ குலத்தை சேர்ந்த அனுமாந்த கவுண்டர் என்பவர் பட்டாலி ஊரில் தனக்கு
சொந்தமான நிலங்களை ,வெள்ளாள இனத்தை சேர்ந்த தீர்த்தகிரி சக்கரை கவுண்டர்
என்பவருக்கு விற்றதை பற்றி தீர்த்தகிரி
சக்கரை பட்டயம் கூறுகிறது .ஆனால் புலவர் ராசு என்பவர் இந்த நிலத்தை
ஆயுதங்கள் தயாரிக்கவும் ,வெள்ளையர்களை எதிர்த்து போரிட வீரர்களுக்கு
பயிற்சி அளிக்க இந்த நிலத்தை விலைக்கு வாங்கினார் என்று ஒரு பச்சை பொய்யை
உருவாக்கினர் .மேலும் தீர்த்தகிரி சக்கரை கவுண்டர் என்பவர் தீரன்
சின்னமலையின் வம்சாவளியினர் என்று ஒரு பச்சை பொய்யை உருவாக்கினர்.
வெள்ளாள அரசியல்வாதிகள் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி தீரன் சின்னமலையை
விடுதலை போராட்டகாரர் என்று கூறி தமிழ் மண்ணில் சிலையை வைத்து
கொண்டார்கள்.
காலிங்கராயன் அணை -ஓர் ஆய்வு
கிபி 19 ,20 ஆம் நூற்றாண்டுகளில்
ஒவ்வொரு சாதியும் தங்கள் தங்களுக்கு உயர்வு தேட புராணக்கதைகளையும்,
இலக்கியங்களையும் படைத்தனர்.இதன்படி கோனியம்மன் கோயிலை கட்டியவர்கள்
கொங்கு வெள்ளாளர்கள் என்றும் கோவை நகரத்தை உருவாக்கியவர்கள் கொங்கு
வெள்ளாளர்கள் என்றும் பவானி ஆற்றில் அணைகட்டி ,கால்வாய் வெட்டியது கொங்கு
வெள்ளாளர்கள் என்றும் கூறி கொண்டதை கிபி 1801 இல் புக்கானன் என்பவர்
சேகரித்த வாய்வழி செய்தி மூலம் அறியலாம் .
காலிங்கராயன் வம்சவழியினர்
(கொங்கு வெள்ளாள கவுண்டர் ) கிபி 1801 இல் புக்கானன் என்பவர் சேகரித்த
வாய்வழி செய்தியை படித்து இருக்கிறார்கள் .பிறகு கிபி 1808 இல் மெக்கென்சி
தொகுத்த காலிங்கராயன் வம்சவழியினர் செய்தியில் பவானி ஆற்றில் அணைகட்டி
,கால்வாய் வெட்டியது காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாளர்கள்)
என்று தற்புகழ்ச்சிக்காக கூறி இருக்கிறார்கள் .
காலிங்கராயன்
வம்சவழியினர்(டி -3044) செய்தியில் தற்புகழ்ச்சிகள்,கற்பனை புனையுகள்
,உண்மைகள் என கலந்து இருக்கிறது.(சொளியண்டான் வம்சவழியினர்(கொங்கு
வெள்ளாளர்கள்,டி -2968) ஒருவர் மராட்டிய மன்னன் சிவாஜி யோட போர் செய்து
இறந்தான் என்று கூறி இருப்பது தற்புகழ்ச்சி.இது போல தற்புகழ்ச்சிக்காக
காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாளர்கள்) கூறி இருக்கிறார்கள்
).போலி பழம் பாடல்களையும் உருவாக்கி வைத்து இருக்கிறார்கள் .
புலவர் செ.இராசு என்பவர் போலி பட்டயத்தையும்,சாதி பட்டயத்தையும் இணைத்து
காலிங்கராயன் அணை கட்டிய பட்டயம் என பெயர் வைத்து கொண்டார் .
'வாணியை
அணையாக கட்டி ',அணை கட்டி ' போன்ற வார்த்தைகள் திருச்சி திருவானைகாவல்
பாசூர் மட செப்பேட்டில் கிடையாது .பவானி ஆற்றில் அணைகட்டி ,கால்வாய்
வெட்டியது காலிங்கராயன் வம்சவழியினர் என்று மக்களை நம்ப வைப்பதற்காக புலவர்
செ.இராசு என்பவர் இந்த வார்த்தைகள் செப்பேட்டில் இருப்பதாக பச்சை பொய்யை
எழுதி கொண்டார் .
பூந்துறை நாட்டில் உழவு தொழில் செய்து கொண்டு வந்த
காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாள கவுண்டர் ) ,போர் தொழில் செய்து
கொண்டு வந்த வெள்ளை வேட்டுவ குலத்தவர்களோடு போர் செய்து வெற்றி பெற்று
பவானி ஆற்றில் அணை கட்டி ,கால்வாய் வெட்டினார் என்று கூறுவது
தற்புகழ்ச்சி.
காஞ்சிகூவல் நாடு ,பூந்துறை நாடு ,அரைய நாடு ,கிழங்கு
நாடு இந்த நான்கு நாடுகளில் கால்வாய் வெட்டப்பட்டு இருக்கிறது .குடுமி
வேட்டுவ மன்னர் (கொங்கு சோழர் ),பாண்டிய வேட்டுவ மன்னர்(கொங்கு பாண்டியர் )
,போசாளர் (கன்னடர் ) ஆட்சியில் இந்த நான்கு நாடுகளில் வேட்டுவ இனத்தை
(பனைய வேட்டுவ குலத்தினர் ,மணிய வேட்டுவ குலத்தினர் ,கரைய வேட்டுவ
குலத்தினர் ,மூல வேட்டுவ குலத்தினர் ,கிழங்கு வேட்டுவ குலத்தினர் ) சேர்ந்த
ஊராளிகள் இந்த பகுதிகளை ஆண்டார்கள் என்பதை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது
.வெள்ளை வேட்டுவ குலத்தினர் வடபரிசார நாட்டை ஆண்டார்கள் என்பதற்கும்
,வெள்ளோடு பகுதியில் வாழ்ந்தார்கள் என்பதை கல்வெட்டுகள்
உறுதிபடுத்துகிறது.வெட்டப்பட்ட கால்வாய் மன்னனுடைய பெயரில் இருக்க வேண்டும்
.
'1913 -ஆம் வருஷம் ஊற்றுக்குழியின் மானேஜர் ஸ்மான் ஜே .எம்
துரைசாமி பிள்ளை இங்கிலீஷில் எழுதி அச்சிட்டுள்ள ஜமீன் சரித்திர
புத்தகத்திலும் அதை அனுசரித்த கோயமுத்தூர் ஜில்லா மானியுள் முதலிய ஆங்கில
சரித்திரங்களிலும்
காலிங்கராயன் என்ற பெயர் காரணமும் அணை கட்டு
விவரமும் இதற்கு முரண் படுகிறது.அவைகள் எந்த ஆதாரத்தின் மேல் எழுதியது
என்று விளங்கவில்லை '
(கொங்கு நாடு அடைவு இயல் ,தி.அ முத்துசாமி கோனார் )
காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாள கவுண்டர் ) கிபி 1808 இல்
மெக்கென்சி சேகரித்த செய்தியில் ஒரு வரலாறுகளை கூறி இருக்கிறார்கள் .கி பி
1913 -ஆம் வருஷம் ஊற்றுக்குழியின் மானேஜர் ஸ்மான் ஜே .எம் துரைசாமி பிள்ளை
இங்கிலீஷில் எழுதி அச்சிட்டுள்ள ஜமீன் சரித்திர புத்தகத்தில் ஒரு வரலாறுகளை
கூறி இருக்கிறார்கள் .ஆக காலிங்கராயன் வம்சவழியினர் எந்த ஆதாரமும்
இல்லாமல் கூறி கொண்டது உறுதிப்படுகிறது .
பூந்துறை நாட்டில் உழவு
தொழில் செய்து கொண்டு வந்த காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாள
கவுண்டர் ) பவானி ஆற்றில் அணை கட்டி ,கால்வாய் வெட்டினார் என்று கூறுவது
தற்புகழ்ச்சி என்பது உறுதி படுகிறது.
கொங்கு வெள்ளாளர்கள் ஆண்ட பரம்பரை என தம்ப்பட்டம் அடித்து கொள்வதற்காக உருவாக்க பட்ட போலி பட்டயங்கள்:
மரம் பிடுங்கி பட்டக்காரர் செப்பேடு ,நீலம்பூர் காணி செப்பேடு,ஈஞ்ச குல
காணி பட்டயம் ,தென்கரை நாட்டு பட்டயம் ,காலிங்கராயன் அணை பட்டயம்,மாந்திரம்
சேரல் மெய்கீர்த்தி ,கன்னிவாடி கண்ணகுல பட்டயம்.
ஒவ்வொரு
சாதியும் தங்கள் தங்களுக்கு உயர்வு தேட புராணக்கதைகளையும்,
இலக்கியங்களையும் படைத்தனர்.இதன்படி கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் தங்கள்
சாதி உயர்ந்த சாதி மற்றும் ஆண்ட பரம்பரையினர் என கூற முற்பட்டன . கிபி 19
மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் தங்கள் கூற்றுக்கு ஆதரவாக போலி
நாட்டுபுறபாடல் (பொன்னர் -சங்கர் ),போலி தீரன் சின்னமலை வரலாறு ,போலி
பழந்தமிழ் பாடல்கள் மற்றும் போலி பட்டயங்களை உருவாக்கி கொண்டார்கள் .