வேட்டுவ குடியை சேர்ந்த வேளிர்கள் மற்றும் வேந்தர்கள்:
தொன்று முதிர் வேளிர் குன்றூர் குணாது - குறு 164/3
பொன் அணி யானை தொன் முதிர் வேளிர்/குப்பை நெல்லின் முத்தூறு தந்த - புறம் 24/21,22

வீரை வேண்மான் வெளியன் தித்தன் - நற் 58/5
இருங்கோ வேண்மான் இயல் தேர் பொருநன் என்று - அகம் 36/19
நறவு_மகிழ் இருக்கை நன்னன் வேண்மான்/வயலை வேலி வியலூர் அன்ன நின் - அகம் 97/12,13
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் - அகம் 208/5
நெடும் கை வேண்மான் அரும் கடி பிடவூர் - புறம் 395/20
விளங்கு பெரும் திருவின் மான விறல் வேள்/அழும்பில் அன்ன நாடு இழந்தனரும் - மது 344,345
இருங்கோவேள் மருங்கு சாய - பட் 282
பெரு விதுப்பு உற்ற பல் வேள் மகளிர் - அகம் 208/15
வேள் முது மாக்கள் வியன் நகர் கரந்த - அகம் 372/4
ஓம்பா ஈகை மாவேள் எவ்வி - புறம் 24/18
பாரி வேள்பால் பாடினை செலினே - புறம் 105/8
தேர் வேள் ஆயை காணிய சென்மே - புறம் 133/7
மலை கெழு நாடன் மா வேள் ஆஅய் - புறம் 135/13
அறை பறை என்றே அழும்பில் வேள் உரைப்ப - வஞ்சி 25/177
வேளாவிக்கோ மாளிகை காட்டி - வஞ்சி 28/198
அழும்பில் வேளொடு ஆயக்கணக்கரை - வஞ்சி 28/205
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட - புறம் 372/8
வேளிருள் வேளே விறல் போர் அண்ணல் - புறம் 201/12
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய - அகம் 246/12
வேளிரொடு பொரீஇய கழித்த - அகம் 331/13
பணை கெழு வேந்தரும் வேளிரும் ஒன்று_மொழிந்து - பதி 30/30
வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து - பதி 49/7
வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து - பதி 75/4
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணிய - பதி 88/13
இரு பெரு வேந்தரொடு வேளிர் சாய - மது 55
தொன்று முதிர் வேளிர் குன்றூர் அன்ன என் - நற் 280/8
ஈர்_எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த - அகம் 135/12
அடு போர் வேளிர் வீரை முன்துறை - அகம் 206/13
தொன் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த - அகம் 258/2
வேட்டுவ குடியை சேர்ந்த ஊராளிகள் (சீறூர் மன்னர்கள் மற்றும் தண்ணடை மன்னர்கள் )
சங்க இலக்கியங்களில் முல்லை மற்றும் மருத நில ஊர்களை ஆண்டவர்களை சீறூர் மன்னர் ,தண்ணடை மன்னர் என்று அழைக்க பட்டனர் .இவர்களை கல்வெட்டுகளில் ஊராளி என்றும் ஊரும் ஊராளிகள் என்றும் அழைக்கப்பட்டனர் .
புறநானூற்றின் 285ஆம் பாடல் முதல் 335ஆம் பாடல் வரை சீறூர் மன்னர் பற்றிக் குறிப்பிடுகின்றன. சீறூர் மன்னர் ஆண்ட நிலப்பகுதி,
பருத்தி வேலிச் சீறூர் மன்னர் (புறம். 299:1)
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம் (புறம் 308:4)
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,
நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர் (புறம் 302:7 )
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
புன்புலம் தழீஇய அம்குடிச் சீறூர் (புறம் 324:7-8)
எனவும் இவர்கள் ஆண்ட நிலப்பகுதி குறிக்கப்பட்டுள்ளது.
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்த மரபில் கல்லொடு புணரச்
சொல்லப்பட்ட எழுமூன்று துறைத்தே (தொல்.பொருள்.புறத்.5:19 – 21)
எனக் கல்நடும் நடைமுறையைக் குறிப்பிட்டுள்ளார் தொல்காப்பியர்.
சங்க இலக்கியங்களில் நடுகல் வழிபாடு குறித்த செய்திகளைப் பரவலாகக் காணமுடிகிறது.
நிரம்பா நோக்கின் நிரயம் கொண்மார்
நெல்லி நீளிடை எல்லி மண்டி
நல் அமர்க் கடந்த நாணுடைமறவர்
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலைநடுகல்
வேல் ஊன்று பலகை வேற்றுமுனை கடுக்கும் (அகம். 67: 6 – 11)
எனும் பாடலடிகள், ஆநிரைகளை மீட்க வேண்டி வெட்சி வீரருடன் போரிட்டு வென்று வீரமரணமடைந்த வீரர்களது பெயரும் புகழும் பொறிக்கப்பட்ட கற்கள் மயில் தோகை சூட்டப்பட்டு நிற்க, அக்கற்களுக்கு முன் வேலும் கேடயமும் சார்த்தி வைக்கப்பட்டிருந்த நிலையைக் குறிப்பிடுகின்றன.
வீளை அம்பின் விழுத்தொடை மழவர்
நாள்ஆ உய்த்த நாமவெஞ்சுரத்து
நடைமெலிந்து ஒழிந்த சேண்படர் கன்றின்
கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர்
பெயரும் பீடும் எழுதி, அதர் தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
வேல் ஊன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்
வெருவரு தகுநகானம் ‘நம்மொடு
வருக என்னுதி ஆயின்
வாரேன்; நெஞ்சம்! வாய்க்கநின் வினையே (அகம் 131:6 – 15)
எனும் பாடலடிகள், ‘நாம் கடந்து செல்லும் காடோ, சீழ்க்கை ஒலி பொருந்திய அம்பினது தப்பாத தொடையினையுடைய வெட்சி சூடின மறவர்கள், விடியற்காலையில் பசுக்கூட்டத்தைக் கவர்ந்து கொண்டு போகும் அச்சம் தரும் கொடிய பாலை வழியினைக் கொண்டது. வேட்சியாருடன் போரிட்டு ஆநிரைகளை மீட்டுவரச் சென்ற கரந்தையார் அச்சுரவழியைக் கடந்து நெடுந்தூரம் நடந்து வந்தமையால் தம் தாயாருடன் செல்லமாட்டாது நடைதளர்ந்து நின்றுவிட்ட கன்றுகளின் கண்ணின் கருமணியின் கடையினின்றும் சிந்துகின்ற நீரைத் துடைத்து அவற்றின் துயரைப் போக்கினர். நிரைமீட்ட போரில் இறந்துபட்ட கரந்தையோரின் பெயரும் பெருமையும் பொறித்து, மயிற்பீலி சூட்டப்பெற்று விளங்கும் சிறப்பினைக் கொண்ட நடுகல்லின் முன் ஊன்றிய வேலும், அதன்கண் சார்த்தப்பெற்ற கேடயமும் செல்லும் வழிதோறும் வேந்தரது போர்முனையை ஒத்துக் காணப்படும் அச்சம் எழும் இயல்பினை உடையது என விளக்கி நிற்கின்றன.
சீறூர் மன்னர் நடுகல் வழிபாட்டை முதன்மையாகக் கொண்டிருந்ததையும் நடுகல் அன்றி வேறு தெய்வங்களை வழிபடாப் பண்புடையார் என்பதையும் மாங்குடி கிழாரின் மூதின்முல்லை துறையிலமைந்த,
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தென
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே (புறம்.335: 10 – 12)
எனக் குறிப்பிடுகிறது. இந்த அடிப்படையில்,
நடுகல் பிறங்கிய உவல் இடுபறத்தலை
புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர் (புறம் 314: 3 - 4)
என நடுகற்கள் நிறைந்திருந்த சுடுகாட்டை உடையதாகச் சீறூர் சுட்டப்படுகிறது.
வேந்துவிடுதொழில்:
புன்புல வேளாண்மையால் கிடைக்கும் வரகு, தினை, அவரை முதலான தானியங்ககள் மற்றும் வேட்டையின் வாயிலாகக் கிடைக்கும் பொருளைக் கொண்டதான சீறூர் மன்னர் சமுதாயம் வறுமை காரணமாக வேந்துவிடுதொழிலில் ஈடுபட்டமையைப் புறநானூற்றுப் பாடல்கள் விளக்குகின்றன.
வேந்து தொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடு ( புறம்.285 : 7)
……… வேந்தனொடு
நாடுதரு விழுப்பகை எய்துக (புறம் 306: 6 - 7)
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்
வேந்துவிடு தொழிலொடு சென்றனன்(புறம் 319: 12 - 13)
என வேந்துவிடுதொழிலை மேற்கொண்ட சீறூர் மன்னர், அத்தொழிலின் வாயிலாக நெல், பொன், யானையின் முகபடாம் போன்ற பலவற்றைப் பரிசிலாகப் பெற்று வந்ததையும் பாடல்கள் காட்டுகின்றன.
பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்து,தன்
புன்புறப் பெடையொடு வதியும்
யாணர்த்து ஆகும் - வேந்து விழுமுறினே (புறம் 318: 7 - 9)
எனும் பாடலடிகள் பெரிய நெல் வயல்களில் விளைந்த நெல்லை உண்ட தன்னுடைய புல்லிய முதுகுப் பகுதியையுடைய பெண் குருவியுடன் தங்குவதற்கு இடனாகிய, வேந்துவிடு தொழிலில் கிடைக்கும் புதுவருவாய் உடையதாகும் ஊர் எனக் குறிப்பிடுகின்றனர்.
சிறிய ஊரின் மன்னன், வேந்தனால் ஏவப்பட்ட தொழிலை ஏற்றுப் பகை மேற்சென்றனன். அவன் போரில் வெற்றியுடன் திரும்பி வந்து உன்னுடைய பாணிச்சி பொன்னரி மாலை அணிய, உனக்கு வாடாத பொன் தாமரைப் பூவினைத் தலையில் பரிசாகச் சூட்டுவான் எனப் பாணரிடம், சீறூர் மன்னனின் மனைவி குறிப்பிடுவதை,
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்
வேந்துவிடு தொழிலொடு சென்றனன் வந்துநின்
பாடினி மாலையணிய
வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே (புறம் 319: 12 - 15)
எனும் பாடலடிகள் காட்டுகின்றன.
அருஞ்சமம் ததையத் தாக்கி பெருஞ்சமத்து
அண்ணல் யானை அணிந்த
பொன்செய் ஓடைப் பெரும் பரிசிலனே (
புறம் 326: 13 - 15)
எனும் பாடலடிகள் சீறூர் மன்னன் வேந்துவிடு தொழில் முடித்து யானையின் முகபடாம் பெற்று வந்ததைக் காட்டுகின்றன.
அரசனால் வென்றளிக்கப்பட்ட சிறந்த பொருள்களைத் தனக்கென வைத்துக்கொள்ளாது பரிசிலர்க்கு எந்நாளும் குறையாமல் தருகின்ற வள்ளண்மையுடைய புகழமைந்த தகுதியுடையவன் சீறூர் மன்னன் என்பதை,
வேந்து தரு விழுக்கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரை (புறம் 320: 16 - 18)
எனும் பாடலடிகள் காட்டுகின்றன.
வேந்துவிடு தொழிலுக்காட்பட்டு, அத்தொழிலின் வாயிலாகப் பெற்றவற்றைப் பாணர்க்கும் பலர்க்கும் வழங்கிய சீறூர் மன்னரின் இத்தகைய இயல்பு அவர்தம் குடிமைப் பண்பால் விளங்கக் காணலாம்.
சீறூர் ஊராளிகள் (சீறூர் மன்னர் )வேந்துவிடு தொழில் மூலம் தண்ணடை (மருத நிலத்தை ஊர் ) பெற்று தண்ணடை ஊராளிகளாக (தண்ணடை மன்னர் ) மாறினார்கள் .
கேளிர்=உறவினர்கள்
கேள் =கிளை =பங்காளி உறவு
கேள் அல் கேளிர்=மாமன் மச்சான் உறவு
குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
5 மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத் தானே? புறநானூறு (74)
கிளை என்ற சொல் சேர வேட்டுவ குடியினரை குறிக்கும் .
கேள் அல் கேளிர் என்ற சொற்கள் சோழ வேட்டுவ குடியினரை குறிக்கும் .
உரை: சேர வேட்டுவ குடியில் குழந்தை இறந்து பிறந்தாலும் (அல்லது பிறந்து இறந்தாலும்), உருவமற்ற தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் அது ஓரு ஆள் அல்ல என்று (புதைப்பதற்கு முன் மார்பில்) வாளால் வெட்டுவதிலிருந்து தவற மாட்டார்கள். ஆனால், யானோ அக்குடியில் பிறந்தவனாகவிருந்தாலும், (போரில் மார்பில் புண்பட்டு வீரனைப்போல் மரணமடையாமல்) சங்கிலியால் நாய்போலக் கட்டப்பட்டு, என் பசியைப் போக்குவதற்கு, என்னைத் துன்புறுத்திய பகைவர்களிடம்(சோழ வேட்டுவ குடியினர் ) மன வலிமையின்றி உணவு வேண்டுமென்றுக் கேட்டதால் அவர்கள் எனக்கு அளித்த நீர்போன்ற உணவை உண்ணும் நிலையில் உள்ளேனே! இப்படி வாழ்வதற்காகவா இவ்வுலகில் என்னை என் பெற்றோர்கள் பெற்றனர்?
தமிழ் மண்ணில் பல ஊர்களை வேட்டுவ குடியினர் ஆண்டு வந்தார்கள் .இவர்களுக்கு இடையில் அடிக்கடி போர்கள் நடைபெற்றது .இதை பார்த்த புலவர் பூங்குன்றனார் வேட்டுவ குடியினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக
யாதும் ஊரே யாவரும் கேளிர்/தீதும் நன்றும் பிறர் தர வாரா - புறம் 192/1,2 என்று பாடினார் .
வேட்டுவ குடியினரின் கொற்றவை வழிபாடு
ஆரம்பத்தில் வெட்சி போரின் (ஆநிரை கவர்தல் ,ஆநிரை மீட்டல் ) வெற்றி கடவுளாக வேட்டுவ குடியினர் வழிபட்டார்கள் .
கொற்றவை நிலையும் அ திணை புறனே - பொருள். புறத்:4/2
தமிழகத்தை ஆண்ட அரச பரம்பரையினர் பெண்தெய்வத்தையே குல தெய்வமாக(கொற்றவை ) வணங்கி வந்தனர்.
தஞ்சை மற்றும் வல்லம் பகுதிகளை பல்லவர்களிடம் இருந்து கைப்பற்றிய பிறகு விஜயாலய சோழன் தஞ்சையில் நிசும்பசூதினியை(கொற்றவை ) பிரதிஷ்டை செய்தான். இதை பற்றி திருவாலான்காட்டுச் செப்பேட்டு வரிகளின் மூலம் அறியமுடிகிறது. அந்த செப்பேட்டில் உள்ள வாசகங்கள் என்னவென்றால்
“தஞ்சாபுரீம் சௌத சுதாங்காராகாம
ஐக்ராஹ ரந்தும் ரவி வம்ச தீப:
தத:பிரதிஷ்டாப்ய நிசும்ப சூதனீம்
சுராசுரை:அர்ச்சித பாத பங்கஜாம்
சது : சமுத்ராம்பர மேகலாம் புவம்
ரஹாஜ தேவோ தத்பராசதந”
சும்பன் நிசும்பன் என்ற அரக்கர்களை அழித்து வெற்றிவாகை சூடிய நிசும்பசூதனி என்ற தேவியை தஞ்சை நகரில் பிரதிஷ்டை செய்தான். தேவர்களாலும் அசுரர்களாலும் பூஜிக்கப்பட்ட பாதங்களுடைய அத்தேவியின் அருளால்,நான்கு கடல்கள் ஆகிய ஆடையை அணிந்து ஒளி வீசுகின்ற பூமியை, ஒரு மாலையை அணிவது போலச் சுலபமாக ஆண்டு வந்தான் என்று கூறுகிறது திருவாலான்காட்டு செப்பேடு.
தஞ்சையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நிசும்பசூதினி எட்டு கைகளை உடையவர். 8 கரங்களில் சூலம், வில், மணி, கத்தி, பாசம், கேடயம், கபாலம் தரித்துள்ளார். ஓர் இடது கரம் கீழ் இருக்கும் அசுரனை காட்டுகிறது, வலது கால் துண்டிக்க பட்ட ஒரு தலையின் மேல் ஊன்றியுள்ளது.சும்பன், நிசும்பன் ஆகோயோரை வதைக்கும் காட்சியில் உள்ளார்.
வலம் படு கொற்றத்து வாய் வாள் கொற்றவை
இரண்டு வேறு உருவின் திரண்ட தோள் அவுணன் - மது 12/64,65
கொற்றவை கொண்ட அணி கொண்டு நின்ற இ - மது 12/87
கொள்ளும் கொடி எடுத்து கொற்றவையும் கொடுமரம் முன் செல்லும் போலும் - மது 12/127
வெல் போர் வேந்தர் முரசு கண் போழ்ந்து அவர்
அரசு உவா அழைப்ப கோடு அறுத்து இயற்றிய
அணங்கு உடை மரபின் கட்டில் மேல் இருந்து
தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து
நிறம் படு குருதி புறம்படின் அல்லது
மடை எதிர்கொள்ளா அஞ்சுவரு மரபின்
கடவுள் அயிரையின் நிலைஇ
கேடு இல ஆக பெரும நின் புகழே பதி:79/12-19
வெல்லும் போரினைக் கொண்ட வேந்தர்களின் முரசுகளின் முகப்பைக் கிழித்து, அவருடைய பட்டத்து யானை கதறக்கதற அதனுடைய கொம்புகளை அறுத்தெடுத்துச் செய்த அச்சம் தரும் தன்மையையுடைய கட்டிலின் மேலிருந்து தும்பைப் போரின் தன்மை பொருந்திய போரைச் செய்ததால் உடல் சோர்வினில் ஓய்ந்திருக்க,மார்பினைக் கிழித்து வரும் குருதி மேலே பட்டாலல்லது பலியுணவை ஏற்றுக்கொள்ளாத அச்சம்தரும் இயல்பினையுடைய கடவுளான கொற்றவை இருக்கும் அயிரை மலையைப் போல நிலைபெற்று அழியாதது ஆகுக பெருமானே! உன் புகழ்!
குருதி விதிர்த்த குவவு சோற்று குன்றோடு
உரு கெழு மரபின் அயிரை பரைஇ
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணிய
கொற்றம் எய்திய பெரியோர் மருக
வியல் உளை அரிமான் மறம் கெழு குருசில் பதி:88/11-15
இரத்தம் கலந்து குவிக்கப்பட்டிருக்கும் குன்று போன்ற சோற்றுக் குவியலுடன்
அச்சந்தரும் இயல்புடைய அயிரை மலையிலுள்ள கொற்றவையைப் போற்றிப்பாடி,
முடியுடை வேந்தரும், குறுநில மன்னரும் பின்னால் நின்று பணிந்துகொள்ள,
வெற்றி எய்திய பெருமக்களின் வழிவந்தவனே!
அகன்ற பிடரிமயிரினை உடைய சிங்கம் போன்ற வீரம் பொருந்திய குருசிலே!
உரு கெழு மரபின் அயிரை பரவியும் பதி:90/19
அச்சந்தரும் மரபினையுடைய அயிரை மலையிலிருக்கும் கொற்றவையைப் போற்றித் துதித்தும்,
முழு_முதல் மிசைய கோடு-தொறும் துவன்றும்
அயிரை நெடு வரை போல
தொலையாது ஆக நீ வாழும் நாளே பதி:70/25-27
மிகப் பெரிதான உச்சியையுடைய மலைச் சிகரமெங்கும் நிறைந்து விளங்கும்
அயிரை என்னும் நெடிய மலையைப் போல
குறையாது பெருகுவதாக நீ வாழும் நாள்கள்.
சீர் உடை தேஎத்த முனை கெட விலங்கிய
நேர் உயர் நெடு வரை அயிரை பொருந பதி:21/28-29
புகழ் படைத்த நாட்டினிடையே பகைவர் போரிடாதவாறு குறுக்கிட்டுக்கிடக்கும்
நேராக உயர்ந்த நெடிய மலையான அயிரை என்னும் மலைக்குத் தலைவனே!
………………ஓங்கு புகழ்க்
கான் அமர் செல்வி அருளலின், வெண் கால் அகம்:345/3-4
ஓங்கு புகழ் காண் அமர் செல்வி - மிக்க புகழ் வாய்ந்த கொற்றவை, அருளிலின் - அருள் கூர்ந்து அளித்தலின்
களிறு வழங்கு அதர கானத்து அல்கி
இலை இல் மராத்த எவ்வம் தாங்கி 50
வலை வலந்து அன்ன மெல் நிழல் மருங்கில்
காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை பொரு: 49-52
யானை உலாவரும் வழிகளை உடைய காட்டிடத்தே தங்கி,
இலையில்லாத மரத்தின் அடியில், (ஆறுசெல்) வருத்தம் தாங்கி, 50
வலையைப் போர்த்தியது போன்ற மெல்லிய நிழலில்,
காட்டில் தங்குகின்ற தெய்வத்திற்குச் செய்யும் முறைமைகளைச் செய்துவிட்ட பின்பு
‘பெரும் காட்டு கொற்றிக்கு பேய் நொடித்து ஆங்கு’ கலி:89/8
பெரிய காட்டிலிருக்கும் கொற்றவைக்குப் பேய் வந்து குறி சொன்னாற்போல
‘கொற்றவை கோலம்கொண்டு ஓர் பெண் ‘பரிபாடல் : 11
சிலம்பின் வேட்டுவவரி வேட்டுவ குடியினரின் கொற்றவை வழிபாடு குறித்த தகவல்களின் களஞ்சியமாக இளங்கோவடிகளால் படைக்கப்பட்டுள்ளது. வேட்டுவ குடியினரின் வீரத்தையும் ,வாழ்கை முறையும் ,போர் கடவுளான கொற்றவையை வழிபாடும் பாங்கை அற்புதமாக கூறுகிறார் இளங்கோ அடிகள் .
மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி
நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்
பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி
நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து
அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்
துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி
வளையுடைக் கையிற் சூல மேந்தி
கரியின் உரிவை போர்த்தணங் காகிய
அரியின் உரிவை மேகலை யாட்டி
சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி
வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை
இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன்
தலைமிசை நின்ற தையல் (சிலம்பு. வேட்டுவவரி, 54-66)
“பிறையாகிய வெள்ளிய இதழைச் சூடும் சென்னியள், நெற்றியைத் திறந்து விழித்த இமையாத கண்ணினள், பவளம் போன்ற வாயை உடையவள், முத்துப் போன்ற ஒளிவீசும் நகையுடையவள், நஞ்சு உண்டதால் கறுத்த கண்டமுடையவள், கொடிய சினமுடைய வாசுகி என்னும் பாம்பாகிய நாணினைப் பூட்டி நீண்ட மேருவாகிய வில்லை வளைத்தவள், துளையமைந்த பொருந்திய பல்லையுடைய நச்சரவினைக் கச்சாக அணிந்த மார்பினள், வளையல் அணிந்த கையில் சூலம் ஏந்தியவள், யானையின் தோலைப் போர்த்து அதன் மேல் சிங்கத்தின் தோலை மேகலையாக அணிந்தவள், இடக்காலிலே சிலம்பும், வலக்காலிலே வீரக் கழலும் ஒலிக்கும் சிற்றடிகளை உடையவள், எருமைத் தலையும் மனித உடலும் கொண்டு திரண்ட தோளுடன் திகழ்ந்த மகிடாசுரனைக் கொன்று அவனது தலைமேல் நிற்பவள்”
நடுகல்
நடுகல் பற்றிய குறிப்புடைய பாடல்கள்:
அகநானூறு – 35, 53, 67, 131, 289, 297, 343, 365, 387
புறநானூறு – 221, 222, 223, 232, 261, 306, 314, 329
ஐங்குறுநூறு – 352
பட்டினப்பாலை – line 79
மலைபடுகடாம் – lines 388, 395
சங்க காலத்தில் வீரர்களுக்கும் மன்னர்களுக்கும், அவர்கள் இறந்த பின், நடுகல் நட்டும் வழக்கம் இருந்தது. கோப்பெருஞ்சோழன், அதியமான் நெடுமான் அஞ்சி ஆகிய இரு மன்னர்களுக்கு நடுகல் நட்டியதை பாடல்கள் மூலம் அறிகின்றோம். தங்கள் மன்னனின் ஆநிரைகளை பிறர் கவர்ந்துச் செல்லும் பொழுது அதைத் தடுத்து நிறுத்தி உயிர் இறந்த வீரர்களுக்கு நடுகற்கள் நடப்பட்டன. போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கும் நடுகற்கள் நட்டப்பட்டன. நட்டிய கற்களில் இறந்தவர்களின் பெயர்களையும் அவர்களது மறச் செயல்களைப் பற்றிய விவரங்களையும் கூர்மையான உளியால் பொறித்தனர். ஆண்களுக்கு மட்டுமே இந்தக் கற்கள் நட்டப்பட்டன. பெண்களுக்கு நடுகல் நட்டியதாக சங்க இலக்கியத்தில் குறிப்பு எதுவும் இல்லை.
புறநானூறு, அகநானூறு, ஐங்குறுநூறு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய சங்க நூல்களில் நடுகல் பற்றிய குறிப்புகள் பல உள்ளன. அக நூல்களான அகநானூறு ஐங்குறுநூறு ஆகியவற்றில் பாலைத் திணைப் பாடல்களில் மட்டுமே நடுகல் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்தத் திணையில் உள்ள நிலம் வறண்டுப் போனது. அங்குள்ள மரங்களும் செடிகளும் வாடிய நிலையில் இருக்கும். மிருகங்கள் குடிக்க நீர் இல்லாது தவிக்கும். பயணம் செய்பவர்களின் பொருட்களைக் கைப்பற்றி அவர்களைக் கொல்லும் கள்வர்கள் அங்கு உண்டு. தலைவன் பொருள் சேர்க்க பாலை நிலம் வழியாகச் செல்வான். தலைவனும் தலைவியும் உடன்போக்கில் இந்த நிலத்தைக் கடந்து செல்வார்கள். அங்கு இறந்தவர்களுக்காக நாட்டிய நடுகற்கள் இருக்கும்.
பழந்தமிழர்கள் நடுகற்களை மிகவும் மதித்து, அவற்றை வழிபட்டனர். நடுகற்களைச் சுற்றி வேலை நட்டி அவற்றில் கேடயங்களைத் தொங்க விட்டார்கள். நடுகற்களை மயில் இறகுகளாலும் மலர்களாலும் அலங்கரித்து, அவற்றின் மீது கள்ளை ஊற்றி சிறப்பத்தினர். துடி அடித்து ஆடுகளை அவற்றிற்குப் பலியாகக் கொடுத்தனர்.
தமிழர்கள் நடுகல்லை எந்த அளவிற்குச் சிறப்பித்தார்கள் என்பதை இந்தப் பாடலின் மூலம் நாம் அறியலாம். மாங்குடி கிழார் மிக அருமையாக இங்கு விவரிக்கின்றார்,
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே (புறநானூறு 335, 9-12)
“ஒத்துப் போகாத பகைவர்களை (தெவ்வர் = பகைவர்) எதிர்த்து, முன் நின்று தடுத்து ஒளியுடைய, உயர்த்திய தந்தங்களையுடைய யானைகளைக் கொன்று விட்டு வீழ்ந்தவர்களுக்கு நட்டிய கல்லைத் தான் நாங்கள் வழிபடுவோம் (பரவும் = வழிபடும்). நெல்லைத் தூவி வழிபடும் வேறு கடவுள் எதுவும் எங்களுக்குக் கிடையாது.”
நோய் பாடியார் என்ற பெயரையுடைய இந்தப் புலவர் பாலை நிலப் பாதையில் கண்டதைப் பற்றிக் கூறுகின்றார்,
அரம் போழ் நுதிய வாளி அம்பின்
நிரம்பா நோக்கின் நிரயம் கொண்மார்
நெல்லி நீளிடை எல்லி மண்டி
நல் அமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர் தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
வேல் ஊன்று பலகை (அகநானூறு 67, 5-11)
“ போர்களில் ஈடுப்பட்ட வில்லின் அம்பை கொண்ட வீரர்களின் பெயரும் புகழும் எழுதப்பட்ட மயில் இறகு சூட்டிய கேடயங்கள் (பலகை = கேடயம்) தொங்கும் ஊன்றிய வேல்களால் சூழப்பட்ட, விளங்கும் நடுகற்கள் இருக்கின்றன எல்லாப் பாதைகளிலும் (அதர் = பாதை).”
பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தலைவன் பொருள் ஈட்ட போயுள்ளான். பிரிவினால் வருந்திய தலைவி தோழியிடம் பேசுகின்றாள். தலைவன் கடந்து சென்ற பாலை நிலத்தைப் பற்றி இந்தப் பாடலில் சீத்தலைச் சாத்தனார் விவரிக்கின்றார்,
கடுங்கதிர் எறித்த விடுவாய் நிறைய
நெடுங்கான் முருங்கை வெண் பூத் தாஅய்
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை
வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு
கள்ளி அம் காட்ட கடத்திடை உழிஞ்சில்
உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின்
விழுத்தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர்
எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும் (அகநானூறு 53)
சூரியனின் கடுமையான கதிர்களின் வெட்பத்தால் ஏற்பட்ட நில பிளப்புகளில் பெரிய காட்டின் முருங்கை மரங்களின் வெள்ளை மலர்கள் கொட்டிக் கிடக்கும். ஆளில்லாத நீண்ட வறண்ட பாதையில் கூர்மையான பற்களையுடையச் ஆண் செந்நாய் வருத்தத்துடனும் பசியுடனும் தன் துணையுடன், தனிமையான பாதையில் (இயவு = பாதை) மறவர்களின் குறி தப்பாத வில்லிடம் வீழ்ந்தவர்களுக்காக நட்டிய எழுதுக்களையுடைய நடுக்கல்லின் இனிய நிழலில் வசிக்கும். அங்கு கள்ளிச் செடியும் வாகை மரங்களும் இருக்கும் (உழிஞ்சில் = வாகை). அங்கு உட்புறம் வாடிய வளைந்த மூக்கையுடைய நத்தை (நொள்ளை நத்தை) வாகை மரத்தின் சொர சொரப்பான அடியில் பொதிந்து இருக்கும்.
இந்தப் பாடலில், நடுகல்லுக்கு அன்றைய தமிழர்கள் தந்த மரியாதையைப் பற்றிக் கூறுகின்றார் புலவர்,
இல் அடு கள்ளின் சில் குடிச் சீறூர்ப்
புடை நடுகல்லின் நாள் பலி யூட்டி
நன்னீர் ஆட்டி நெய்ந் நறைக் கொளீஇய
மங்குல் மாப் புகை மறுகுடன் கமழும் (புறநானூறு 329, 1-4)
“வீடுகளில் கள்ளைச் செய்யும் சில குடிகளையுடைய சின்ன ஊரில், நடுகல்லிற்கு தினமும் படைத்து, நல்ல நீரால் அதைக் கழுவி, நறுமண எண்ணையைக் கொண்டு விளக்கு ஏற்றுவார்கள் (நெய் = எண்ணை, நெய்). அதன் கருமையான பெரும் புகையானது நறுமணத்தோடு தெருக்களில் கமழும்.”
தன்னுடைய அருமையான பெண், அவளுடைய தலைவனுடன் உடன்போக்கில் பாலை நிலத்தின் வழியே சென்றதால், வருந்தி, பாலை நிலத்தில் உள்ளவற்றைப் பற்றிக் கூறுகின்றாள் ஒரு தாய்,
நடுகல் பீலி சூட்டித் துடிப் படுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும்
போக்கு அரும் கவலைய புலவு நாறு அரும் சுரம் (அகநானூறு 35)
“நடுகற்கள் மயில் தோகையால் அலங்கரிக்கப்படும். துடி அடித்து அரிசிக் கள்ளை அவற்றின் மீது ஊற்றுவர். செம்மறி ஆடுகளைப் பலி கொடுப்பார்கள் (துரூ = செம்மறி ஆடு). போக்குவரத்து இல்லாத வளைந்த பாதைகளை உடையது இறைச்சி நாற்றம் அடிக்கும் அரிய பாலை நிலம்.”
ஓதலாந்தையார் யானையின் தும்பிக்கைச் சொர சொரப்பை, எழுத்துக்கள் பொறித்த நடுகல்லுடன் ஒப்பிடுகின்றார்,
விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
எழுத்துடை நடுகல் அன்ன விழுப் பிணர்ப்
பெருங்கை யானை (ஐங்குறுநூறு 352, 1-3)
“,சிறப்பாக அம்பினைத் தொடுப்பதில் வல்ல வீரர்கள் வில்லால் எய்து , இறந்துபட்டோரின்
பெயர் பொறித்த எழுத்துகளைக் கொண்ட நடுகல்லைப் போன்று, சிறப்பும் சொரசொரப்பும் உள்ள
பெரிய கையை உடைய யானை தும்பிக்கை.”
மலைபடுகடாம் என்ற ஆற்றுப்படை நூலில் ஒரு பாணர் இன்னொரு பாணருக்கு நன்னன் என்ற குறுநில மன்னனின் நாட்டுக்கு செல்லும் வழியைப் பற்றி கூறும் பொழுது நடுகற்களை அவர் காண்பார் என்றுக் கூறுகின்றார்,
ஒன்னார்த் தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்தென
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
செல்லா இல்இசைப் பெயரொடு நட்ட
கல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே
இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக … 390
தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்துத் துனைமின் (மலைபடுகடாம் 386 – 391)
புறமுதுகு இட்டவர்களை ஏசி நல்ல முறையில் தம் உயிரைக் கொடுத்த வில்லின் அம்பை உடைய வீரர்களின் நீங்காத பெரும் புகழுடைய பெயர்களோடு நடுகற்கள் பல உண்டு வளைந்த பாதையில். உங்களுடைய பாட்டு இன்பத்தைத் தரும் வகையில் தாளத்தோடு பாடுங்கள். தொன்றுத் தொட்டு வழங்கும் மரபு முறைப்படி உங்கள் யாழை இயக்கி, நடுகற்களை வணங்கி விட்டு நீங்கள் செல்லுங்கள்.
தன்னுடைய நண்பனான மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி இறந்தப்பின் ஔவையார் மிகவும் வருத்திப் பாடுகின்றார்,
இல்லாகியரோ காலை மாலை
அல்லாகியர் யான் வாழும் நாளே
நடுகல் பீலி சூட்டி நார் அரி
சிறு கலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய
நாடு உடன் கொடுப்புவும் கொள்ளாதோனே? (புறநானூறு 232)
“காலையும் மாலையும் இல்லாமல் போகட்டும்! என் வாழ் நாள் இல்லாமல் போகட்டும்! தன் நடுகல்லில் மயில் தோகையைச் சூட்டி சிறிய கிண்ணத்தில் நாரால் வடித்த மதுவை கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்வானா, ஓங்கிய சிகரங்களையுடைய விளங்கும் மலைகள் நிறைந்த நாட்டையே பிறர் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளாதவன்?”
கோபெருஞ்சோழன் இறந்தப் பின் அவனுக்கு நடுகல் நட்டினார்கள். மன்னனின் நண்பரான புலவர் பொத்தியார் அப்பொழுது வருந்திப் பாடுகின்றார்,
நினையாக் கூற்றம் இன் உயிர் உய்த்தன்று
பைதல் ஒக்கல் தழீஇ அதனை
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்
கெடுவில் நல்லிசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே (புறநானூறு 221, 8-13)
“ஆராய்ந்துப் பார்க்காத கூற்றுவன் அவனது இனிய உயிரை எடுத்துக் கொண்டு விட்டான். வருந்தும் உங்கள் குடும்பத்தை அணைத்துக் கொண்டு வாருங்கள், உண்மையைப் பேசும் புலவர்களே! நாம் கூற்றுவனைத் திட்டுவோம். நம்முடைய புரவலன் இறந்ததால் இந்த பெரிய உலகம் வருந்துகின்றது (அரந்தை = துன்பம்). குறையில்லா நல்ல புகழையுடையவன் (நல்லிசை = நல்ல புகழ்) நடுகல்லாகி விட்டான்.”
மதுரை மருதன் இளநாகனார் பாலை நிலத்தில் உடைந்த நடுகல் ஒன்றைப் பற்றி விவரிக்கின்றார் இந்தப் பாடலில்,
மரம் கோள் உமண்மகன் பெயரும் பருதிப்
புன்தலை சிதைத்த வன்தலை நடுகல்
கண்ணி வாடிய மண்ணா மருங்குல்
கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து (அகநானூறு 343, 47)
“உப்பு வணிகரின் (உமண்மகன் = உப்பு வணிகர்) மர மாட்டு வண்டியின் சக்கரம் வலுவான நடுகல்லின் மெல்லிய மேல் பகுதியை சிதைத்து விட்டது. இட்ட மாலை வாடி, நடுகல் கழுவப்படாமல் உள்ளது (மண்ணா = கழுவாது). கூர்மையான உளியால் அதன் மீது செதுக்கிய எழுத்துக்கள் அழிந்து விட்டன.”
வேட்டுவ குடியினர் முல்லை (பாலை ) நிலத்தில் வாழ்ந்தவர்கள்
"காந்தள் அம் கண்ணி கொலை வில் வேட்டுவர்
செம் கோட்டு ஆமான் ஊனொடு காட்ட
மதன் உடை வேழத்து வெண் கோடு கொண்டு
பொன் உடை நியமத்து பிழி நொடை கொடுக்கும்
குன்று தலைமணந்த புன்புல வைப்பும்" (பதி 30/ 9-13)

உரை :
காந்தள் பூவால் தொடுக்கப்பட்ட தலைமாலையினையும், கொலைபுரியும் வில்லினையும் கொண்ட வேட்டுவ குடியினர்
செம்மையான கொம்பினையுடைய காட்டுப்பசுவின் இறைச்சியோடு, காட்டிலுள்ள வலிமையுடைய யானைகளின் வெண்மையான தந்தங்களையும் எடுத்துக்கொண்டு, அவற்றைப் பொன்னை உடைய கடைத்தெருக்களில் கள்ளுக்கு விலையாகக் கொடுக்கும் குன்றுகள் கூடிக்கிடக்கும் புன்புலமாகிய பாலைநில ஊர்களின் மக்களும் .(புன் புலம் -முல்லை ).
'கான் உறை வாழ்க்கை கத நாய் வேட்டுவன்
மான் தசை சொரிந்த வட்டியும் ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய'- (புறம் 33/1-3)
காட்டில் வாழும் வாழ்க்கையுடைய ,சினமுள்ள நாயையும் உடைய வேட்டுவ குடியை சேர்ந்த ஒருவன் மான் தசைகளை கொண்டு வருவர் இடைச்சியர் தயிரை குடங்களில் கொண்டு வருவர்.
வேட்டுவ குடியினர் முல்லை நிலத்தில் (காடு =கான் ) வாழ்ந்தார்கள் என்பதை இச் செய்யுள் கூறுகிறது .
' ......................................... .வெவ்வினை
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ' - (அகம் 387/8-9)
கடுமையான வினைகளையுடையரும்(போர் தொழில் ),காடுகளில் தங்கிக்கிடப்பாருமாகிய வேட்டுவ குடியினரின் கூப்பீட்டைக் கேட்டு அஞ்சி ..
வேட்டுவ குடியினர் முல்லை நிலத்தில் (பாலை ) வாழ்ந்தார்கள் என்பதை இச் செய்யுள் கூறுகிறது .
சிலப்பதிகாரம் வேட்டுவ வரி வேட்டுவ குடியினரை எயினர் குலம் என்றும் தொல்குடியினர் என்றும் கூறுகிறது .
நாட்டுப்புற மாக்களும் வேட்டுவ தலைவரும்
குறும்பருங் .......' பெருங்கதை ,உஞ்சை காண்டம் (வரி 54 -55)
காட்டில் வாழும் வேட்டுவ குடி தலைவரும் ,வேட்டுவ குடி தலைவரின் வீரர்கள் ...
வேட்டுவ குடி தலைவரின் வீரர்களை குறும்பர் என்று கூறுவதால் வேட்டுவ குடி தலைவர் எயினர் என்பதையும் அவர் வீரர்கள் எயினர் என்பதையும் உறுதிப்படுத்துகிறது .
'காட்டகத் துறையும் கடு வினை வாழ்க்கை
வேட்டுவர் பயின்ற விடமற் றிந்நிலம் 'பெருங்கதை ,உஞ்சை காண்டம் (வரி 107 -108)
காட்டில் வாழ்ந்து வருபவரும் கடுமையான தொழில்கள் செய்யும் வாழ்க்கை உடைய வேட்டுவ குடியினர் வில் பயிற்சி மூலம் பயின்ற நிலம் .
'ஆய்வேளையும் குறும்பரையும் மடல் மாரு யளித்தோட்டி காட்டு குறும்பு சென்றடைய நாட்டு குறும்பில் செரு வென்று '
(வேள்வி குடி செப்பேடு ).
ஆய்வேளின் வீரர்களை குறும்பர் என்று கூறுவதால் ஆய்வேள் எயினர் என்பதையும் அவர் வீரர்கள் எயினர் என்பதையும் உறுதிப்படுத்துகிறது .எயினர்களின் அரணை குறும்பு என்று அழைக்க படும் (அகம் -319 /13)
காட்டில் வேட்டுவ குடியை சேர்ந்தவர்களின் பாசறை :
'கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில்
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி
வேட்டு புழை அருப்பம் மாட்டி காட்ட
இடு முள் புரிசை ஏமுற வளைஇ
படு நீர் புணரியின் பரந்த பாடி' (முல்லை பாட்டு-24 -28 )
காட்டாறு சூழ்ந்த அகன்ற நெடிய காட்டினில்,நெடுந்தொலையும் மணக்கும் பிடவ மலரோடு (ஏனைப்)பசிய தூறுகளையும் வெட்டி, வேட்டுவரின் சிறு வாயில்களையுடைய அரண்களை அழித்து, காட்டிலுள்ள இடுமுள்ளாலான மதிலைக் காவலுறும்படி வளைத்து,ஒலிக்கின்ற கடலலை போல் பரந்த பாசறை .

No comments:
Post a Comment