வீரர்கள் பாசறை அமைத்தல்:
கான்யாறு தழீஇய அகல்நெடும் புறவில்,
சேண்நாறு பிடவமொடு பைம்புதல் எருக்கி,
வேட்டுப்புழை அருப்பம் மாட்டி, காட்ட
இடுமுட் புரிசை ஏமுற வளைஇ,
படுநீர்ப் புணரியின் பரந்த பாடி (முல்லைப் பாட்டு 24 - 28)
அருஞ்சொற்பொருள்: 24. கான்யாறு = காட்டாறு; தழீஇய = சூழ்ந்த; அகல் நெடும் = அகன்று
நீண்ட; புறவு = முல்லைநிலக் காடு; 25. சேண் = தொலைவு; நாறு = மணம்வீசும்; பிடவமொடு = முல்லை
நிலத்தில் வளரும் பிடவச் செடிகளோடு; பைம் = பசுமையான; புதல் = புதர்; எருக்கி = அழித்து; 26. வேட்டு = வேட்டுவர்; புழை = சிறுவாயில்; அருப்பம் = குறும்பு; மாட்டி = அழித்து; காட்ட = காட்டிலுள்ள; 27. இடுமுள் = முள்ளால் இடப்பட்ட; புரிசை = மதில்; ஏமுற = காவலாக; வளைஇ = வளைந்த; 28. படுநீர் = ஒலிக்கும் நீர்; புணரி = கடல்; பரந்த = அகன்ற; பாடி = பாசறை.
உரை: காட்டாறு சூழ்ந்த அகன்ற நீண்ட முல்லைநிலக்
காட்டில், நெடுந்தொலைவிற்கு மணம் வீசும் பிடவச்
செடிகளையும், பசுமையான புதர்களையும்
வெட்டி, வேட்டுவரின் சிறு வாயில் அமைந்த குறும்புகளையும்
அழித்து, காவலுக்காகக் காட்டிலுள்ள முள்ளால் மதிலை வளைத்துக் கட்டிய இடத்தில், ஒலிக்கின்ற நீரையுடைய கடல் போல் பரந்த பாசறையை வீரர்கள்
அமைத்தனர்.
புறநானூறு 324
வெருக்குவிடை அன்ன வெருள்நோக்குக் கயந்தலைப்
புள்ளூன் தின்ற புலவுநாறு கயவாய்
வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்
சிறியிலை உடையின் சுரையுடை வான்முள்
ஊக நுண்கோல் செறித்த அம்பின்
வலாஅர் வல்வில் குலாவரக் கோலிப்
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
புன்புலம் தழீஇய அங்குடிச் சீறூர்க்
குமிழ்உண் வெள்ளைப் மறுவாய் பெயர்த்த
வெண்காழ் தாய வன்காற் பந்தர்
இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப்
பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை
வலம்படு தானை வேந்தற்கு
உலந்துழி உலக்கும் நெஞ்சறி துணையே.
பாடியவர்: ஆலத்தூர் கிழார் .
பாடலின் பின்னணி: ஒருகால், ஒரு சிற்றூரின் தலைவன் ஒருவன் போர்களில் வெற்றிபெற்றுப்
புகழுடன் விளங்கினான். அவன் பெரும்புகழுக்குரியவனாக இருந்தாலும் தன்னை நாடிவந்த
பாணர்களுடன் மிகவும் எளிமையாகப் பழகுபவன். அவன் வீரத்தையும், பாணர்களோடு பழகும் எளிமையையும், அவன் அரசனுக்கு உறுதுணையாக இருப்பதையும் இப்பாடலில் புலவர்
ஆலத்தூர் கிழார் புகழ்ந்து பாடுகிறார்.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப்
பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை : வல்லாண் முல்லை. ஒருவீரனுடைய வீட்டையும்
ஊரையும் இயல்பினையும் சொல்லி அவனுடைய புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.
அருஞ்சொற்பொருள்: 1. வெருகு = காட்டுப் பூனை; விடை = எருது; வெருள் = அச்சம்; கயந்தலை = பெரிய தலை. 2. கயவாய் = பெரிய வாய். 3. வெள்வாய் = வெளுத்த வாய்; வீழ்தல் = விரும்புதல்; மகாஅர் = இளைஞர்கள். 4. சுரை = துளை; வால் = வெண்மை. 5. ஊகம் = ஒருவகைப் புல். 6. வலாஅர் = வளார்
(இளங்கொம்பு); குலவு = வளைவு; கோலல் = வளைத்தல். 7. கருப்பை = எலி. 8. புன்புலம் = வலியநிலம்; தழீஇய = தழுவிய; அம் = அழகு. 9. குமிழ் = ஒருவகைச் செடி; வெள்ளை – வெள்ளாட்டைக் குறிக்கிறது; மறுவாய் = பின்வாய் (மலவாய்) . 10. காழ் = விதை, கொட்டை, பிழுக்கை; தாய = பரந்து கிடக்கின்ற; வன்கால் = வலியகால். 11. பொத்துதல் = தீ மூட்டுதல். 13. வலம் = வலி; படுதல் = தோன்றல்; வலம்படு தானை = வலிமையான படை. 14. உலத்தல் = கெடுதல்; உலந்துழி = கேடுவந்த பொழுது.15. வேட்டுவர் =வேட்டுவ குடியினர்.
கொண்டு கூட்டு: சீறூர் நெடுந்தகை, வேந்தற்கு நெஞ்சறிதுணை.
உரை: இவ்வூரிலுள்ள வேட்டுவர்களின் சிறுவர்கள், ஆண் காட்டுப் பூனையின் பார்வை போன்ற அச்சம் தரும்
பார்வையையும், பெரிய தலையையும், பறவைகளின் ஊனைத் தின்பதால் புலால் நாற்றம் வீசும் பெரிய, வெளுத்த வாயையும் உடையவர்கள். அவர்கள் ஒருவரை ஒருவர்
விரும்புபவர்கள். அவர்கள் சிறிய இலையைக்கொண்ட உடைமரத்தின் துளையமைந்த வெண்ணிற
முள்ளை, ஊகம் புல்லின் சிறிய தண்டில் செருகி, வளாரால் செய்யப்பட்ட வலியவில்லில் வைத்து வளைத்து, பருத்தி வேலியின் அடியில் தங்கியிருக்கும் எலியைக்
குறிபார்த்து அம்பை எய்வர். இவ்வூர்அத்தகைய புன்செய் நிலம் சூழ்ந்த அழகிய குடிகளை
உடைய சிறிய ஊர். இவ்வூரின் பெருமைக்குரிய தலைவன்(வேட்டுவன்), குமிழம் பழத்தை உண்ணும்
வெள்ளாடுகள் இட்ட வெண்ணிறமுள்ள பிழுக்கைகள் பரந்து கிடக்கின்ற, வலிய தூண்கள் உள்ள பந்தலின்கீழ், இடையன் கொளுத்திய சிறிய தீயின் வெளிச்சத்தில், பாணர்களுடன் பழகுபவன். வெற்றி பயக்கும் படையையுடைய வேந்தன்
துன்பப்படும்பொழுது, இவ்வூர்த் தலைவனும்
அவனோடு சேர்ந்து துன்பப்படுபவன். அவன் வேந்தனுக்கு உணர்வால் ஒத்த உயிர்த் துணைவன்.
சிறப்புக் குறிப்பு: ’வெள்வாய்’ என்பதற்கு, ஒளிவு மறைவின்றிப் பேசுபவர்கள் என்று பொருள். புகழும்
வீரமும் பொருந்திய குடிகள் வாழ்வதால் அவ்வூரை ‘அங்குடி” என்று புலவர் புகழ்கிறார்.
’நாணுடை நெடுந்தகை’ என்பது வில்லில் இருக்கும் கயிறை வைத்திருக்கும் தலைவன்,. ‘உலந்துழி உலக்கும் நெஞ்சறி துணை’ என்பது அரசனுக்குத் துன்பம் வந்தபொழுது, அதை உணர்ந்து தன் உயிரையும் கொடுக்கும் உண்மை நண்பன் என்ற
பொருளில் கூறப்பட்டிருக்கிறது.
வேட்டுவ குடியை சேர்ந்த ஊராளிகள்(ஊரை
ஆள்பவர்கள் ) வேந்து விடு தொழிலை செய்ந்தவர்கள் என்பதை இப்பாடல் கூறுகிறது
.வேட்டுவ குடியை சேர்ந்த ஊராளிகள்(ஊரை ஆள்பவர்கள் ) வேந்து விடு தொழிலை
செய்ந்தவர்கள் என்பதை கல்வெட்டுகளும் உறுதிப்படுத்துகிறது .
வேட்டுவ இனக் குழு தலைவனின் (வேள்) பங்காளிகள் ஊராளிகளாக (ஊரை ஆள்பவர்கள் )
இருந்தார்கள் .வேட்டுவ குடியை சேர்ந்தவர்களை 'நாண் உடை மறவர் ' (அகம் 67/8, 387/14;மலை 387) , 'நாண் உடை மனத்தர்' (அகம் 231/4) , 'நாண் உடை அரிவை' (அகம் 34/18),நாண் உடை நெடுந்தகை (புறம் 324/12), நாண் உடை மாக்கள் (புறம் 293/3 ) என்றழைக்கப்பட்டனர் .
நாண் என்ற சொல் வில்லில் இருக்கும் கயிறை
குறிக்கும்.( புறம் 369/8).
புறநானூறு 320
முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்
பந்தர் வேண்டாப் பலாத்தூங்கு நீழல்
கைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்
பார்வை மடப்பிணை தழீஇப் பிறிதோர்
தீர்தொழில் தனிக்கலை திளைத்துவிளை யாட
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சிக், கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்
இல்வழங் காமையின் கல்லென ஒலித்து
மான்அதள் பெய்த உணங்குதினை வல்சி
கானக் கோழியொடு இதல்கவர்ந்து உண்டென
ஆர நெருப்பின் ஆரல் நாறத்
தடிவார்ந்து இட்ட முழுவள் ளூரம்
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஇனிது அருந்தித்
தங்கினை சென்மோ, பாண! தங்காது
வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே.
பாடியவர்: வீரை வெளியனார் (320). இவரது இயற்பெயர் வெளியன். இவர் வீரை என்னும் ஊரைச் சார்ந்தவராதலால்
வீரை வெளியனார் என்று அழைக்கப்பட்டார். வீரை என்னும் ஊர் திருச்சி மாவட்டத்தில் இருந்தது .
பாடலின் பின்னணி: இப்பாடலில், ஒரு வேட்டுவனின் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றையும், அவ்வேட்டுவனின் மனைவியின் விருந்தோம்பும் திறத்தையும்
புலவர் வீரை வெளியனார் வெகு அழகாகச் சித்திரிக்கிறார்.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப்
பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை : வல்லாண் முல்லை. ஒருவீரனுடைய வீட்டையும், ஊரையும், இயல்பினையும் சொல்லி
அவனுடைய புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.
அருஞ்சொற்பொருள்: 1. முன்றில் = முற்றம்; முஞ்ஞை = முன்னைக் கொடி; முசுண்டை = ஒருவகைக் கொடி; பம்புதல் = செறிதல் (அடர்த்தியாக இருத்தல்). 2. பந்தர் = பந்தல்; தூங்கல் = தாழ்தல், தணிதல். 3. கைம்மான் = யானை; கனை = மிகுதி; மடிதல் = தலைசாய்தல், வாடுதல். 4. பார்வை = கவனம், மயக்கு; மடம் = இளமை; பிணை = பெண்மான்; மடப்பிணை = இளம் பெண்மான்; தழீஇ = தழுவி. 5. தீர்தல் = ஒழிதல், நீங்கல்; கலை = ஆண்மான்; திளைத்தல் = மகிழ்தல், அனுபவித்தல். 8. தீர்தல் = விலகி
ஓடிவிடல். 9. கல் – ஒலிக் குறிப்பு. 10. அதள் = தோல்; உணங்க = உலர்ந்த; வல்சி = அரிசி.11. கானம் = காடு; இதல் = காடை, கெளதாரி. 12. ஆரம் = சந்தன மரம்; ஆரல் = ஒருவகை மீன். 13. தடி = வெட்டு; வள்ளூரம் = தசை. 14. இரு = பெரிய; ஒக்கல் = சுற்றம். 15. தங்காது = குறையாது. 16. விழு = சிறந்த; கூழ் = பொன். 17. அருகாது = குறையாது. 18. உரை = புகழ்; சால் = நிறைவு; ஓம்புதல் = பாதுகாத்தல்.
கொண்டு கூட்டு: ஊர் தங்கினை; சென்மோ, பாண எனக் கூட்டுக.
உரை: யானை வேட்டுவ குலத்தை சேர்ந்த ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடியும்
முசுண்டைக் கொடியும் அடர்த்தியாகப் படர்ந்து இருந்ததால் அங்குப் பந்தல்
தேவையில்லாமல் நிழல் மிகுதியாக இருந்தது. பலாமரத்திலிருந்து பலாப்பழங்கள் அங்கே
தொங்கிக்கொண்டிருந்தன. அந்த முற்றத்தில், அவன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். மான்களைப் பிடிப்பதற்காகப் பயிற்சி
அளிக்கப்பட்ட இளம்பெண்மான் (பார்வை மான்) ஒன்றை, வேறு தொழில் எதுவும் இல்லாத ஆண்மான் ஒன்று தழுவிப் புணர்ந்து மகிழ்ச்சியோடு
விளையாடிக்கொண்டிருந்தது. கணவனைக் காண வந்த வேட்டுவனின் மனைவி, மான்கள் புணர்ச்சி இன்பத்தைஅனுபவிப்பதையும், கணவன் மெய்மறந்து உறங்குவதையும் கண்டாள். தான் ஏதாவது
ஒலியெழுப்பினால், கணவன் விழித்துக்கொள்வான்
என்றும் மான்களின் புனர்ச்சி இன்பம் தடைப்பட்டு ஆண்மான் பெண்மானை விட்டு விலகி
ஓடிவிடும் என்றும் எண்ணி அஞ்சி, வீட்டில் நடமாடாமல் ஒரு
பக்கமாக, ஒலி யாதும் எழுப்பாமல் ஒதுங்கி இருந்தாள்.
அங்கு, பாணன் ஒருவன் தன் சுற்றத்துடன் வந்தான். முற்றத்தில் மான்தோலில்
உலர்ந்துகொண்டிருந்த தினை அரிசியைக் காட்டுக் கோழி, காடை, கெளதாரி போன்ற பறவைகள் ஆரவாரத்துடன், கவர்ந்து தின்று கொண்டிருந்தன. அவ்வேட்டுவனின் மனைவி, அவற்றைப் பிடித்து, சந்தனக் கட்டையால் மூட்டிய தீயில் சுட்டுத், துண்டு துண்டாக்கி, அறுத்த இறைச்சியை ஆரல்
மீனின் மணம் கமழச் சமைத்தாள். பின்னர், பாணனை நோக்கி, “இவ்வூரைப் பாதுக்காக்கும்
எம் தலைவன்(வேட்டுவன்), வேந்தன் தனக்குத் தரும் சிறப்பான பெருஞ்செல்வத்தை என்றும் தன்பால் வரும்
பரிசிலர்க்குக் குறையாமல் கொடுக்கும் வள்ளல் தன்மையையும் புகழையும் உடையவன்.
பாணனே! தாங்கள் இங்கே உங்கள் பெரிய சுற்றத்துடன் நான் சமைத்த உணவை இனிதே உண்டு, தங்கிச் செல்க” என்று கூறுகிறாள்.
சிறப்புக் குறிப்பு: வேட்டுவ குடியை சேர்ந்த
ஊராளிகள்(ஊரை ஆள்பவர்கள் ) வேந்து விடு தொழிலை செய்ந்தவர்கள் என்பதை இப்பாடல்
கூறுகிறது .வேட்டுவ குடியை சேர்ந்த ஊராளிகள்(ஊரை ஆள்பவர்கள் ) வேந்து விடு தொழிலை செய்ந்தவர்கள்
என்பதை கல்வெட்டுகளும் உறுதிப்படுத்துகிறது .
வேட்டுவ இனக் குழு தலைவனின் (வேள்) பங்காளிகள் ஊராளிகளாக (ஊரை ஆள்பவர்கள் )
இருந்தார்கள் .
புறநானூறு 333
நீருள் பட்ட மாரிப் பேருறை
மொக்குள் அன்ன பொகுட்டுவிழிக் கண்ண
கரும்பிடர்த் தலைய பெருஞ்செவிக் குறுமுயல்
உள்ளூர்க் குறும்புதல் துள்ளுவன உகளும்
தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின்
உண்கென உணரா உயவிற்று ஆயினும்
தங்கினிர் சென்மோ புலவீர்! நன்றும்
சென்றதற் கொண்டு மனையோள் விரும்பி
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தெனக்
குறித்துமாறு எதிர்ப்பை பெறாஅ மையின்
குரல்உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து
சிறிது புறப்பட்டன்றோ விலள்; தன்னூர்
வேட்டக் குடி தொறுங் கூட்டு .. .. ..
.. .. .. .. உடும்பு செய்
பாணி நெடுந்தேர் வல்லரோடு ஊரா
வம்பணி யானை வேந்துதலை வரினும்
உண்பது மன்னும் அதுவே
பரிசில் மன்னும் குருசில்கொண் டதுவே.
பாடியவர்: பெயர் தெரிந்திலது.
திணை:
வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மூதின் முல்லை. வீரர்க்கல்லாமல்
அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.
அருஞ்சொற்பொருள்: 1. மாரி = மழை; உறை = மழைத்துளி. 2. மொக்குள் = நீர்க் குமிழி; பொகுட்டு = கொட்டை. 3. கரு = கரிய; பிடர் = பிடரி (கழுத்து). 4. புதல் = புதர்; உகளுதல் = தாவுதல், பாய்தல். 5. தொள்ளை = துளை; படர்தல் = செல்லுதல். 6. உயவு = வருத்தம். 7. சென்மோ = செல்க. 8. சென்றதற் கொண்டு =
சென்றதனால். 10. இரவல் மாக்கள் =
இரவலர்கள். 11. குறித்துமாறு எதிர்ப்பு =
குறியெதிர்ப்பு (அளவு குறித்துப் பெற்று, அவ்வளவு திருப்பித் தருவது). 12. குரல் = கதிர்; உணங்கல் = காய்தல். 13. புறப்படன்றோ இலள் = போகுமாறு விடமாட்டாள். 16. பாணி = கை (ஆகுபெயராக கைச்சரட்டைக் குறிக்கிறது); ஊரா = ஊர்ந்து. 17. வம்பு = கச்சு. 19. குரிசில் = தலைவன், அரசன்; தலைவருதல் = தோன்றுதல். 19. மன், உம் – அசைச் சொற்கள்.20. வேட்டக்குடி =வேட்டுவ குலத்தினர். தோறும் =அனைவரும்.
கொண்டு கூட்டு: புலவீர், மன்றத்துத் தங்கினிர் சென்மோ; சென்றதற் கொண்டு மனையோள் விரும்பி, தீர்ந்தென, பெறாமையின், புறப்பட்டன்றோவிலள்; வேந்து தலைவரினும் உண்பது அது; பரிசில் குரிசில் கொண்டது
எனக் கூட்டுக.
உரை: நீரில் விழுந்த மழைத்துளியாலுண்டாகிய
பெரிய குமிழி போலிருக்கும் கொட்டை போன்ற விழிகள் பொருந்திய கண்களையும், கரிய பிடரியையுமுடைய தலையையும், பெரிய காதுகளையுமுடைய சிறுமுயல் உள்ளூரில் உள்ள சிறிய
புதர்களில் துள்ளித் திரியும் வளைகளுடைய மன்றத்திற்குச் சென்றால், அங்குள்ளவர்கள் உண்ணுக என்று விருந்தோம்பல் செய்ய இயலாது
வருந்துவார்கள். அவ்வாறு இருப்பினும், புலவர்களே, நீங்கள் அங்கே தங்கிச்
செல்க. அவ்வீட்டில் இருந்த வரகு, தினை எல்லாம் பரிசிலர்கள்
உண்டதால் தீர்ந்து போயின. அம்மனைக்குரியவள்,
கைம்மாறாக உணவுப்பொருட்களைப் பெற இயலாமையால், கதிரிடத்தே முற்றி உலரி விதைக்காக விடப்பட்டிருக்கும்
தினையை விருப்பத்துடன் உரலிலிட்டு இடித்துச் சமைத்து உணவு அளிப்பாளே அல்லாமல், உணவின்றி உங்களை வறிதே போகவிடமாட்டாள் . தன்னுடைய ஊரை சேர்ந்த வேட்டுவ குலத்தினர் அனைவரும்
அப்படிப்பட்டவர்கள் .…. உடும்பின் தோலால் செய்யப்பட்ட கைச்சரடு அணிந்து நெடிய
தேரைச் செலுத்தும் வீரர்களோடு ஊர்ந்து, கச்சணிந்த யானைகளையுடைய வேந்தர்கள் அவ்வீட்டிற்கு வந்தாலும் அவர்கள் உண்பதும்
அவ்வுணவேயாகும். அவ்வீட்டுத் தலைவன் (வேட்டுவன் ) தன்னிடம் வரும்
பரிசிலர்களுக்கு வழங்கும் பரிசில் அவன் பகைவரை வென்று பெற்ற பொருளேயாகும்.
புறநானூறு 326
ஊர்முது வேலிப் பார்நடை வெருகின்
இருட்பகை வெரீஇய நாகுஇளம் பேடை
உயிர்நடுக் குற்றுப் புலாவிட் டரற்றச்
சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த
பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்துக்
கவிர்ப்பூ நெற்றிச் சேவலின் தணியும்
அருமிளை இருக்கை யதுவே மனைவியும்
வேட்டச் சிறாஅர் சேட்புலம் படராது
படுமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் விதவை
யாணர் நல்லவை பாணரொடு ஒராங்கு
வருவிருந்து அயரும் விருப்பினள்; கிழவனும்
அருஞ்சமம் ததையத் தாக்கிப் பெருஞ்சமத்து
அண்ணல் யானை அணிந்த
பொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே.
பாடியவர்: தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்.
தங்கால் என்பது விருதுநகருக்கு அருகிலுள்ள ஓரூர். இவ்வூர், ‘இராசராச பாண்டிநாட்டு மதுராந்தக வளநாட்டுக் கருநீலக்குடி
நாட்டுத்திருத்தங்கால்’ என்று கல்வெட்டுக்களில் கூறப்பட்டு உள்ளது.
பாடலின் பின்னணி: ஒருகால், புலவர் தங்கால் பொற்கொல்லனார் ஒரு மறக்குடியைச் சார்ந்த
தலைவன் ஒருவனின் வீட்டிற்குச் சென்றார். அங்கே, அத்தலைவனின் ஈகையையும், அவன் மனைவியின்
விருந்தோம்பலையும் இப்பாடலில் வியந்து பாடுகிறார்.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப்
பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை : வல்லாண் முல்லை. ஒருவீரனுடைய வீட்டையும்
ஊரையும் இயல்பினையும் சொல்லி அவனுடைய புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.
அருஞ்சொற்பொருள்: 1. முதுமை = பழமை; பார்நடை = மெத்தென்ற நடை; வெருகு = காட்டுப் பூனை. 2. வெரு = அச்சம்; நாகு = இளமை; பேடை = பெண்பறவை. 3. புலாவிடல் = தொண்டை கிழியக் கூவுதல். 4. சிறை = குச்சி, கிளை; செற்றை = செத்தை; புடைத்தல் = முறத்தில் இட்டுத் தட்டுதல். 6. கவிர் = முள்முருங்கை; நெற்றி = உச்சி. 7. மிளை = காவற்காடு; இருக்கை = இருக்குமிடம். 8. சேண்புலம் = தொலைவிலுள்ள
இடம்; படர்தல் = செல்லுதல். 9. படுதல் = ஒலித்தல்; மடை = வாய்க்கால். 10. விழுக்கு = தசை; விதவை = கூழ். 11. யாணர் = புதுவருவாய். 12. அயர்தல் = செய்தல். 13. சமம் = போர்; ததைதல் = சிதைதல். 15. ஓடை = நெற்றிப்பட்டம்.16. வேட்டச் சிறாஅர் =வேட்டுவ குடியை சேர்ந்த சிறுவர்கள் .
கொண்டு கூட்டு: ஊர் இருக்கையது; மனைவியும் விருப்பினள்; கிழவனும் பரிசிலன் எனக் கூட்டுக.
உரை: ஊரிலுள்ள பழைய வேலியடியில்
பதுங்கியிருக்கும் மெத்தென்ற நடையுடைய காட்டுப்பூனை, இருளில் வந்து இளம் பெட்டைக் கோழியை வருத்துகிறது. அதனால், அக்கோழி உயிர் நடுக்குற்று தொண்டை கிழியக் கத்துகிறது.
குச்சிகளையும், செத்தையையும்
அகற்றுவதற்காக எழுந்த நூல் நூற்கும் பெண்ணின் விளக்கொளியில், முருக்கம் பூப்போன்ற கொண்டையையுடைய சேவற்கோழியைக் கண்டு
பெட்டைக்கோழி அச்சம் தணியும். இவ்வூர் கடத்தற்கரிய காவற்காடுகள் சூழ்ந்த இடத்தில்
உள்ளது. இவ்வூர்த் தலைவனின்(வேட்டுவன்) மனைவி, வேட்டுவ குடியை சேர்ந்த
சிறுவர்கள் நெடுந்தொலைவு செல்லாமல் நீரொலிக்கும் வாய்க்காலில் பிடித்துவந்த
குறுகிய காலையுடைய உடும்பின் தசையைத் தயிரோடு சேர்த்துச் சமைத்த கூழ்போன்ற
உணவையும், புதிதாக வந்த நல்ல உணவுப் பொருட்களையும்
பாணர்களுக்கும் அவர்களோடு வந்த மற்ற விருந்தினர்களுக்கும் கொடுத்து உண்பிக்கும்
விருப்பமுடையவள். இவ்வூர்த் தலைவன், அரிய போர் அழியுமாறு
தாக்கித், தலைமையையுடைய யானைகள் அணிந்திருந்த பொன்னால்
செய்யப்பட்ட நெற்றிப்பட்டம் முதலியவற்றை பெரும்பரிசிலாகப் பாணர்களுக்கும்
மற்றவர்களுக்கும் வழங்குபவன்.
சிறப்புக் குறிப்பு: வேட்டுவ குலத்தினரின்
விருந்தோம்பலை பற்றி இப்பாடல் கூறுகிறது .வேட்டுவ குடியை சேர்ந்த ஊராளிகள்(ஊரை
ஆள்பவர்கள் ) ஊரை உடையவர்களாக இருந்ததை இப்பாடல் கூறுகிறது . வேட்டுவ
குடியை சேர்ந்த ஊராளிகள் ஊரை உடையவர்களாக இருந்ததை கல்வெட்டுகளும்
உறுதிப்படுத்துகிறது . வேட்டுவ குடியை சேர்ந்த ஊராளிகள்(ஊரை ஆள்பவர்கள் ) வேந்து
விடு தொழிலை செய்ந்தவர்கள் என்பதை இப்பாடல் கூறுகிறது .வேட்டுவ குடியை சேர்ந்த
ஊராளிகள்(ஊரை ஆள்பவர்கள் ) வேந்து விடு தொழிலை செய்தவர்கள் என்பதை கல்வெட்டுகளும்
உறுதிப்படுத்துகிறது .
வேட்டுவ இனக் குழு தலைவனின் (வேள்) பங்காளிகள் ஊராளிகளாக (ஊரை ஆள்பவர்கள் )
இருந்தார்கள் .
புறநானூறு 319
பூவற் படுவிற் கூவல் தொடீஇய
செங்கண் சின்னீர் பெய்த சீறில்
முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி
யாங்கஃடு உண்டென அறிதும்; மாசின்று;
படலை முன்றிற் சிறுதினை உணங்கல்
புறவும் இதலும் அறவும் உண்கெனப்
பெய்தற்கு எல்லின்று பொழுதே; அதனால்,
முயல்சுட்ட வாயினும் தருகுவேம்; புகுதந்து
ஈங்குஇருந் தீமோ முதுவாய்ப் பாண!
கொடுங்கோட்டு ஆமான் நடுங்குதலைக் குழவி
புன்றலைச் சிறாஅர் கன்றெனப் பூட்டும்
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்,
வேந்துவிடு தொழிலொடு சென்றனன்; வந்துநின்
பாடினி மாலை யணிய
வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே.
பாடியவர்: ஆலங்குடி வங்கனார் (319). இவரது இயற்பெயர் வங்கன். இவர் சோழ நாட்டிலுள்ள ஆலங்குடி
என்னும் ஊரைச் சார்ந்தவராதலால் ஆலங்குடி வங்கனார் என்று அழைக்கபட்டார்.
பாடலின் பின்னணி: தலைவன் ஒருவன் போருக்குப்
போயிருக்கிறான். அவனுடைய மனைவி வீட்டில் தனியாக இருக்கிறாள். ஒருநாள் இரவு
நேரத்தில் பாணன் ஒருவன் தன் மனைவியோடு அத்தலைவனின் வீட்டிற்கு வருகிறான். இரவு
நேரமாகையால் புறா, காடை, கெளதாரி போன்ற பறவைகளைப் பிடித்துச் சமைப்பதற்கு நேரமில்லை.
அதனால், முன்பே சமைத்து வைத்திருந்த முயல்கறியை உண்டு, தங்கியிருந்து, தலைவன் வந்தவுடன் பரிசு பெற்றுச் செல்லுமாறு தலைவனின் மனைவி பாணனிடம்
கூறுகிறாள்.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப்
பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை : வல்லாண் முல்லை. ஒருவீரனுடைய வீட்டையும், ஊரையும், இயல்பினையும் சொல்லி
அவனுடைய புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.
அருஞ்சொற்பொருள்: 1. பூவல் = செம்மண்; படு = குளம்; கூவல் = பள்ளம்; தொடீஇ = தோண்டி. 2. செங்கண் = சிவந்த இடம்; சின்னீர் = சிறிதளவு நீர்; சீறில் = சிறிய வீடு. 3. முன்றில் = முற்றம்; முதுமை = பழமை. 4. ஆங்கு – அசை நிலை; அஃடு = அகடு (அடிப்பகுதி). 5. உணங்கல் = உலர்தல். 6. புற = புறா; இதல் = காடை, கெளதாரி; அறவும் = முற்றிலும். 7. பெய்தல் = இடுதல், கொடுத்தல்; எல் = மாலை வெளிச்சம். 8. புகு தந்து = புகுந்து; 9. முது = பேரறிவு; வாய் = மொழி, வாக்கு. 10. கொடுங்கோடு = வளைந்த
கொம்பு; ஆமான் = ஆமா = காட்டுப் பசு; குழவி = கன்று. 11. புந்தலை = இளந்தலை. 12. சீறூர் = சிறிய ஊர்; நெருநை = நெருநல் = நேற்று; ஞாங்கர் = முன். 15. வாடாத் தாமரை =
பொற்றாமரை.
கொண்டு கூட்டு: பாண, மாசின்று; பொழுது எல்லின்று; அதனால், தருகுவேம்; புகுதந்து ஈங்கிருந்தீமோ; நெருநை வேந்துவிடு தொழிலொடு சென்றனன்; நாளை வந்து ; அணிய, சூட்டுவன் எனக் கூட்டுக.
உரை: செம்மண் நிலத்தில், பள்ளத்திலே இருக்கும் குளத்திலே தோண்டி எடுத்த சிவந்த
நிறமுடைய நீர், எங்கள் சிறிய வீட்டின்
முற்றத்தில் உள்ள பழைய சாடியின் அடியில் கொஞ்சம் கிடக்கிறது. அது குடிப்பதற்கேற்ற, குற்றமற்ற நல்ல நீர். படல் வேலியோடு கூடிய முற்றத்தில், உலர்ந்த தினையை வீசி, அதை உண்ண வரும் புறா, காடை, கெளதாரி போன்ற பறைவைகளைப் பிடித்துச் சமைத்து உங்களுக்கு
உணவு அளிக்கலாம் என்றால், இப்போது மாலை நேரம்
கழிந்து இரவு வந்துவிட்டது. அதனால், முயலைச் சுட்டுச் சமைத்த
கறியைத் தருகிறோம். அறிவிற் சிறந்த பாணரே! எம் இல்லத்திற்குள் வந்து அதை
உண்ணுங்கள்; இங்கே தங்குக. எங்கள்
ஊரில், வளைந்த கொம்புகளையுடைய காட்டுப் பசுவின், அசையும் தலையையுடைய இளம் கன்றுகளைச் சிறுவர்கள் தம்முடைய
சிறுதேர்களில் பூட்டி விளையாடுவார்கள். என் கணவன் அத்தகைய சிற்றூருக்குத் தலைவன்.
நேற்றைக்கு முதல்நாள், வேந்தனின் கட்டளைப்படி
அவன் போருக்குச் சென்றான். அவன் நாளை வந்துவிடுவான். அவன் வந்ததும், உன் மனைவிக்குப் பொன்மாலை அணிவிப்பான்; உனக்குப் பொற்றாமரைப் பூவைச் சூட்டுவான்.
சிறப்புக் குறிப்பு:
வேட்டுவ குடியை சேர்ந்த முல்லை நில ஊராளியை
சீறூர் மன்னன் என்று இப்பாடல் கூறுகிறது . வேட்டுவ குடியை சேர்ந்த ஊராளிகள்(ஊரை
ஆள்பவர்கள் ) வேந்து விடு தொழிலை செய்ந்தவர்கள் என்பதை இப்பாடல் கூறுகிறது
.வேட்டுவ குடியை சேர்ந்த ஊராளிகள்(ஊரை ஆள்பவர்கள் ) வேந்து விடு தொழிலை
செய்ந்தவர்கள் என்பதை கல்வெட்டுகளும் உறுதிப்படுத்துகிறது .
வேட்டுவ இனக் குழு தலைவனின் (வேள்) பங்காளிகள் ஊராளிகளாக (ஊரை ஆள்பவர்கள் )
இருந்தார்கள் .
புறநானூறு 306
களிறுபொரக் கலங்கு கழல்முள் வேலி
அரிதுஉண் கூவல் அங்குடிச் சீறூர்
ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது;
விருந்து எதிர் பெறுகதில் யானே; என்ஐயும்
ஒ .. .. .. .. .. .. வேந்தனொடு
நாடுதரு விழுப்பகை எய்துக எனவே.
பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார்.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப்
பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மூதின் முல்லை. வீரர்க்கல்லாமல்
அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.
அருஞ்சொற்பொருள்: 1. கூவல் = பள்ளம், கிணறு (சிறிதளவே நீருள்ள நீர்த்துறை). 2. அம்குடி = அழகிய குடி. 3. ஒலித்தல் = தழைத்தல். 4. பரவல் = வணங்கல், வாழ்த்துதல்; ஒடியாது = இடைவிடாமல், நாள்தோறும். 7. விழுப்பகை = சிறந்த பகை.
உரை: யானைகள் படிந்ததால் கலங்கிச் சேறாகி, உண்ணும் நீர் சிறிதளவே உள்ள நீர்த்துறையையும், முள்ளையுடைய கழற்கொடிகளாலாகிய வேலி சூழ்ந்த அழகிய
சிறுகுடிகளையுமுடைய சிற்றூரில் வாழும், தழைத்த மெல்லிய கூந்தலையும் ஒளி பொருந்திய நெற்றியையும் உடைய பெண் ஒருத்தி, நாளும் தவறாமல் தன் முன்னோர்களின் நடுகல்லைத் தொழுது, ”நாள்தோறும் விருந்தினர் என் இல்லத்திற்கு வர வேண்டும்; என் கணவனும் ….. அவன் தலைவனாகிய வேந்தனும் பிற நாடுகளை
வென்று பொருள் பெற உதவும் பெரும்பகையை அடைவானாகுக” என்று அவள் நடுகல்லை வழிபட்டாள்.
சிறப்புக் குறிப்பு: வேட்டுவ குடியினர் வாழ்ந்த
ஊர் அங்குடிச் சீறூர்.
அகநானூறு 387
திருந்து இழை நெகிழ்ந்து பெரும் தோள் சாஅய்
அரி மதர் மழை கண் கலுழ செல்வீர்
வருவீர் ஆகுதல் உரை-மின்-மன்னோ
உவர் உண பறைந்த ஊன் தலை சிறாஅரொடு
அம் வரி கொன்ற கறை சேர் வள் உகிர்
பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய
பூ துகில் இமைக்கும் பொலன் காழ் அல்குல்
அம் வரி சிதைய நோக்கி வெம் வினை
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ
வரி புற இதலின் மணி கண் பேடை
நுண் பொறி அணிந்த எருத்தின் கூர் முள்
செம் கால் சேவல் பயிரும் ஆங்கண்
வில் ஈண்டு அரும் சமம் ததைய நூறி
நல் இசை நிறுத்த நாண் உடை மறவர்
நிரை நிலை நடுகல் பொருந்தி இமையாது
இரை நசைஇ கிடந்த முது வாய் பல்லி
சிறிய தெற்றுவது ஆயின் பெரிய
ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும்
நின்று ஆங்கு பெயரும் கானம்
சென்றோர்-மன் என இருக்கிற்போர்க்கே
- பாலை மதுரை மருதன் இளநாகனார்
வேட்டு =வேட்டுவ குடியினர்
நாண் உடை மறவர் =வேட்டுவ குடியை சேர்ந்த
வீரர்கள்
அகநானூறு 318
கான மான் அதர் யானையும் வழங்கும்
வான மீமிசை உருமு நனி உரறும்
அரவும் புலியும் அஞ்சுதகவு உடைய
இர வழங்கு சிறு நெறி தமியை வருதி
வரை இழி அருவி பாட்டொடு பிரசம்
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும்
பழ விறல் நனம் தலை பய மலை நாட
மன்றல் வேண்டினும் பெறுகுவை ஒன்றோ
இன்று தலையாக வாரல் வரினே
ஏமுறு துயரமொடு யாம் இவண் ஒழிய
என் கண்டு பெயரும்_காலை யாழ நின்
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு
வேய் பயில் அழுவத்து பிரிந்த நின்
நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே
-குறிஞ்சி கபிலர்
அகநானூறு #36 மருதம் மதுரை நக்கீரர்
பகு வாய் வராஅல் பல் வரி இரும் போத்து
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி
ஆம்பல் மெல் அடை கிழிய குவளை
கூம்பு விடு பன் மலர் சிதைய பாய்ந்து எழுந்து
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது
கயிறு இடு கத சே போல மதம் மிக்கு
நாள் கயம் உழக்கும் பூ கேழ் ஊர
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை
திரு மருது ஓங்கிய விரி மலர் காவில்
நறும் பல் கூந்தல் குறும் தொடி மடந்தையொடு
வதுவை அயர்ந்தனை என்ப அலரே
கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன்
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப
சேரல் செம்பியன் சினம் கெழு திதியன்
போர் வல் யானை பொலம் பூண் எழினி
நார் அரி நறவின் எருமையூரன்
தேம் கமழ் அகலத்து புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான் இயல் தேர் பொருநன் என்று
எழுவர் நல் வலம் அடங்க ஒரு பகல்
முரைசொடு வெண்குடை அகப்படுத்து உரை செல
கொன்று களம் வேட்ட ஞான்றை
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே
கொண்டு கூட்டு :வேட்டுவன் தூண்டில் வாங்க
வாராது எனக் கூட்டுக
பாடலின் பின்புலம்:
தலைவன் வைகை ஆற்றங் கரையில் பரத்தையோடு இருந்து
விட்டு வீடு திரும்புகிறான் .இதை தலைவன் தலைவியிடம் பொய் பேசி மறைக்கிறான்.பிறகு
தலைவி தலைவனிடம் ஒரு குளக்கதையை கூறி (வரி1-8 )
ஊர் மக்கள் என்ன பேசுகிறார்கள் (வரி 9 -12 ) எப்படி பேசுகிறார்கள் (வரி 13 -23 ) என்பதை கூறுகிறாள் .
பாடலின் வெளிப்பொருள் :
பிளந்த வாயையுடைய வராலின், பல வரிகளைக் கொண்ட ஆண்மீன் வளைந்த வாயையுடைய தூண்டில்முள்ளில் மாட்டிய இரையை
விழுங்கி,ஆம்பலின் மெல்லிய இலை கிழியுமாறு, குவளையின் மலர்கின்ற பல மலர்கள் தைந்துபோகப் பாய்ந்து
எழுந்து, பின்னிக்கிடக்கும் வள்ளையின் அழகிய கொடிகளை உழப்பி,வேட்டுவன் தூண்டிலை இழுக்க வராமல்,கயிறிட்டுப் பிடிக்கும் சினம் மிக்க காளையைப்
போல வெறி மிகுந்து,காலையில் குளத்தைக் கலக்கும் பூக்கள் பொருந்திய
ஊரனே! (வரி 1-8)
பாடலின் உட்பொருள்:
வேட்டுவன் தூண்டிலை இழுக்க வரவில்லை (வெளிப்பொருள் )= தலைவன் பரத்தையோடு
இருந்ததை தலைவியிடம் மறைக்க முடியவில்லை (உட்பொருள் ).
மீன் குளத்தை கலக்குதல்(வெளிப்பொருள் )= தலைவன்
பரத்தையோடு இருந்ததை ஊர் மக்கள் பேசுதல் (உட்பொருள் )
வேட்டுவ குடியை சேர்ந்த மருத நில ஊராளி
இப்பாடலின் பாட்டுடை தலைவன் ஆவான் .
நாடன் என்கோ? ஊரன் என்கோ?
பாடு இமிழ் பனிக் கடல் சேர்ப்பன் என்கோ?
யாங்கனம் மொழிகோ, ஓங்கு வாள் கோதையை?
புனவர் தட்டை புடைப்பின், அயலது
இறங்கு கதிர் அலமரு கழனியும்,
பிறங்கு நீர்ச் சேர்ப்பினும், புள் ஒருங்கு எழுமே! புறம் 49
குறிஞ்சி ,முல்லை நில பகுதிகளை உடையவன் நாடன்
என்றும் மருத நில பகுதிகளை உடையவன் ஊரன் என்றும் நெய்தல் நில பகுதிகளை உடையவன்
சேர்ப்பன் ,புலம்பன் என்று அழைக்கப்பட்டனர் .
அகநானூறு #270 நெய்தல் சாகலாசனார்
இரும் கழி மலர்ந்த வள் இதழ் நீலம்
புலாஅல் மறுகின் சிறுகுடி பாக்கத்து
இன மீன் வேட்டுவர் ஞாழலொடு மிலையும்
மெல்லம்புலம்ப நெகிழ்ந்தன தோளே
புலால் நாற்றம் வீசும் தெருவினையும் ,மீன்கள் உடைய சிறுகுடிப் பாக்கத்தில் வேட்டுவ குடியை சேர்ந்தவர்கள் பெரிய
உப்பங்கழியில் மலர்ந்த வளமுடைய நீலப்பூக்களைப் புலிநகக் கொன்றை மலர்களுடன் சூடும்
நெய்தல் நிலத்தை உடைய தலைவன் (புலம்பன்) .
விளக்கம் : இப்பாடலின் பாட்டுடை தலைவன் வேட்டுவ
குடியை சேர்ந்த வேள் ஆவான் .
தலைவன் பகலில் வந்து ஒரு பெண்ணை துய்த்து
விட்டு மீள்கிறான் .அப்பெண் (காம கிழத்தி ) இரவில் துன்பப்படுவாள் என்று தோழி
தலைவனிடம் கூறுகிறாள் .
வேள் எவ்வி மிழலை ,நீடூர் ,நீழல் (திருப்புனவாயில் ) போன்ற ஊர்களை ஆட்சி
செய்தார் .வேள் எவ்வியின் ஊர்களில் உப்பளமும் ,நெல் வளமும் இருந்தது .(அகம் 366/1-13,266/9-15; புறம் 24/1-23)
இருங்கோவேளும் ,வேள் எவ்வியும் ஒரே குலத்தை சேர்ந்தவர்கள் என்று புறம் 202 கூறுகிறது
குளிர் பொதும்பர் நளி தூவல்
நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை
இரும் கழி செறுவின் வெள் உப்பு பகர்நரொடு
ஒலி ஓவா கலி யாணர்
முதுவெள்ளிலை மீக்கூறும் மது 115-119
குளிர்ந்த சோலையின் செறிந்த நீர்திவலையின்
ஓசையும், வேட்டுவ குடியினர் படகில் இருந்து கரையில் இறங்கும் ஓசையும்,பெரிய கழியின் பாத்திகளில் விளைந்த வெள்ளை உப்பை விற்போரின்
ஒலியோடு முழங்குதல் ஓயாத முழக்கத்தோடே புது
வருவாயையுடைய முதுவெள்ளிலை.
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! புறம் 66/1-2
சோழனின் முன்னோர் படகு ஓட்டினான் என்று
இப்பாடல் கூறுகிறது .சோழன் மீன் வேட்டையாட சென்றான் என்று கூறுவது தவறான
கருத்து.இது போல வேட்டுவர்கள் படகில் இருந்து இறங்கினார்கள் என்று கூறுகிறது
.வேட்டுவ குடியினர் மீன் வேட்டையாடினர் என்று கூறவில்லை .சங்க காலத்தில் கடற் படை
இருந்தது .வேட்டுவ குடியினர் போர் தொழில் செய்தவர்கள் . வேட்டுவ குடியை சேர்ந்த
போர் வீரர்கள் படகில் பயணம் மேற்கொண்டு இருக்கிறார்கள் .இவர்களை மீன் வேட்டை காரன்
என்று கூறுவது தவறான கருத்தாகும் .
திங்களுள் தோன்றி இருந்த குறு முயால்
எம் கேள் இதன் அகத்து உள்வழி காட்டீமோ
காட்டீயாய் ஆயின் கத நாய் கொளுவுவேன்
வேட்டுவர் உள்வழி செப்புவேன் -நெய்தல் கலி 144/18-21
திங்களுக்குள் தோன்றியிருக்கும் சின்ன முயலே!
என் காதலன் இந்த உலகத்தில் இருக்கும் இடத்தைக் காட்டுவாயா? காட்டாவிட்டால் சினம் மிக்க நாயை உன்மீது ஏவிவிடுவேன், வேட்டுவ குடியினர்
இருக்குமிடம் சென்று அவரிடம் அறிவித்துவிடுவேன்.
வேட்டுவ குடியினர் மிருக வேட்டை
புரிபவர்களாக நெய்தல் கலியில் கூறப்பட்டு
உள்ளது .
முல்லை நிலத்தில் வளரும் பிடவ மரத்தின் பூவை வீ
மலர் என்றழைக்கப்பட்டது .(அகம் 184/7,23/5,304/11-12,344/2-3).
முல்லை நில பகுதிகளை புன்புலம் ,வன்புலம் என்றழைக்கப்பட்டது .(புறம்
324/8,18/24,117/7-8,328/2,177/12,34/9; அகம் 394/6,284/7;ஐங் 421/3; குறு 183/7,202/2;பதி 58/15,30/25,30/13; புறம்
314/4,321/7; அகம் 94/12; நற் 59/6; பதி 75/8).
கான மான் அதர் யானையும் வழங்கும்
வான மீமிசை உருமு நனி உரறும்
அரவும் புலியும் அஞ்சுதகவு உடைய
இர வழங்கு சிறு நெறி தமியை வருதி
வரை இழி அருவி பாட்டொடு பிரசம்
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும்
பழ விறல் நனம் தலை பய மலை நாட
மன்றல் வேண்டினும் பெறுகுவை ஒன்றோ
இன்று தலையாக வாரல் வரினே
ஏமுறு துயரமொடு யாம் இவண் ஒழிய
என் கண்டு பெயரும்காலை யாழ நின்
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு
வேய் பயில் அழுவத்து பிரிந்த நின்
நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே
அகநானூறு 318, குறிஞ்சி ,கபிலர்
கான் =முல்லை நில காடு ;வேட்டு = வேட்டுவர்
உடும்பு கொலீஇ வரி நுணல் அகழ்ந்து
நெடும் கோட்டு புற்றத்து ஈயல் கெண்டி
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல
பல் வேறு பண்ட தொடை மறந்து இல்லத்து
இரு மடை கள்ளின் இன் களி செருக்கும்
வன்புல காட்டு நாட்டதுவே அன்பு கலந்து
நம்வயின் புரிந்த கொள்கையொடு நெஞ்சத்து
உள்ளினள் உறைவோள் ஊரே முல்லை
நுண் முகை அவிழ்ந்த புறவின்
பொறை தலைமணந்தன்று உயவும்மார் இனியே
நற்றிணை 59 ,முல்லை, கபிலர்
உரை :உடும்பைக் கொன்று எடுத்துக்கொண்டு, வரிகளையுடைய தேரையை மணலைத் தோண்டி எடுத்துக்கொண்டு உயர்ந்த
உச்சிகளையுடைய புற்றில் இருக்கும் ஈசலையும் கிளறித் தாழியில் பிடித்துக்கொண்டு,பகல்நேரத்து முயலை தடியால் எறிந்து பிடித்துக்கொண்டு, வரும் வேட்டுவன் தன் தோள்களில் சுமந்துவந்த பல்வேறு பண்டங்களின்
தொகுதியை மறந்து, வீட்டிலிருக்கும் பெரிய
கலத்தில் கள்ளைப் பருகி அதன் மயக்கத்தில் செருக்கியிருக்கும் வன்புலமாகிய
காடுகளைக் கொண்ட நாட்டில் உள்ளது, அன்பினால் உள்ளம் கலந்து நம்மேல் விருப்பத்துடன் கொண்ட
கொள்கையுடனே. தன் நெஞ்சில் எம்மை நினைத்து வாழ்பவளின் ஊர்; முல்லையின் நுண்ணிய மொட்டு மலர்ந்த அந்தக்
காட்டுப்பகுதியில் பொறுமையுடன் ஆற்றியிருக்கிறாள் அவள், இனியும் தாமதித்தால் மிகவும் வருந்துவள்.
………………………………………………….வெம் வினை
கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய
கான புறவின் சேவல் வாய் நூல்
சிலம்பி அம் சினை வெரூஉம்
அலங்கல் உலவை அம் காடு இறந்தோரே
நற்றிணை 189/6-10 , பாலை, இடைக்காடனார்
கொடிய செயலாகிய கொலைத்தொழிலில் வல்ல வேட்டுவன்
விரித்த வலையினின்றும் தப்பிப்பறந்துபோன காட்டுப்புறாவின் சேவல், வாயில் நூலைக்கொண்டு பின்னும் சிலந்தியின் அழகிய வலையைக்
கண்டு வெருண்டோடும் காற்றால் அசையும் காய்ந்த கிளைகளைக்கொண்ட
பாலைக்காட்டுவழி சென்றவர் .
இரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டிய
பெருங்கல் அடாரும் போன்ம்என விரும்பி
முயங்கினேன் அல்லனோ யானே புறம் 19/5-7
வேட்டுவ குடியை சேர்ந்த ஒருவன் பெரிய புலியைப்
பிடிக்க மாட்டிய அடார் என்னும் கல்லைப் போன்ற மார்பினன் என்று எண்ணி, கழுவி விளங்கிய முத்தாரம் அணிந்த உன் மார்பை விரும்பித்
தழுவினேன் அல்லனோ?
காந்தள் அம் கண்ணி கொலை வில் வேட்டுவர்
செம் கோட்டு ஆமான் ஊனொடு காட்ட
மதன் உடை வேழத்து வெண் கோடு கொண்டு
பொன் உடை நியமத்து பிழி நொடை கொடுக்கும்
குன்று தலைமணந்த புன்புல வைப்பும் -பதி 30/9-13
செங்கோட்டாமான் = செந்நிற கொம்புகளை உடைய மான்.
காந்தள் பூவால் தொடுக்கப்பட்ட தலைமாலையினையும், கொலைபுரியும் வில்லினையும் கொண்ட வேட்டுவ குடியினர் செந்நிற கொம்புகளை உடைய மான் இறைச்சியோடு, காட்டிலுள்ள வலிமையுடைய யானைகளின் வெண்மையான தந்தங்களையும் எடுத்துக்கொண்டு, அவற்றைப் பொன்னை உடைய கடைத்தெருக்களில் கள்ளுக்கு விலையாகக்
கொடுக்கும் சிறு குன்றுகள் இருக்கும் பாலைநில(முல்லை ) ஊர்களின் மக்களும்.
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்
(சிலப்பதிகாரம், காடுகாண் காதை, 64-66)
முல்லை நிலம் வெயில் காலத்தில் காய்ந்து
இருக்கும் .வறண்ட முல்லை பகுதியை பாலை என்றழைக்கப்படும் .இது போல குறிஞ்சி
நிலம் வெயில் காலத்தில் காய்ந்து
இருக்கும் .வறண்ட முல்லை பகுதியை பாலை என்றழைக்கப்படும்.மழை காலத்தில் வறண்ட
முல்லை பகுதி (பாலை ) முல்லை
என்றழைக்கப்படும் .இது போல.மழை காலத்தில் வறண்ட
குறிஞ்சி பகுதி (பாலை) குறிஞ்சி என்றழைக்கப்படும்.
எயினர் பாலை நிலத்தவர்களின் சிறப்பு பெயர்
ஆகும் .
கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்
மான்தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும் புறம் 33/1-7
உரை: முல்லை நில காட்டில் வாழும் சினக்கொண்ட
நாய்களையுடைய வேட்டுவர் மான் தசைகளை விற்பதற்காக கூடைகளில் கொண்டு வருவர்; இடைச்சியர் தயிரை விற்பதற்காகக் குடங்களில் கொண்டு வருவர்.
ஏரைக்கொண்டு உழவுத்தொழில் செய்யும் உழவர்களின் பெரிய இல்லங்களில் வாழும் மகளிர், வேட்டுவர் கொண்டு வந்த தசைகளையும், இடைச்சியர் கொண்டு வந்த தயிரையும் பெற்றுக் கொண்டு, குளக்கரையில் உள்ள நிலத்தில் விளைந்த நெல்லை அள்ளிக்
கொடுக்க, வேட்டுவரும் இடைச்சியரும் மகிழ்ச்சியுடன்
அந்நெல்லைப் பெற்றுச் செல்கின்றனர். இத்தகைய வளமான நல்ல ஊர், தெற்கே பொதிகைமலை உள்ள பாண்டிய நாட்டில் உள்ளது.
வேட்டுவ குடியினர் மிருகவேட்டை புரிந்ததை இப்பாடல்கள் கூறுகிறது .
வேட்டுவ குடியை சேர்ந்த போர் வீரனின் துறவறம் :
ஓவியம் போன்ற மனையில் பாவை போன்ற மகளிரின்
அணிகலம் நெகிழச் செய்த போர் வீரனை (மல்லன் ) கண்டோம் .இப்போது அவன் மலையில் அருவி
நீரில் குளிர்த்து யானை கொண்டு வந்து தந்த விறகில் செந்தீயைத் கொளுத்தி முதுகில் தாழ்ந்த சடையை உலர்த்துவான்
.(புறம் 251)
அருவி நீரில் குளித்து யானை கொண்டு வந்து
சடையுடன் தாளி இலையை பறிப்பான் .முன்பு வீட்டிற்கு வரும் மட மயிலை (பெண் )
பேச்சால் மயக்கி பிடிக்கும் வேட்டுவனாக இருந்தான் .(புறம் 252)
கோடு துவையா கோள் வாய் நாயொடு
காடு தேர்ந்து அசைஇய வயமான் வேட்டு
வயவர் மகளிர் என்றி ஆயின்
குறவர் மகளிரேம் குன்று கெழு கொடிச்சியேம் -நற்றிணை 276/1-4 ,குறிஞ்சி, தொல் கபிலர்
கொம்புகளை ஊதி,
பற்றிக்கொள்ளும் வாயையுடைய நாயுடன் முல்லை நில
காட்டில் தேடி களைப்புற்ற வலிமையானவன் ஆன வேட்டுவ குடியை சேர்ந்த போர் வீரரின்
மகளிர் என்று எம்மை கூறினால் குறவர் குடியை சேர்ந்த மகளிர்கள் குன்றுகள் உடைய
தலைவி (கொடிச்சி ) ஆவோம் .
வேட்டுவ குடியினர் குறிஞ்சி நிலத்தை உடையவர்கள்
என்பதை இப்பாடல் கூறுகிறது .
வேளிர்கள் குன்றுகளையும் ,குன்றுகளை சுற்றி இருக்கும் காட்டு பகுதிகளையும் உடையவர்களாக இருந்தனர் .
தொன்று முதிர் வேளிர் குன்றூர் அன்ன என் - நற் 280/8
No comments:
Post a Comment