Saturday, 10 August 2019

வேந்த வேட்டுவ குலத்தை சேர்ந்தவரின் புலிக்குத்தி நடுகல்


                                                    1.வேந்த வேட்டுவ குலத்தை சேர்ந்தவரின் புலிக்குத்தி நடுகல்












இடம் :கோவை ,மேட்டுப்பாளையம் வட்டம் ,காரமடை குரும்பப்பாளையம் ஊரில் வெங்கிடுசாமி  நாய்க்கர் தோட்டத்தில் உள்ள  புலிக்குத்தி நடுகல் 
காலம் : கிபி  1516

                                                               கல்வெட்டு மூலம் :
 வரி 1    ஸ்வஸ்திஸ்ரீமந் மஹாமண்டலேஸ்வர

வரி 2    ன் வீரகிருஷ்ணராயற்குச் செல்லாநின்ற

வரி 3    தாது வருஷம் ஆவணியில் வடபரிசார நா

வரி 4    ட்டில் வெள்ளாதியில் வெள்ளிர  மன வே 

வரி 5    ந்தர்களில் நயினார் மாலை ஆண்டா

வரி 6    னேன்

கல்வெட்டு விளக்கம் :

'வேந்தர்களின்' என்ற சொல் வேந்த வேட்டுவ குலத்தை குறிக்கும் .'நயினார்' என்ற சொல் வெள்ளாதி   ஊரை சேர்ந்த வேந்த குலத்தை சேர்ந்த ஒருவனின் இயற்பெயர் ஆகும் .'வெள்ளிர மன' என்ற சொற்கள்   நயினார் என்பவனின் அடைமொழி சொற்களாகும் .

சிற்பத்தின் கீழே ஆறுவரிகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. வீரனின் தலையில் தலைப்பாகை, காதுகளில் காதணிகள், கழுத்திலும் அணிகள், கைகளில் தோள்வளை காணப்படுகிறது.வீரனின் இடைப்பகுதியில் இடைக்கச்சி,இடைக்கச்சில் குறுவாள் காணப்படுகிறது . கால்களில் கழல்கள் காணப்படுகிறது. வீரன் தன் வலக்கையால் நீண்ட வாளைப் புலியின் நடுமார்பில் பாய்ச்சிய நிலையில் வாள் புலியின் உடலைக் குத்தி உடலின் மறுபுறம் வெளிவந்த தோற்றம் காணப்படுகிறது.


குறிப்பு : 
 கோயமுத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி -2 ,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை தொடர் எண்  936/2003 என்ற எண்ணில் நான்கு மற்றும் ஐந்தாவது வரியில் எழுத்து பிழைகள் இருக்கிறது .

                                    2.வெள்ளை  வேட்டுவ குலத்தை சேர்ந்த புலிக்குத்தி நடுகல்







இடம் :ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்ப்பாடி ஊர்
காலம் : கிபி 1544

செய்தி :சிற்பத்தின் மேல்,இடது  மற்றும் கீழ் பகுதிகளில் எழுத்துக்கள் பொறிக்கபட்டுள்ளன.வீரனின் தலையில் தலைபாகை,கழுத்தில் அணிகள் ,கைகளில் தோல்வளை  காணப்படுகிறது .வீரனின் இடைப்பகுதியில் இடைக்கச்சி  காணப்படுகிறது.வீரன் தன் வலது கையால் நீண்ட வாளைப் புலியின் குரல்வளையில் பாய்ச்சிய நிலையில் வாள் புலியின் உடலின்  மறுபுறம் வெளிவந்த தோற்றமும்,வீரன் தன் இடது கையால் நீண்ட வாளை புலியின் வயிறு பகுதில் குத்தி வாள் உடலின்  மறுபுறம் வெளிவந்த தோற்றமும் காணப்படுகிறது .மனிதர்கள் மற்றும் ஆடு ,மாடுகளை உண்பதற்கு ஊருக்கும் புகுந்த புலியோடு வெள்ளை வேட்டுவ குடியை சேர்ந்த பெரமாண்டன் என்பவன்  சண்டையிட்டு இறந்தற்காக எடுக்க பட்ட நடுகல் .
மனிதர்கள் மற்றும் ஆடுமாடுகளை பகைவர்கள் மற்றும்  புலிகளிடம் இருந்து பாதுகாப்பது  மன்னர்களின் கடைமையாகும் என்பதை அகநானூறு -48 செய்யுள் மூலம் அறியலாம் .

                                                                               கல்வெட்டு
       1   குரோதி வருஷம் ஆடி மாதம் 15
      2    வாய்ப்  பா
      3    டி  காணி
     4     யாளன்
      5    கருமன்
     6     மகன்
     7    பெரமா
     8     ண்ட
      9    ன்
    10    வெள்ளை வே
    11     ட்டுவன்

                       
                                 

                                 3.பாண்டிய வேட்டுவ குலத்தை சேர்ந்த புலிக்குத்தி நடுகல்







இடம் :ஈரோடு மாவட்டம் ,கவுந்தப்பாடி,பெருந்தலைவூர் பொன்னாச்சி அம்மன் கோயில் .

காலம் : கிபி  1565

செய்தி :சிற்பத்தின் மேல்,இடது  மற்றும் கீழ் பகுதிகளில் எழுத்துக்கள் பொறிக்கபட்டுள்ளன.வீரனின் தலையில் தலைபாகை,கழுத்தில் அணிகள் ,கைகளில் தோல்வளை  காணப்படுகிறது .வீரனின் இடைப்பகுதியில் இடைக்கச்சி இடைக்கச்சியில் குறுவாள் காணப்படுகிறது.வீரன் தன் வலது கையால் நீண்ட வாளைப் புலியின் நடுமார்பில் பாய்ச்சிய நிலையில் வாள் புலியின் மார்பை குத்தி மார்பின் மறுபுறம் வெளிவந்த தோற்றம் காணப்படுகிறது .வீரன் புலியுடன் சண்டை யிட்டு இறந்த பிறகு அவ்வீரனின் மனைவியும் இறந்ததால் அவ்வீரனுக்கு அருகில் அவனுடைய மனைவியின் சிற்பமும் செதுக்கபட்டுள்ளது.மனிதர்கள் மற்றும் ஆடு ,மாடுகளை உண்பதற்கு ஊருக்கும் புகுந்த புலியோடு பாண்டி வேட்டுவ குடியை சேர்ந்த திம்மயன் என்பவன்  சண்டையிட்டு இறந்தற்காக எடுக்க பட்ட நடுகல் .

                                                                                          



                                             கல்வெட்டு மூலம்:
         
        1   துந்துமி வருஷம் பங்(குனி ) மாதம் 3
         2   ணண தபிவ  மன் கலத்தில்
         3   தொண்ட சீமான்
         4   திம்மயன்
        5   புலியை னாத கொன்ற
        6   பாண்டி வே
        7   ட்டுவன்





2 comments:

  1. வணக்கம். மூர்த்தி. வேட்டுவர் படை. நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. கொங்கு வேட்டுவக் கவுண்டர்

    ReplyDelete