Saturday, 26 November 2016

பட்ட பெயர்கள் (உடையார் ,வன்னியர் ,நயினார் ,கவுண்டர் ,தேவர் ).



பட்ட பெயர்கள் (உடையார் ,வன்னியர் ,நயினார் ,கவுண்டர் ,தேவர் ).

கவுண்டர் என்ற பட்ட பெயர் வேட்டுவர் இனம் ,பள்ளி இனம் ,ஒக்கழியர் இனம் (கன்னடர் ), அனுப்பர் (கன்னடர் ),குறும்பர் (கன்னடர் ),வெள்ளாளர் இனம் போன்ற இனங்களுக்கு இருந்ததை கல்வெட்டுகள் கூறுகிறது .

தேவர் என்ற பட்ட பெயர் வேட்டுவர் இனம் ,பள்ளி இனம் ,ஒக்கழியர் இனம் (கன்னடர் ), வெள்ளாளர் இனம்,மறவர் இனம் .அகம்படி இனம்,வலையர் இனம், கள்ளர் இனம் போன்ற இனங்களுக்கு இருந்ததை கல்வெட்டுகள் கூறுகிறது .

வன்னியர் என்ற பட்ட பெயர் வேட்டுவர் இனம் ,பள்ளி இனம் ,ஒக்கழியர் இனம் (கன்னடர் ), வலையர் இனம் ,உடையார் இனம் போன்ற இனங்களுக்கு இருந்ததை கல்வெட்டுகள் கூறுகிறது .

நயினார் என்ற பட்ட பெயர் வேட்டுவர் இனம் ,பள்ளி இனம் ,ஒக்கழியர் இனம் (கன்னடர் ), உடையார் இனம் போன்ற இனங்களுக்கு இருந்ததை கல்வெட்டுகள் கூறுகிறது .

உடையார் என்ற சொல் பட்ட பெயர் .இச்சொல் இன பெயர் கிடையாது

'..கரடி வேட்டுவரில் மானபரன பல்லவரயைன் பிள்ளை திருவெண்உடையார் வெஞ்சமகூடல் ஆளுடையார் விகிர்தருக்கு...'
(கரூர் கல்வெட்டு ,கொங்கு சோழர் ,கி பி 1248).
'...தென் பூவானிய நாட்டில் குளகுறிச்சியில் ஊராளிகளில் பாத வேட்டுவரில் பிள்ளப்பன் உடையனேன் என் ஏரியில் --- '
(சேலம் கல்வெட்டு ,கொங்கு பாண்டியர் ,கி பி 1292)
'..கொண்ட நாடுடைய வெட்டுவதி அரையனான மல்லன் வெங்கடவன்..'
(தஞ்சாவூர் கல்வெட்டு(S.I.I,Vol XII,P-34),பல்லவ மன்னர்-நிருபதுங்க வர்மன் ,கி .பி 872).
கொண்ட நாடு + உடைய =கொண்ட நாடுடைய
இந்த மூன்று கல்வெட்டுகளும் வேட்டுவ குலத்தை சேர்ந்தது.உடையார் என்ற பட்ட பெயர் வேட்டுவ குலத்துக்கு இருப்பதை இந்த கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.
'...வீரநஞ்சராயர் உடையார் ...'
(திருப்பூர் கல்வெட்டு ,மைசூர் அரசர் ,கி .பி 1489) மைசூர் அரசர்களுக்கு(கன்னடகாரர்) உடையார் என்ற பட்ட பெயர் இருந்ததை இந்த கல்வெட்டு மூலம் அறியலாம்.
'...பார்க்வகோத்திரத்து மிலாடுடையான் அகலங்கன் மலையராதித்தனான செம்பியன் மிலாடுடையானேன் ......செம்பியன் மிளாடுடையனேன்...'
(பேளூர் கல்வெட்டு ,ஆதித்தன் 2,கி .பி 959). இந்த கல்வெட்டு உடையார்(பட்ட பெயர் ) இனத்தை சேர்ந்தது .
மிலாடு + உடைய = மிளாடுடையனேன்
உடைய(உடைமை ) என்ற சொல்லில் இருந்து உடையார் என்ற சொல் வந்தது.

வன்னியர் என்ற சொல் பட்ட பெயர் .இச்சொல் இன பெயர் கிடையாது.

வன்னியர் என்ற சொல் பட்டபெயர் வன்னியர் என்ற சொல் இன பெயர் கிடையாது
'....கொடைக்கு கருணன் சத்தியத்துக்கு அரிச்சந்திரன் மறத்துக்கு வன்னியன் அழகுக்கு மன்மதன் பரிக்கு நகுலன் கரிக்கு உதையன் வில்லுக்கு விசையன் மல்லுக்கு வீமன் ...' (அல்லால இளையன் செப்பேடு ,கி பி 16) இங்கு வன்னியர் என்ற சொல் இனத்தை குறிக்கவில்லை.இங்கு வன்னியர் என்ற சொல் வீரர் என்று கூறுகிறது .
'...ஆத்தூர் மாந்தபடை வேட்டுவன் வன்னிய கவுண்டன் சாட்சி ..' (தென்னிலை செப்பேடு ,கி பி 1775) இங்கு வன்னிய கவுண்டன் என்பவர் மாந்தபடை வேட்டுவ குலத்தை சேர்ந்தவர் என்று தென்னிலை செப்பேடு கூறுகிறது .இங்கு வன்னிய கவுண்டன் என்ற சொல் சாதி பெயர் கிடையாது . இன்று வேட்டுவர்களில் வன்னி வேட்டுவ குலத்தினர் வாழ்ந்து வருகிறார்கள் .
வன்னி முத்தரையர்களை பற்றி கோவை ,கணியூர் செப்பேடு கூறுகிறது (கி பி 16)
விஜயநகர அரசர் 'ராஜா வன்னிய ராஜா ஸ்ரீ மல்லிகார்ஜுன தேவமகாராயர் ' பற்றி வில்வநல்லூர் செப்பேடு கூறுகிறது (தமிழ்நாடு செப்பேடுகள் தொகுதி -2)
மலையமான் இனத்தை (உடையார் இனம் ) சேர்ந்த ஒருவரின் பெயர் 'வன்னிய தேவேந்தர மலையமான் ராமன் போர் கிடாய் கொடாதான் ' என்று கல்வெட்டு (ARE 215 of 1934-35) கூறுகிறது .
கள்ளர் இனத்தை சேர்ந்த ஒருவரின் பெயர் 'வன்னியர் மிசிரிகண்டன் பொன்னம்பலநாத தொண்டைமான் 'என்று கல்வெட்டு ( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-845,ஆலங்குடி )கூறுகிறது .
'...இந்த நாடுகளையும் அறியாமல் செங்கீரையில் பிள்ளன் விசையரையனும் புறம்பன் வன்னியரையனும் ஆலங்குடி மழவராயர் படையை அழைத்து வந்து நாட்டிலே ...'( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-818,திருமெய்யம் ) இங்கு 'வன்னியரையனும்' என்ற சொல் இனத்தை குறிக்கவில்லை .
'.....புரட்டாதி மதம் 14 நயினார் மாவலிவாணதிராயர் காரிய காரியத்துக்கு .........'( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-815,திருமெய்யம் ,கி பி 15 ) மாவலி வாணதிராயருக்கு 'நயினார்'என்ற பட்ட பெயர் இருந்ததை இந்த கல்வெட்டு கூறுகிறது .
'......நெடுவாசலில் வன்னியரில் மாவலிவாணதிராயர் மக்களில் ......காலிங்கராயரும் ..' ( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-971,ஆலங்குடி )
இங்கு வன்னியரின்  என்ற சொல்  வன்னி வேட்டுவ குலத்தை குறிக்கும் .வன்னி வேட்டுவ குலத்துக்கும் , பள்ளி (வன்னியர் ) சாதிக்கும் எந்த தொடர்பும் கிடையாது .

'...இராகுத்த மிண்டன் சொரிவன்னியர் சூரியன் புவனேக வீரன் பதினெட்டு வன்னியரை முதுகு புரங்கண்டான் காங்கேயனை வென்று கடையில் விலை கொண்டான் வேட்டுமாவலிக்கு விரிந்திடோம் பாண்டியன் ..'
( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-758,திருமெய்யம் ,கி பி 15 )
வேட்டுமாவலிக்கு -வேட்டுவமாவலிக்கு

வன்னியர் என்ற பட்டபெயர் வேட்டுவர் இனம் ,மலையமான் இனம் (உடையார் இனம் ),கள்ளர் இனம் ,முத்தரையர் இனம் ,விஜயநகர் அரசர் (கன்னடர் ) போன்ற சாதிகளுக்கு இருந்ததை கல்வெட்டுகள் கூறுகிறது .

மல்லன் என்ற சொல் இன பெயர் இல்லை:
'.. இடிகரையில் இருக்கும் வெள்ளாளன் பை யைய்யரில் மள்ளன் சிறியான் ' என்பவரை பற்றி கல்வெட்டு (கோவை ,கி பி 13) கூறுகிறது . இக்கல்வெட்டு வெள்ளாளர் இனத்தை சேர்ந்தது .
'...கொண்டநாடு உடைய வேட்டுவதி அரையர் மல்லன் வேங்கடவன் ' என்பவரை பற்றி கல்வெட்டு(தஞ்சாவூர் ,
(S.i.i XII page-34). இக்கல்வெட்டு வேட்டுவர் இனத்தை சேர்ந்தது .
'...மீனவன் தமிழதியயரையனன மல்லன் ஆனந்தனுக்கு .'( புது கோட்டை கல்வெட்டு -63).இக்கல்வெட்டு முத்தரையர் இனத்தை சேர்ந்தது .
மற்போர் செயும் வீரனை 'மல்லன் ' என அழைக்கபட்டது.மேலும் 'வளமானவன் ' என்ற அர்த்தத்தில் பயன்படுத்தபட்டது .

அரசர்கள் தங்களது அரசியல் அதிகாரிகளுக்கு காலிங்கராயர் ,மழவராயர் ,வாணராயர் ,இருங்கொளன்,காங்கேயன் ,வேணாடுடையான்,குருகுல ராயர் ,மூவேந்த வேளான்,வேளான்,பாண்டியனார் ,சேரமான் ,சோழனார்,தொண்டைமான்,பல்லவராயர், போன்ற பெயர்களை வழங்கி வந்தனர்.

Sunday, 21 August 2016

வேட்டுவர் நடுகற்கள்

                                  வேட்டுவர் நடுகற்கள்



வேட்டுவர் நடுகற்கள்
ஆந்தை வேட்டுவ குலம்(கீரனூர் ஆந்தை வேட்டுவ குலம்,கீரந்தை வேட்டுவ குலம் ):
"ஆந்தை பொன்னி மகன் மோடையன்" தொறுமீட்டு பட்ட நடுகல் கி.பி 911 - (No. 45/1971) - செங்கம் அய்த்தாம்பாளையம்
ஆந்தைப்பாடி ஊர் - கி.பி. 7ஆம் நூற்றாண்டு - (No 77/1971) - செங்கம் தண்டம்பட்டி
ஆந்தை வேட்டுவ குல படை வீரர்கள் போர் பாசறை (பாடி வீடு ) அமைத்த ஊரை ஆந்தைபாடி என அழைக்கபட்டது .ஆந்தை வேட்டுவ குலத்தை கூகை குலம் என வேட்டுவ கலிவெண்பா கூறுகிறது .

பெரும்பாணபாடி நாட்டை(தமிழ் மண்ணின் வட பகுதி) சேர்ந்த நரசிங்கராயர், சந்தணராயர், பல்லவராயர், பூவலவராயர் இந்த நால்வரும் சேர ,பாண்டிய மற்றும் சோழ வேட்டுவ அரசர்களுக்கு படை உதவி அளித்தனர் .இதனால் அரசர்கள் இந்த நால்வருக்கும் குறிப்பு நாட்டில் இருந்த 32 கிராமங்களை ஆட்சி ,அதிகாரம் செய்வதற்கு அளித்தனர் என்று குறிப்புநாட்டுச் செப்பேடு கூறுகிறது .வேட்டுவ குலத்தவர்களை குரு குலத்தவர்கள் என்று புராணங்கள் கூறுகிறது .இந்த நான்கு பெரும் ஆந்தை வேட்டுவ குலத்தை( கீரந்தை ,கீரனூர் ஆந்தை ) சேர்ந்தவர்கள் . இவர்கள் தமிழ் மண்ணின் வட பகுதியில் இருந்து கொங்கு நாட்டுக்கு வந்தவர்கள் .
மூலம்
"சுபமஸ்து ஈஸ்பரி அம்மன் மகாமண்டலேஸ்வானரிய தனவிபாடன பாசைக்கரிதப்பு வராதகண்டன் யெம்மண்டலம் திரை கொண்டருளிய ராஜாதி ராஜன் ராஜபரமேஸ்வரன் ராஜமார்த்தாண்டன் ராஜகெம்பீரன் ராஜபுங்கரன் ராசவச்சிரதன் சேரன், சோளன், பாண்டியன் மூவராசாக்களும் ஆரிலொரு கடமைகொண்டு அசையாமணிகட்டி ராஜியபரிபாலனம் பண்ணுகின்ற சாலிவாகன சகார்த்தம் 1815 இதன்மேல் செல்லாநின்ற ஸ்ரீமுக ஆவணி 20தேதியும், சுக்கிரவாரமும், தசமியும் அமுர்தகெளிகையும் கூடின சுபதினத்தில் ஆளுத மகாசுவாமி மூவராசாக்களும் செங்கோலதிகாரம் செலுத்துகின்ற நாளையில் வடதேசத்திலிருந்து குருகுலத்து வேட்டுவ ராஜாக்கள் எங்களுக்கு உதவியாகத் தருவிச்சு இருந்ததினாலே யிவர்களில் நரசிங்கராயர், சந்தணராயர், பல்லவராயர், பூவலவராயர் இந்த நாலுபேருக்கும் குறிப்புநாடு 32 கிராமத்துக்கும் சதிர்மத்தியில் கைத்தமலை, அருளுமலை, வட்டமலை, திட்டமலை, பவளமலை இந்த 5 மலையுள்ள சதுர்மத்தியில் வடக்கு காவல காஞ்சிநாட்டுக்கு சேர்ந்த பாரியூர் எல்லைக்குந் தெற்கு முடச்சியூர் எல்லை பவளமலைக்கும், தெற்கு பூந்துரைநாட்டில் பெருந்துரை எல்லை எழுத்துப்பாரை கருங்காட்டுக்கும், மேற்கு காங்கயநாட்டெல்லைக்கும், ஆருநாட்டில் நம்பியூர் எல்லைக்கும், கிழக்கு இந்த நால்பாங்கிலேயும் அங்கமச்ச அடையாளம் சிலாசாசனங்கள் உவிக்குளியும், செப்புப்பட்டயமும் எழுதிக்கொடுத்து நாலுபேருக்கும் குறிப்புநாடு முப்பத்திரண்டு கிராமமும் சர்வ அதிகாரம் பண்ணிக்கொண்டு துஸ்டநிர்க்கிரக சிஸ்டபரிபாலனம் செய்துகொண்டு தரும நீதியாய் புத்திர பவுத்திர பாரம் பரிகதையாய் சுகமே இருக்கும் படிக்கு இன்னால்வருக்கும் பட்டாபிஷேகம் பண்ணி நாட்டாரென்றும், பட்டக்காரரென்றும், பாளையக்காரரென்றும் நிலைநாட்டுப்பண்ணி வச்சிருக்கிறோம். குறிப்புநாடு 32 கிராமத்துக்கும் விபரம், குருமந்தூர், கோசணம், செவியூர் அயிலூர், கொளப்பலூர், அலிங்கியம், முடச்சியூர், கலிங்கியம், ஆதியூர், சிருவலூர், குண்ணத்தூர், அளுக்குழி தாளுன்றி, திங்களூர், முத்தூர், நல்லூர், திருப்பூர், வாய்ப்பாடி, விஜயமங்கை, கூடலூர், சிருக்களிஞ்சி, செங்கப்பள்ளி, மண்ணறை, பாலதொளுவு, அல்லாளபுரம், வெள்ளரவழி, முகுந்தை, கந்தாகண்ணி கொடுமணல், அமுக்கியம், தெக்கலூர், ஊத்துளி இந்த 32 கிராமமும் சருவ அதிகாரம் பண்ணிக்கொண்டு சகமே யிருக்கும்படிக்கு நாங்கள் மூவராசக்களும் ஒரு மனசுடனே எழுதிக்கொடுத்த செப்பேடு பட்டயம் யிதுக்கு மதுரை மீனாக்ஷியம்மன், சொக்கனாத சுவாமி பூமி, ஆகாசம், சந்திர, சூரியர் சாக்ஷி இந்த சாசனப்பட்டயத்தை யிகளிதஞ் செய்தபேர்கள் காசி கெங்கைக்கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார்கள் ஸ்ரீராமஜெயம் "

காடை வேட்டுவ குலம் :
"கொங்கத்து எழுமாத்தூர் இருந்து வாழும் சாகடச் சிற்றன்" - கி.பி 9ஆம் நூற்றாண்டு - பல்லவ கம்பவர்மன் காலம் - (No 57/1971)

இன்று வாழ்ந்து வருகிற காடை வேட்டுவ குலத்தினரை குறுங்காடை வேட்டுவ குலம்,சாகாடை வேட்டுவ குலம் என கல்வெட்டுகளில் அழைக்கப்பட்டது .இன்றும் காடை வேட்டுவ குலத்தினரை குறுங்காடை வேட்டுவ குலம்,சாகாடை வேட்டுவ குலம் என அழைக்கபடுகிறது.சாகாடை வேட்டுவ குலத்தை சிவகாடை குலம் என வேட்டுவ கலிவெண்பாவில் பிழையாக எழுத பட்டு இருக்கிறது.

Saturday, 23 July 2016

வேட்டுவரும் பதினெண் குடிமக்களும்

 வேட்டுவரும் பதினெண் குடிமக்களும்

 வேட்டுவருக்கு பணிசெய்த மக்கள் பற்றி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சானங்கள் கூறுகிறது .

"தொண்டை மண்டல வரிசை மூவாறு குடிமக்கள் சுருதிநாள் முதலாகவே துங்கமிகு நாவிதன் குயவன் வண்ணான் ஓலை சொன்னபடி ஒச்சன் கண்தகம் மாலர்வகை ஐவர் வாணியர் மூவர் கந்தமலர் மாலைகாரர் கலைமீது சார் ஓட்டும் பாணன் தலைகாவல்புரி பள்ளி வலையன் பண்டுமுதல் ஊரன் மரிக்கும் இடையன் விருது பலகூறும் வீர முடையான் பதிநென்குடி மக்கள் அனைவரும் வேட்டுவர் பனிசெய்து பல முறைமையும் கொண்டு பரிவட்டமும் கட்டியே வருவர் இக்குவலைய மதிக்கவேதான் கூறரிய கச்சிவாழ் ஏகாம்பரர் ஆலய குமததில் இத்த லிபியே"

நாவிதன்,கணக்கர், குயவர்,வண்ணான்,வலையர் போன்ற மக்கள்கள் வேட்டுவ இனத்துக்கு பணி செய்ததால் வேட்டுவ நாவிதன் ,வேட்டுவ கணக்கர் ,வேட்டுவ குயவர் ,வேட்டுவ வண்ணான், வேட்டுவ வலையர் போன்ற பெயர்களில் இன்றும் அழைக்கபடுகிறார்கள்.இது போல பதினென்குடி மக்களும் வேட்டுவ இனத்துக்கு பணி செய்த மக்கள் ஆவார்கள்.வேட்டுவ குல தலைவருக்கு இடையர்கள் பணிசெய்ததை சங்க இலக்கியங்கள் கூறுகிறது .வேட்டுவ மன்னர்கள் ஆண்ட பகுதியில் உழவு தொழில் செய்தவர்கள்  பண்டுமுதல் ஊரன் என்பவர்கள் .

Tuesday, 19 July 2016

நாயன்மார்கள்

வேட்டுவ குலத்தை சேர்ந்த நாயன்மார்கள் :

 கோச்செங்கட் சோழ நாயனார்-சோழ வேட்டுவ குலம்
இடங்கழி நாயனார் -குடுமி வேட்டுவ குலம்
நரசிங்க முனையரைய நாயனார்-மின்ன வேட்டுவ குலம்
புகழ்ச்சோழ நாயனார்-சோழ வேட்டுவ குலம்
கண்ணப்ப நாயனார்-காளத்தி வேட்டுவ குலம்          

Saturday, 16 July 2016

மழகொங்கு வரலாறு


பருத்திபள்ளி நாடு (பருத்திபள்ளி ஊரை சுற்றி உள்ள பகுதிகள் ),ஏழூர் நாடு ( ஏழூர் ,கரடிப்பட்டி , பகுதிகள் ),வல்லவரையர் நாடு (நாமக்கல் கதிரானல்லூர்,மொஞ்சனூர் பகுதிகள் ),வாழவந்தி நாடு (மனப்பள்ளி ,மோகனூர் பகுதிகள் ),முலையூர் நாடு (கொல்லிமலைக்கு தென் கிழக்கு பகுதிகள் ),கொல்லிமலை நாடு(வேட்டம் பாடி ,தூசியூர் ,காளப்ப நாயக்கன்பட்டி,கொல்லிமலை பகுதிகள் ),ராசிபுர நாடு போன்ற சிறு நாடுகள் மழகொங்கத்தில் இருந்ததை கல்வெட்டுகள் கூறுகிறது . திருச்செங்கோடு ,கொக்கராயன் பேட்டை பகுதிகளை கீழ்கரை பூந்துறை நாடு என அழைக்க பட்டது . வேலூர் ,சோழசிராமணி கபிலர்மலை பகுதிகளை கீழ்கரை அரைய நாடு என என அழைக்க பட்டது.
பருத்திபள்ளி நாடு ,ஏழூர் நாடு,வல்லவரையர் நாடு ,ராசிபுர நாடு இந்த நாடுகளை சேல நாடு என அழைக்க பட்டத்தை கல்வெட்டுகள் கூறுகிறது .பருத்திபள்ளி நாடு ,ஏழூர் நாடு,பூந்துறை நாடுகளை நாடாள்வார் நாடு என அழைக்க பட்டத்தை கல்வெட்டுகள் கூறுகிறது. நாமக்கல் கதிர நல்லூர் பகுதியை சேர்ந்த மூஞ்சை வல்லவரையன் என்பவர் பழு வேட்டரையரின் மகளை திருமணம் செய்தவர் இதை விருத்தாசலம் கல்வெட்டுகள் மூலம் அறியலாம் .முதலாம் பராந்தக சோழனின் பட்டத்தரசி பழுவேட்டரையரின் மகள் என்பதை செப்பேடுகள் கூறுகிறது .
'ஸ்ரீ கோக்கண்டன் மாந்தரனுக்கு செல்லா நின்ற ஆண்டு 8 இவ்யாண்டு பெருமாள் கீழ் வாழ்ந்து வரும் மழநாட்டான் மூர் கூற்றத்துக்கு கீழ் கூற்றில் எதகம்பாடி வெள்ளான் கூத்தன் காடி நிருத்தியான நெருப்பரை ஆசாரிகள் மகன் நிருத்தசூரன் தந்தையும் தாயாரையும் சாத்தி செய்வித்த கிணறும் வட்டும்'
(திண்டுக்கல் ,ஓட்டன்சத்திரம் கப்பலூர் தண்டபாணி கோயில் அருகே உள்ள தூண் ;கிபி 9)
மந்தரனுக்கு கீழ் பணியாற்றிய மழ கொங்கத்தை சேர்ந்த வெள்ளான் ஆசாரியார் என்பவர் பற்றி கூறப்பட்டு உள்ளது .மாந்தரன் என்பவர் சேர வேட்டுவ குலத்தின் கிளை குலமான மாந்த வேட்டுவ குலத்தை சேர்ந்தவன் .
முதலாம் ராசா ராசா சோழனின் ஆட்சியில் கொள்ளிடம் வடகரையில் இருந்து கொல்லிமலை வரையில் இருந்த பகுதிகளை 'மழ நாடான இராஜாஸ்வரய வளநாடு 'என அழைக்க பட்டது .
'பூ வரியும் பொழிற் சோலை காவிரியை கடந்திட்ட அழகமைந்த வார் சிலையின் மழகொங்க மடிப்பெடுத்து மீண்டொலிய மணிஇமைக்கு மெலிலமைந்த நெடும்புரிசை பாண்டிகொடுமுடி சென்றெய்தி'(பாண்டியர் செப்பேடுகள் ,கிபி 8)
ஆக நாமக்கல் பகுதிகளை மழகொங்கம் என அழைக்க பட்டதை இந்த செப்பேடு உறுதிபடுத்துகிறது . மழகொங்கம் சோழ நாட்டின் எல்லையாக இருந்தது .மழகொங்கம் பகுதியில் 'மழபாடி' என்ற ஊர் வேட்டுவ குலத்தின் காணியாக இருந்ததை சேலம் சங்ககிரி கல்வெட்டு (கிபி 13) கூறுகிறது .
புல்லை வேட்டுவ குலத்தவர்கள் ,மூல வேட்டுவ குலத்தவர்கள்,இரும்புலி வேட்டுவ குலத்தவர்கள்,பொன்ன வேட்டுவ குலத்தவர்கள்,பாண்டிய வேட்டுவ குலத்தவர்கள் ஆகியோர் மழகொங்கம் பகுதிகளை ஆண்டார்கள் என்பதை இப் பகுதியில் கிடைத்த கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது .
'ஸ்வஸ்தி ஸ்ரீ பரகேசரி செங்கோல் பற்றிய ஆண்டு ஐந்தில் திரு வேங்கைவாசல் சிவருக்கு விலை மா மேல் மாத ....க்கு நாதன் மழநாட்டு வேள் வெச்சான் மேதக்கன நந்தா விளக்கு '( புதுகோட்டை அருகே திருவேங்கை வாசல் கோயில் ;கிபி 853).
பாண்டிய வேந்தன் தனக்கு ஒப்பான மழவ மன்னன் மகள் ஒருத்தியை மணந்தான் என்றும் அவளுக்கு பிறந்தவன் ஐடிலவர்மன் என்றும் அவனுக்கு பராந்தகன் என்ற பெயரும் உண்டு என்பதைவும் பாண்டிய செப்பேட்டு சுலோகங்கள் (14,17) கூறுகிறது .

விஜயாலய சோழனின் எழுச்சிக்கு காரணமாக இருந்தவர்கள் மழகொங்கத்தை (மழ நாடு ) ஆண்ட வேட்டுவ குலத்தவர்கள் . விஜயாலய சோழன் தஞ்சாவூரை பல்லவ மன்னன் கம்ப வர்மனிடம் இருந்து கைப்பற்றினான் என்று இத் தலூர் செப்பேடு கூறுகிறது . ஆதித்த சோழன் மழகொங்கத்தை (மழ நாடு ) ஆண்ட வேட்டுவ குலத்தவர்கள், கோநாட்டை ஆண்ட வேட்டுவ குலத்தவர்களை (குடுமி வேட்டுவ குலம்,வளவ வேட்டுவ குலம்,மலைய வேட்டுவ குலம்,காச வேட்டுவ குலம் நடுவில் வேட்டுவ குலம்,) மற்றும் சேர கொங்கு நாட்டை (அமராவதி கரை பகுதிகள் ) ஆண்ட வேட்டுவ குலத்தவர்களை கொண்டு கொங்கு நாட்டை ஆண்டு கொண்டு இருந்த கங்கர் மன்னர்களளை (ராசா வேடர் ) வென்று கொங்கு நாட்டை கைப்பற்றினான்.

போலி வரலாறுகள் ( பொன்னர் -சங்கர்,தீரன் சின்னமலை ,காளிங்க ராயன் அணை)


அண்ணன்மார்- ஓர் ஆய்வு

'வாங்கலான் பாட்டனவன் வாழ்வு சிறுகாற்புலியூர்
தீங்கு செய்த செல்லத்தான் சிற்றப்பன் -ஓங்கு தந்தை
நாமமொழி குன்றனையன் நன்னுநகர் சிற்றலை
தாமரை நாட்சியார் தாய் , என்னும் வெண்பா கிடைத்து இருக்கிறது என்று தி .அ முத்துசாமி கோனார் (கிபி 1858-1944)அவர்கள் எழுதிய கொங்கு நாடு அடைவு இயல் என்னும் நூலில் கூறி உள்ளார் .
கொங்கு வெள்ளாள இனத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில் சண்டை சக்கரவுகள் இருந்ததையும் ,அந்த குடும்பத்தினர் கொங்கு நாட்டில் கிழங்கு நாட்டு (வேட்டமங்கலம் ,நொய்யல் ,மறவாபாளையம்,துக்காச்சி ,வடிஉடையமங்கலம் ,ஆவுடையார் பாறை பகுதிகள் ) திருகாபுலியூர் (சிறுகாற்புலியூர்) என்னும் ஊரை சேர்ந்தவர்கள் என்பதையும் இந்த வெண்பா உறுதிபடுத்துகிறது . தங்காய் என்னும் தங்கை தன் மூத்தோரை அண்ணன்மார் என்றதால் இப்பெயர் வந்தது .
இந்த சண்டை சக்கரவுகள் 60 ஆண்டுகளுக்கு முன் நடந்தது தி .அ முத்துசாமி கோனார் எழுதிய கொங்கு நாடு அடைவு இயல் என்னும் நூலில் கூறி உள்ளார் .ஆக இந்த சண்டை சக்கரவுகள் ஏறக்குறைய கிபி 1870 ஆம் ஆண்டுகளில் நடந்து இருக்க வேண்டும் .நடந்த நிகழ்வுகளை வெண்பாவாக பாடியுள்ளார்கள் .

'கொங்கு நாட்டினராகிய இவர்களை பொன்னிவள நாடு என்று யாரோ ஒருவர் பாடி அச்சிட்டுயுள்ளார்கள் ' என்று தி .அ முத்துசாமி கோனார் எழுதிய கொங்கு நாடு அடைவு இயல் என்னும் நூலில் கூறி உள்ளார்.
வேட்டுவ இனத்தின் மீது வெறுப்பு உணர்வு கொண்ட ஒரு சாதி வெறி பிடித்த வெள்ளாளனாள் பாடி அச்சிட பட்டு இருக்க வேண்டும் .இதனால்தான் 'பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூலுக்கு ஆசிரியர் பெயர் இல்லாமல் அச்சிட பட்டு இருக்கிறது .
கிபி 1934-40 இந்த காலகட்டங்களில் 4855 வரிகள் ,128 பக்கங்களை கொண்டு 'பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூலை அச்சிட பட்டு இருக்க வேண்டும்.
கொங்கு கிழங்கு நாட்டு திருகா புலியூர் என்ற ஊரை சேர்ந்த ஒரு வெள்ளாள குடும்பத்தில் நடந்த சண்டை சக்கரவுகளை ,வேட்டுவ இனத்துக்கும் ,வெள்ளாள இனத்துக்கும் நடந்த சண்டையாக 'பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூலில் கூறப்பட்டு உள்ளது .மேலும் திருகா புலியூர் என்ற ஊரில் உழவு தொழில் செய்து வந்த பொன்னர் ,சங்கர் இவர்கள் பொன்னி வள நாட்டை சேர்ந்தவர்களாகவும்,மன்னர்களாகவும் கூறபடுகிறது .மேலும் வேட்டுவ குலத்தவர்களை கெட்டவர்களாகவும் ,பன்றி வளர்ப்பவர்களாகவும் ,நாய் பிடிப்பவர்களாகவும் ,பெண் பித்தர்களாகவும் ,நாகரிகம் இல்லாதவர்களாகவும் ,மோசமானவர்களாகவும் கூறபடுகிறது.
தமிழ் மண்ணை ஆண்ட வேட்டுவ குலத்தவர்களை இழிவுபடுத்தவும் ,உழவு தொழில் செய்த வெள்ளாளர்களை ஆண்ட பரம்பரையினர் என கூறி கொள்ளவும் 'பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ' எனும் நூல் உருவாக்க பட்டு உள்ளது . இந்த நூலை அடிப்படையாக வைத்து அண்ணன்மார் சாமி கதை ,குன்னுடையன் கதை ,தங்காள் கதை என பலநூல்களை எழுதி விட்டு இந்த நூல்கள் ஏட்டு பிரதியில் இருந்து எடுத்து எழுத பட்டதாக பச்சை பொய்யை கூறி இருக்கிறார்கள் . 'வெட்ட வெட்ட தலையும் ' என பொன்னர் ,வேட்டுவருக்கு வரம் கொடுத்ததை உண்மை என மக்களை நம்ப வைப்பதற்கு 'வெட்ட வெட்ட தலைக்கும் வேட்டுவ படை ' எனும் போலிபழமொழிகளை மக்கள் மத்தியில் பரப்பி விட்டு இருக்கிறார்கள் .
அண்ணன்மார் (பெரியண்ணன் -சின்னணன் ) கடவுள்களோடு ,அண்ணன்மார்(பொன்னர் -சங்கர் ) களை தொடர்பு படுத்தி வுள்ளர்கள் .
மணப்பாறை பகுதியில் இருந்த அண்ணன்மார் (பெரியண்ணன் -சின்னணன் ) கடவுள்களை முத்தரையர் இனத்தினர் ஆரம்பத்தில் வழிபட்டு வந்தார்கள் .காலபோக்கில் இறந்த முத்தரையர் இனத்தை சேர்ந்த முன்னோர்களுக்கு அந்த கோயில்களில் முத்தரையர் இனத்தினர் கற்களை நட்டு வழிபட்டு வந்தார்கள். வெள்ளாளர்கள் உருவாக்கிய கட்டு கதையை (பொன்னழகர் என்னும் கள்ளழகர் அம்மனை ) அண்ணன்மார் (பெரியண்ணன் -சின்னணன் ) கடவுள்களோடு தொடர்பு படுத்திய பிறகு முத்தரையர் இனத்தை சேர்ந்த கற்களை பொன்னர் -சங்கர் உடைய கற்களாக எழுதி கொண்டார்கள் .

அண்ணன்மார் (பெரியண்ணன் -சின்னணன் ) கதை :
அண்ணன்மார்கள் (பெரியண்ணன் -சின்னணன் ) பர்வத ராஜா குலத்தை சேர்ந்தவர்கள் .இவர்களுடைய தங்கை பெயர் லோக்கமதா .பல்லவர்கள் உதவியோடு ஜைனர்கள் பர்வத ராஜா குலத்திற்கு தீங்கு செய்து வந்தார்கள் .இதனால் அண்ணன்மார்கள் (பெரியண்ணன் -சின்னணன் ) தீங்கு செய்தவர்களை அளிப்பார்கள் .பிறகு பாண்டிய நாட்டில் விசர் என்னுமிடத்தில் அண்ணன்மார்கள் (பெரியண்ணன் -சின்னணன் ) மற்றும் லோக்கமதா இவர்களுக்கு சிலை வைத்து வழிபட்டதை பற்றி கூறுகிறது என்று மு அருணாசலம் தனது நாட்டுபுறபாடல் எனும் நூலில் (கிபி 1976) கூறியுள்ளார் .
வசந்தபுரம் ,கவுண்டம்பாளையம் ,எழுமாத்தூர் போன்ற இடங்களில் உள்ள அண்ணன்மார்கள் (பெரியண்ணன் -சின்னணன் ) கடவுள்களை வேட்டுவ இனத்தினர் வழிபட்டு வருகிறார்கள் .

தீரன் சின்னமலை வரலாறு:

கிபி 1968 யில் புலவர் குழந்தை என்பவர் தீரன் சின்னமலை என்ற கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கி ஆங்கி லேயர்களை எதிர்த்து போர் செய்தார் என்று போலி வரலாறுகளை உருவாக்கினர். பிறகு வந்த வெள்ளாள வரலாற்று ஆசிரியர்கள் தீரன் சின்னமலை என்பவர் கோட்டையை கட்டி ஆண்டர் என்று எழுதினார்கள் .
காவல வேட்டுவ இனத்தை சேர்ந்த பட்டாலி வேட்டுவ குலத்தை சேர்ந்த அனுமாந்த கவுண்டர் என்பவர் பட்டாலி ஊரில் தனக்கு சொந்தமான நிலங்களை ,வெள்ளாள இனத்தை சேர்ந்த தீர்த்தகிரி சக்கரை கவுண்டர் என்பவருக்கு விற்றதை பற்றி தீர்த்தகிரி சக்கரை பட்டயம் கூறுகிறது .ஆனால் புலவர் ராசு என்பவர் இந்த நிலத்தை ஆயுதங்கள் தயாரிக்கவும் ,வெள்ளையர்களை எதிர்த்து போரிட வீரர்களுக்கு பயிற்சி அளிக்க இந்த நிலத்தை விலைக்கு வாங்கினார் என்று ஒரு பச்சை பொய்யை உருவாக்கினர் .மேலும் தீர்த்தகிரி சக்கரை கவுண்டர் என்பவர் தீரன் சின்னமலையின் வம்சாவளியினர் என்று ஒரு பச்சை பொய்யை உருவாக்கினர்.
வெள்ளாள அரசியல்வாதிகள் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி தீரன் சின்னமலையை விடுதலை போராட்டகாரர் என்று கூறி தமிழ் மண்ணில் சிலையை வைத்து கொண்டார்கள்.


காலிங்கராயன் அணை -ஓர் ஆய்வு

கிபி 19 ,20 ஆம் நூற்றாண்டுகளில் ஒவ்வொரு சாதியும் தங்கள் தங்களுக்கு உயர்வு தேட புராணக்கதைகளையும், இலக்கியங்களையும் படைத்தனர்.இதன்படி கோனியம்மன் கோயிலை கட்டியவர்கள் கொங்கு வெள்ளாளர்கள் என்றும் கோவை நகரத்தை உருவாக்கியவர்கள் கொங்கு வெள்ளாளர்கள் என்றும் பவானி ஆற்றில் அணைகட்டி ,கால்வாய் வெட்டியது கொங்கு வெள்ளாளர்கள் என்றும் கூறி கொண்டதை கிபி 1801 இல் புக்கானன் என்பவர் சேகரித்த வாய்வழி செய்தி மூலம் அறியலாம் .
காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாள கவுண்டர் ) கிபி 1801 இல் புக்கானன் என்பவர் சேகரித்த வாய்வழி செய்தியை படித்து இருக்கிறார்கள் .பிறகு கிபி 1808 இல் மெக்கென்சி தொகுத்த காலிங்கராயன் வம்சவழியினர் செய்தியில் பவானி ஆற்றில் அணைகட்டி ,கால்வாய் வெட்டியது காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாளர்கள்) என்று தற்புகழ்ச்சிக்காக கூறி இருக்கிறார்கள் .
காலிங்கராயன் வம்சவழியினர்(டி -3044) செய்தியில் தற்புகழ்ச்சிகள்,கற்பனை புனையுகள் ,உண்மைகள் என கலந்து இருக்கிறது.(சொளியண்டான் வம்சவழியினர்(கொங்கு வெள்ளாளர்கள்,டி -2968) ஒருவர் மராட்டிய மன்னன் சிவாஜி யோட போர் செய்து இறந்தான் என்று கூறி இருப்பது தற்புகழ்ச்சி.இது போல தற்புகழ்ச்சிக்காக காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாளர்கள்) கூறி இருக்கிறார்கள் ).போலி பழம் பாடல்களையும் உருவாக்கி வைத்து இருக்கிறார்கள் .
புலவர் செ.இராசு என்பவர் போலி பட்டயத்தையும்,சாதி பட்டயத்தையும் இணைத்து காலிங்கராயன் அணை கட்டிய பட்டயம் என பெயர் வைத்து கொண்டார் .
'வாணியை அணையாக கட்டி ',அணை கட்டி ' போன்ற வார்த்தைகள் திருச்சி திருவானைகாவல் பாசூர் மட செப்பேட்டில் கிடையாது .பவானி ஆற்றில் அணைகட்டி ,கால்வாய் வெட்டியது காலிங்கராயன் வம்சவழியினர் என்று மக்களை நம்ப வைப்பதற்காக புலவர் செ.இராசு என்பவர் இந்த வார்த்தைகள் செப்பேட்டில் இருப்பதாக பச்சை பொய்யை எழுதி கொண்டார் .
பூந்துறை நாட்டில் உழவு தொழில் செய்து கொண்டு வந்த காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாள கவுண்டர் ) ,போர் தொழில் செய்து கொண்டு வந்த வெள்ளை வேட்டுவ குலத்தவர்களோடு போர் செய்து வெற்றி பெற்று பவானி ஆற்றில் அணை கட்டி ,கால்வாய் வெட்டினார் என்று கூறுவது தற்புகழ்ச்சி.
காஞ்சிகூவல் நாடு ,பூந்துறை நாடு ,அரைய நாடு ,கிழங்கு நாடு இந்த நான்கு நாடுகளில் கால்வாய் வெட்டப்பட்டு இருக்கிறது .குடுமி வேட்டுவ மன்னர் (கொங்கு சோழர் ),பாண்டிய வேட்டுவ மன்னர்(கொங்கு பாண்டியர் ) ,போசாளர் (கன்னடர் ) ஆட்சியில் இந்த நான்கு நாடுகளில் வேட்டுவ இனத்தை (பனைய வேட்டுவ குலத்தினர் ,மணிய வேட்டுவ குலத்தினர் ,கரைய வேட்டுவ குலத்தினர் ,மூல வேட்டுவ குலத்தினர் ,கிழங்கு வேட்டுவ குலத்தினர் ) சேர்ந்த ஊராளிகள் இந்த பகுதிகளை ஆண்டார்கள் என்பதை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது .வெள்ளை வேட்டுவ குலத்தினர் வடபரிசார நாட்டை ஆண்டார்கள் என்பதற்கும் ,வெள்ளோடு பகுதியில் வாழ்ந்தார்கள் என்பதை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது.வெட்டப்பட்ட கால்வாய் மன்னனுடைய பெயரில் இருக்க வேண்டும் .
'1913 -ஆம் வருஷம் ஊற்றுக்குழியின் மானேஜர் ஸ்மான் ஜே .எம் துரைசாமி பிள்ளை இங்கிலீஷில் எழுதி அச்சிட்டுள்ள ஜமீன் சரித்திர புத்தகத்திலும் அதை அனுசரித்த கோயமுத்தூர் ஜில்லா மானியுள் முதலிய ஆங்கில சரித்திரங்களிலும்
காலிங்கராயன் என்ற பெயர் காரணமும் அணை கட்டு விவரமும் இதற்கு முரண் படுகிறது.அவைகள் எந்த ஆதாரத்தின் மேல் எழுதியது என்று விளங்கவில்லை '
(கொங்கு நாடு அடைவு இயல் ,தி.அ முத்துசாமி கோனார் )
காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாள கவுண்டர் ) கிபி 1808 இல் மெக்கென்சி சேகரித்த செய்தியில் ஒரு வரலாறுகளை கூறி இருக்கிறார்கள் .கி பி 1913 -ஆம் வருஷம் ஊற்றுக்குழியின் மானேஜர் ஸ்மான் ஜே .எம் துரைசாமி பிள்ளை இங்கிலீஷில் எழுதி அச்சிட்டுள்ள ஜமீன் சரித்திர புத்தகத்தில் ஒரு வரலாறுகளை கூறி இருக்கிறார்கள் .ஆக காலிங்கராயன் வம்சவழியினர் எந்த ஆதாரமும் இல்லாமல் கூறி கொண்டது உறுதிப்படுகிறது .
பூந்துறை நாட்டில் உழவு தொழில் செய்து கொண்டு வந்த காலிங்கராயன் வம்சவழியினர் (கொங்கு வெள்ளாள கவுண்டர் ) பவானி ஆற்றில் அணை கட்டி ,கால்வாய் வெட்டினார் என்று கூறுவது தற்புகழ்ச்சி என்பது உறுதி படுகிறது.


கொங்கு வெள்ளாளர்கள் ஆண்ட பரம்பரை என தம்ப்பட்டம் அடித்து கொள்வதற்காக உருவாக்க பட்ட போலி பட்டயங்கள்:
மரம் பிடுங்கி பட்டக்காரர் செப்பேடு ,நீலம்பூர் காணி செப்பேடு,ஈஞ்ச குல காணி பட்டயம் ,தென்கரை நாட்டு பட்டயம் ,காலிங்கராயன் அணை பட்டயம்,மாந்திரம் சேரல் மெய்கீர்த்தி ,கன்னிவாடி கண்ணகுல பட்டயம்.


 ஒவ்வொரு சாதியும் தங்கள் தங்களுக்கு உயர்வு தேட புராணக்கதைகளையும், இலக்கியங்களையும் படைத்தனர்.இதன்படி கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் தங்கள் சாதி உயர்ந்த சாதி மற்றும் ஆண்ட பரம்பரையினர் என கூற முற்பட்டன . கிபி 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் தங்கள் கூற்றுக்கு ஆதரவாக போலி நாட்டுபுறபாடல் (பொன்னர் -சங்கர் ),போலி தீரன் சின்னமலை வரலாறு ,போலி பழந்தமிழ் பாடல்கள் மற்றும் போலி பட்டயங்களை உருவாக்கி கொண்டார்கள் .

வேட்டுவர்(தமிழ் ) இனத்தின் மக்கள் தொகை

இன்று வேட்டுவர்(தமிழ் ) இனத்தின் மக்கள் தொகை ஏறக்குறைய 11 இலட்சம் பேர்

கிபி 1931 வரை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புஎடுக்க பட்டது .
கிபி 1901 மக்கள் தொகை கணக்கெடுப்பில் வேட்டுவர்(தமிழ் ) 74889 பேர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .
கிபி 1901 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 'மாவலியர்'(மாவலி வேட்டுவ குலம்) வேட்டுவ இனத்தின் உட்பிரிவு என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கிபி 1901 மக்கள் தொகை கணக்கெடுப்பில் காவல வேட்டுவ குலங்கள் மற்றும் வேட வேட்டுவ குலங்கள் வேட்டுவர்(தமிழ் ) இனத்தில் கணக்கெடுப்பு எடுக்கபட்டு உள்ளது .
கிபி 1901 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 'பூலுவர்'(பூலுவ வேட்டுவ குலம் ) 6240 பேர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பூலுவ வேட்டுவர் வேட்டுவ இனத்தின் உட்பிரிவு என்ற வரலாற்று அறிவு இல்லாமல் சாதிகள் பட்டியலில் 'பூலுவர்' என்று கூறப்பட்டு உள்ளது . இந்த அறிக்கையை பின்பற்றியே கிபி 1985 அம்பாசங்கர் சாதிகள் பட்டியல் அறிக்கையிலும்' பூலுவர் ' என்று கூறப்பட்டு உள்ளது.

புன்னம் வேட்டுவ குலம் வேட்டுவரில் ஒரு பிரிவு .இந்த வரலாற்று அறிவு இல்லாமல் கிபி 1985 அம்பாசங்கர் சாதிகள் பட்டியல் அறிக்கையில் ,புன்னம் வேட்டுவ கவுண்டர், என்று தனியாக சேர்க்கபட்டு உள்ளது .

வேட்டுவர் (தமிழ் ) என்று சாதிகள் பட்டியலில் இருந்த பெயரை கிபி 1985 அம்பாசங்கர் சாதிகள் பட்டியல் அறிக்கையில் 'வேட்டுவ கவுண்டர் ' என்று கூறப்பட்டு உள்ளது .கிபி 1985 அம்பாசங்கர் சாதிகள் பட்டியல் அறிக்கையில் வேட்டுவர் (தமிழ் ) 125886 பேர் என்று கூறி இருப்பது தவறான புள்ளி விவரமாகும் .(கிபி 1901 மக்கள் தொகை கணக்கெடுப்பில் வேட்டுவர்(தமிழ் ) 81129 பேர் இருந்தார்கள் .இந்தியா சுதந்திரம் வாங்கிய போது மக்கள் தொகை 30 கோடி இருந்தது .இன்று வேட்டுவர்(தமிழ் ) இனத்தின் மக்கள் தொகை ஏறக்குறைய 11 இலட்சம் பேர் இருப்பதை மறைக்க பட்டு இருக்கிறது .)

இன்று வேட்டுவர்(தமிழ் ) திண்டுக்கல்,கோவை ,திருப்பூர் ,ஈரோடு,கரூர் ,நாமக்கல் ,சேலம் போன்ற மாவட்டங்களின் அதிக அளவிலும் ,மதுரை ,புதுகோட்டை ,திருச்சி ,கிருஷ்ணகிரி,தேனி,தஞ்சாவூர்,நீலகிரி போன்ற மாவட்டங்களில் குறைந்த அளவிலும் வாழ்ந்து வருகிறார்கள் .