ஆரம்பத்தில் வேள்
என்ற சொல் வேட்டுவ இனக்குழு தலைவர்களை குறிக்கும் சொல்லாக இருந்தது .பிறகு அரசனின்
அதிகார அடுக்கில் இடம் பெற தொடங்கிய பல தொழில் செய்யும் சாதியினருக்கு விருது
பெயராக கொடுக்க பட்டது .
ஆயர்களுக்கு
உரிமையுடைய ஆநிரைகளைக் திருடர்கள் மற்றும் பகைவர்கள் கவர்ந்து சென்று விடுவார்கள்
. வேட்டுவ குடியை சேர்ந்த தலைவர் கவர்ந்த சென்றவர்களோடு சண்டையிட்டு ஆநிரைகளை
மீட்டு ஆயர் குடியிடம் கொடுத்தார்கள் . ஆயர் குடியினர் ஆநிரைகளை மீட்டு கொடுத்த
வேட்டுவ குடி தலைவர்களை விரும்பி தங்களது தலைவர்களாக ஏற்று கொண்டார்கள் .பிறகு
அந்த வேட்டுவ குடி தலைவரை வேள் என்று அழைக்க பட்டான்.
·இதன் தொடர்ச்சியாக பூசல் நிகழும் போது மட்டுமின்றி, பூசல் நிகழாத காலங்களிலும் வேட்டுவ குடித்தலைவன் ஆயர்களுக்கு தேவைப்பட்டான்.வேட்டுவ குடியை சேர்ந்த வேளிர்கள் அரச அமைப்பை உருவாக்கினார்கள்.
·இதன் தொடர்ச்சியாக பூசல் நிகழும் போது மட்டுமின்றி, பூசல் நிகழாத காலங்களிலும் வேட்டுவ குடித்தலைவன் ஆயர்களுக்கு தேவைப்பட்டான்.வேட்டுவ குடியை சேர்ந்த வேளிர்கள் அரச அமைப்பை உருவாக்கினார்கள்.
வேட்டுவ குடியை
சேர்ந்த தலைவனை பிற மக்களால் தலைவனாக விரும்பி ஏற்றுக்கொள்ளப் பெற்றதையே வேள் என்ற
சொல் கூறுகின்றது.
காலப்போக்கில்
வேள் என்ற சொல் பட்டமாக மாறிவிட்டது. வேட்டுவ குடித்தலைவரைக் குறிக்கும் சொல்லாக
இருந்த வேள் வேந்தனிடம் அதிகாரிகளாக இருந்த அனைவருக்கும் பட்டபெயராக கொடுக்க
பட்டது .
வேள் என்ற சொல்
ஒளி,வேளாண்மை,விருந்தோம்பல் ,கொடை,உதவி,வேளாண் என்ற கருத்தோட்டத்துடன் தொடர்புடையதன்று
கண்டீரக கோப்பெரு நள்ளி - வேட்டுவ குடியில் ஒரு உட்குழு தலைவன்(வேள்)
கூதிர் பருந்தின் இரும் சிறகு அன்ன
பாறிய சிதாரேன் பலவு முதல் பொருந்தி
தன்னும் உள்ளேன் பிறிது புலம் படர்ந்த என்
உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி
மான் கணம் தொலைச்சிய குருதி அம் கழல் கால்
வான் கதிர் திரு மணி விளங்கும் சென்னி
செல்வ தோன்றல் ஓர் வல் வில் வேட்டுவன்
தொழுதனென் எழுவேன் கை கவித்து இரீஇ
இழுதின் அன்ன வால் நிண கொழும் குறை
கான் அதர் மயங்கிய இளையர் வல்லே
தாம் வந்து எய்தா அளவை ஒய்யென
தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு நின்
இரும் பேர் ஒக்கலொடு தின்ம் என தருதலின்
அமிழ்தின் மிசைந்து காய் பசி நீங்கி
நன் மரன் நளிய நறும் தண் சாரல்
கல் மிசை அருவி தண்ணென பருகி
விடுத்தல் தொடங்கினேன் ஆக வல்லே
பெறுதற்கு அரிய வீறு சால் நன் கலம்
பிறிது ஒன்று இல்லை காட்டு நாட்டேம் என
மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம்
மடை செறி முன்கை கடகமொடு ஈத்தனன்
எ நாடோ என நாடும் சொல்லான்
யாரீரோ என பேரும் சொல்லான்
பிறர் பிறர் கூற வழி கேட்டிசினே
இரும்பு புனைந்து இயற்றா பெரும் பெயர் தோட்டி
அம் மலை காக்கும் அணி நெடும் குன்றின்
பளிங்கு வகுத்து அன்ன தீ நீர்
நளி மலை நாடன் நள்ளி அவன் எனவே (புறம் -150 புலவர் - வன் பரணர்)
அருஞ்சொற்பொருள்:
1.கூதிர் = குளிர்; கூதிர் காலம் = ஐப்பசி, கார்த்திகை. 2. பாறுதல் = அழிதல், சிதறுதல்; சிதார் = கந்தை. 3. புலம் = இடம்; படர்ந்த = சென்ற. 4. உயக்கம் = வருத்தம்; உயங்குதல் = வருந்துதல், வாடுதல், துவளுதல்; உலைவு = இளைப்பு, ஊக்கக் குறைவு. 5. கணம் = கூட்டம். 6. வான் = மழை, அழகு, சிறப்பு; சென்னி = தலை. 8. இரீஇ = இருத்தி. 9. இழுது = நெய்; கொழுங்குறை = ஊன் துண்டுகள். 10. கான் = முல்லை நில காடு; அதர் = வழி; ஞெலிதல் = கடைதல், தீக் கடைதல். மிசைதல் = அனுபவித்தல், உண்டல், நுகர்தல். 14.காய் = வருந்தல், பசி. 15. நளிய = செறிந்த. 17. வல் = விரைவு. 18. வீறு = ஒளி, பெருமை. 20. வயங்குதல் = விளங்குதல்; காழ் = முத்து வடம், மணி
வடம். 21.மடை = ஆபரணக் கடைப் பூட்டு. 28. நளி = பெரிய.29.வல்வில் =வலிமையான வில் .30.வேட்டுவன்=வேட்டுவ குடியை சேர்ந்த ஒருவன்.
உரை: குளிர் காலத்தில் மழையில் நனைந்த பருந்தின் கரிய சிறகைப் போன்ற கிழிந்த கந்தைத் துணியை உடுத்திய நான் பலாமரத்தடியில் என்னையே மறந்து இருந்தேன். வேற்று நாட்டிலிருந்து அங்கே வந்துள்ள என்னுடைய வருத்ததையும் தளர்ச்சியையும் கண்டு, மான் கூட்டத்தைக் கொன்று குருதி தோய்ந்த, அழகிய வீரக்கழலணிந்த காலும், அழகிய நீலமணி ஒளிரும் தலையும் உடைய, தலைவர்களில் ஒரு வேட்டுவன் வலிய வில்லோடு அங்கே வந்தான்.அவனைக் கண்டு நான் வணங்கி எழுந்திருப்பதைப் பார்த்த அவன், தன் கையை அசைத்து என்னை இருக்கச் செய்தான். காட்டு வழியில் சென்று வழிதவறிய இளைஞர்கள் விரைந்து வந்து சேர்வதற்கு முன், நெய் விழுது போன்ற வெண்ணிறமுடைய புலால் துண்டுகளை தான் மூட்டிய தீயில் சமைத்து, “தங்கள் பெரிய சுற்றத்தோடு இதை உண்ணுக” என்று எனக்கு அளித்தான். அதனை நாங்கள் அமிழ்தத்தைப் போல் உண்டு எங்களை வருத்திய பசியைத் தீர்த்து, நல்ல மரங்கள் சூழ்ந்த மணமுள்ள குளிர்ந்த மலைச் சாரலில் மலை உச்சியிலிருந்து விழும் அருவியின் குளிர்ந்த நீரைப் பருகினோம். நான் அவனிடமிருந்து விடைபெற்றுக்கொள்ளத் தொடங்கினேன். அவன் விரைந்து வந்து, “ தாங்கள் பெறுதற்கரிய பெருமைக்குரிய அணிகலன்கள் வேறு எதுவும் எங்களிடம் இல்லை; நாங்கள் காட்டு நாட்டைச் சார்ந்தவர்கள்” என்று கூறித் தனது மார்பில் அணிந்திருந்த ஒளிபொருந்திய முத்து மாலையையும் முன் கையில் அணிந்திருந்த கடகத்தையும் கொடுத்தான். ”தங்களது நாடு எது?” என்று கேட்டேன். அவன் தன் நாடு எது என்று கூறவில்லை. “தாங்கள் யார்?” என்று கேட்டேன். அவன் தன் பெயரையும் கூறவில்லை. அவன், பெருமைக்குரிய தோட்டி என்னும் அழகிய மலையையும், பக்கத்திலுள்ள அழகிய பெரிய மலையையும் காப்பவன் என்றும் பளிங்கு போன்ற நிறமுடைய இனிய நீருடைய பெரிய மலை நாட்டு நள்ளி என்றும் வழியில் வந்த பிறர் சொல்லக் கேட்டேன்.
கண்டீரம் என்பது சங்கப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு மலை. இது தற்கால நீலகிரி மலைகளுள் ஒன்று. ஈரம் கண்டு கண்டாகக் கிடக்கும் மலை கண்டீரமலை (பனிக்கட்டிக் கண்டுகள் கிடக்கும் மலை). இதன் சங்ககால அரசன் கண்டீரக்கோப் பெருநள்ளி. இவன் வேட்டுவ குலத்தை சார்ந்தவன் . இவனை வன்பரணர் பாடியுள்ளார். (புறம் 148, 149, 150).தோட்டி இப்போது தொட்டபெட்டா என்னும் பெயர் பூண்டு விளங்குகிறது.
"வல்வில் இளையர் பெருமகன் நள்ளி" அகம்-152, குறிஞ்சி, புலவர் பரணர்
இங்கு இளையர் என்ற சொல் வேட்டுவ குடியை சேர்ந்த போர் வீரர்களை குறிக்கும் .
பெருமகன் = தலைவன்(வேட்டுவ குடியில் ஒரு உட்குழு தலைவன்)
நள்ளியை வலிமையான வில்லை உடைய வேட்டுவ குடியை சேர்ந்த போர் வீரர்களின் தலைவன் என்று புலவர் கூறினார் .
வேட்டுவ இனக்குழு தலைவர்களும் ,இவர்களின் போர் வீரர்களும் ஒரே குடியை சேர்ந்தவர்கள் .
வன்பரணர் நள்ளியை 'செல்வ தோன்றல் ஓர் வல் வில் வேட்டுவன்' என்றார் .அவரிடம் நள்ளி 'காட்டு நாட்டோம் ' என்றார் .எனவே நள்ளி முல்லை நில பகுதியை தலைமையிடமாக கொண்டு நீலகிரி (நளி மலை ) மலையை ஆண்டவர்.
மழ வேள் - வேட்டுவ குடியில் ஒரு உட்குழு தலைவன்
வல்வில் என்று அவன் பெயரின் அடைமொழி குறிப்பிடுகிறது. ஓரியைப் பற்றி வன்பரணர் பாடிய பாடல்,
……………………………………………………..யாம்
நாட்டிடன் நாட்டிடன் வருதும் ஈங்கோர்
வேட்டுவர் இல்லை நின் ஒப்போர் (புறம் 152)
என்று விறலியர் புகழ்வதாகக் கூறுகின்றது. பல நாடுகளுக்குச் சென்று வருபவர்கள் நாங்கள்; ஆனால் எங்கும் உனக்கு நிகரான வேட்டுவர் எவரும் இல்லை என்பது இதன் பொருள். ஆக வல்வில் ஓரி வேட்டுவர் சாதியைச் சேர்ந்தவன் என்பது உறுதிப்படுகிறது.
"நாங்கள் (விறலியர்) நாடு நாடாகச் (கோனாடு, பாண நாடு, ஆய் நாடு, பாண்டிய நாடு, சோழ நாடு, சேர நாடு மற்றும் சில)) சென்று வருகிறோம். சென்று வந்த நாடுகளில் உனக்கு நிகரான வில் ஆற்றல் மிக்க, வேட்டுவ குடியை சேர்ந்த வேட்டுவர் யாரும் இல்லை." என்பது இதன் பொருள்.
பாடுவல் விறலி ஓர் வண்ணம் நீரும்
மண் முழா அமைமின் …………….
………………………………………………………..
இறைவன் ஆதலின் சொல்லுபு குறுகி
மூவேழ் துறையும் முறையுளி கழிப்பி
கோ என பெயரியகாலை ஆங்கு அது
தன் பெயர் ஆகலின் நாணி (புறம் 152)
ஓரி விறலியை அழைத்து சந்த ஒழுங்குடைய பாடலை பாடுமாறு கூறி மற்றும் தம் குழுவினரை நோக்கி அதற்கியைய ஆட்டத்திற்கு தயாராகுமாறு கட்டளையிட்டான் ;தான் அக்குழுவிற்கு தலைவன் (இறைவன் ) ஆதலின் நான் நெருங்கி செல்லவும் 21 சுர வரிசைகளை பாடி இறுதியில் கோ என்ற சொல்லை அவர்கள் உச்சரிக்கவும் அவன் மிகவும் நாணினான் .
கோ =வேந்தன்
வல் வில் ஓரி வேட்டுவ இனக்குழு தலைவன் ஆவான் .
.................................வெம் போர்
மழவர் பெருமகன் மாவள் ஓரி நற்றிணை -52/8-9
இங்கு மழவர் என்ற சொல் வேட்டுவ குடியை சேர்ந்த போர் வீரர்களை குறிக்கும் .
பெருமகன் =தலைவன்
ஓரி போர் புரியும் வேட்டுவ குடியை சேர்ந்த வீரர்களின் தலைவன் என்று நற்றிணை கூறுகிறது .
வல்வில் ஓரி வேட்டுவ குடியில் ஒரு உட்குழு தலைவன் ஆவான் .இவனுடைய வீரர்களும் வேட்டுவ குடியை சேர்ந்தவர்கள் .
பொருநன் =போர் செய்பவன்
வல்வில் ஓரி “கொல்லிப் பொருநன்” என்று குறிப்பிடப்படுகிறான்.
- வன்பரனர் புறம் 152
"வல்வில் ஓரி கொல்லி குடவரை"- கபிலர் – குறுந்தொகை 100,
கொல்லி ஆண்ட வல்வில் ஓரி’
- பெருஞ்சித்திரனார் – புறம் 158
வல்வில் ஓரி கொல்லிமலையை உடையவன் என்று கூறுகிறது .
பண்ணி - வேட்டுவ குடியில் ஒரு உட்குழு தலைவன் (வேள் )
முற்றிய திருவின் மூவர் ஆயினும்
பெட்பின்றி ஈதல் யாம்வேண் டலமே;
விறற்சினம் தணிந்த விரைபரிப் புரவி
உறுவர் செல்சார்வு ஆகிச் செறுவர்
தாளுளம் தபுத்த வாள்மிகு தானை
வெள்வீ வேலிக் கோடைப் பொருந
சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய
மான்கணம் தொலைச்சிய கடுவிசைக் கதநாய்
நோன்சிலை வேட்டுவ, நோயிலை யாகுக;
ஆர்கலி யாணர்த் தரீஇய கால்வீழ்த்துக்
கடல்வயிற் குழீஇய அண்ணலங் கொண்மூ
நீரின்று பெயரா ஆங்குத் தேரொடு
ஒளிறுமறுப்பு ஏந்திய செம்மற்
களிறின்று பெயரல பரிசிலர் கடும்பே புறம் 205
அருஞ்சொற்பொருள்:
2. பெட்பு = அன்பு, விருப்பம். 3. விறல் = வெற்றி, வீரம்; பரிதல் = ஓடுதல்; புரவி = குதிரை. 4. உறுவர் = பகைவர்; சார்வு = புகலிடம். 5. தாள் உளம் = முயற்சியுடய உள்ளம்; தபுதல் = கெடுதல். 6. வீ = முல்லை மலர். 7. புழை = துளை, வழி. 8. கதம் = சினம். 9. சிலை = வில். 10. ஆர்கலி = மிகுந்த ஒலி; தரீஇ = தந்து. 11. குழீஇய = திரண்ட; கொண்மூ = மேகம். 14. கடும்பு = சுற்றம் 15. வேட்டுவ =வேட்டுவ குடியை சேர்ந்தவன் .
உரை: நிறைந்த செல்வத்தை உடைய மூவேந்தராயினும், எங்கள் மீது விருப்பமில்லாது அவர்கள் அளிக்கும் பரிசுகளை நாங்கள் விரும்பமாட்டோம். வெற்றி பெறுவதற்காகக் கொண்ட சினம் தணிந்து, விரைந்து ஓடும் குதிரைகளையுடைய உன் பகைவர்கள் அஞ்சி வந்து உன்னை அடைந்தால் நீ அவர்களுக்குப் புகலிடமாய் விளங்குகிறாய். அவ்வாறன்றி, முயற்சியுடன் போர் புரிந்தவர்களின் உள்ளத்தின் வலிமையை அழித்த வாட்படையை உடையவன் நீ. வெண்மையான பூக்களையுடைய முல்லையை வேலியாகக்கொண்ட கோடை என்னும் மலைக்குத் தலைவன் நீ. சிறியதாகவும் பெரியதாகவும் உள்ள வழிகளில் குறுக்கே வந்த மான்களின் கூட்டத்தை அழித்த விரைந்து செல்லும் சினம்கொண்ட நாய்களையும் வலிய வில்லையும் உடைய வேட்டுவனே! நீ துன்பமில்லாமல் வாழ்வாயாக! மிகுந்த ஒலியுடன் புதுமழையைத் தருவதற்காகக் காலூன்றிக் கடலின்மேல் கூடிய மேகம் நீரைக் குடிக்காமல் போகாது. அதுபோல், தேர்களையும், வெண்மையான தந்தங்களையுடைய யானைகளையும் பரிசாகப் பெறாது பரிசிலர் சுற்றம் வெறிதே செல்லமாட்டார்கள்.
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்
குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும்
வள் வாய் அம்பின் கோடை பொருநன்
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின்
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு அகம் 13/6-12
பொருநன் =போர் செய்பவன் .
கடிய நெடு வேட்டுவனின் இயற்பெயர் பண்ணி ஆகும் .இவன் வேள்வி (யாகம் ) செய்ததையும் ,பாண்டியனின் படை தலைவனாகவும் இருந்ததையும், வேட்டுவ குடியினர் போர் தொழில் செய்பவர்களாக இருந்ததையும் இப்பாடல் மூலம் அறியலாம் .
பண்ணி வேட்டுவ குடியில் ஒரு உட்குழு தலைவன் ஆவான் .இவனுடைய வீரர்களும் வேட்டுவ குடியை சேர்ந்தவர்கள் .
சங்க காலத்தில் பாண்டிய நாட்டை சேர்ந்த வேட்டுவ குடியினர் பாண்டியனுக்கு படை தலைவராக இருந்தனர் .
வெளியன் வேண்மான் ஆய் எயினன் - வேட்டுவ குடியில் ஒரு உட்குழுவின் தலைவன்
வெளியன் வேண்மான் ஆய் எயினன் =வெளியன்வேள் மகன் ஆய் எயினன்
வேண்மான் = வேள் மகன்
ஆய் எயினன் என்பவனின் தந்தையின் பெயர் வெளியன் வேள்
எயினன் என்ற சொல் வேட்டுவ குடியினரின் சிறப்பு பெயர் ஆகும் .
மறக் குடித் தாயத்து வழி வளம் சுரவாது,
(சிலம்பு வேட்டுவ வரி 14)
இட்டுத் தலை எண்ணும் எயினர் அல்லது
சுட்டுத் தலைபோகாத் தொல் குடிக் குமரியை-
(சிலம்பு வேட்டுவ வரி 20, 21)
மறம் கொள் வயப் புலி வாய் பிளந்து பெற்ற
மாலை வெண் பல் தாலி நிரை பூட்டி;
(சிலம்பு வேட்டுவ வரி 27, 28)
வலம் படு கொற்றத்து வாய் வாள் கொற்றவை;
(சிலம்பு வேட்டுவ வரி 64)
பொன் தொடி மாதர் பிறந்த குடிப் பிறந்த
வில் தொழில் வேடர் குலனே குலனும்!
(சிலம்பு வேட்டுவ வரி 4)
பை அரவு அல்குல் பிறந்த குடிப் பிறந்த
எய் வில் எயினர் குலனே குலனும்!
(சிலம்பு வேட்டுவ வரி 5)
ஆய் தொடி நல்லாள் பிறந்த குடிப் பிறந்த
வேய் வில் எயினர் குலனே குலனும்!
(சிலம்பு வேட்டுவ வரி 6)
வேட்டுவ குடியை சேர்ந்தவர்களை மறக்குடி (வீர குடி),தொல்குடி (பழமையான இனகுழுவினர் ),வேடர் குலம்,எயினர் குலம் என்று கூறுகிறது .
வேட்டுவ குடியினர் முல்லை நிலத்தில் வாழ்ந்த இடங்களை குறும்பு என்று அழைக்க பட்டத்தை குறிப்பதாக
வில்லோர் குறும்பில் ததும்பும் அகம் 261/14
கொடு வில் எயினர் குறும்பில் சேப்பின் பெரும் 129
புறவே புல்லிருந்து பல்லாயத்தான்
வில் இருந்த வெங்குறும்பின்று புறம் 386/12-13
வேட்டு புழை அருப்பம் மாட்டி காட்ட - முல் 26
அருமிளை இருக்கை யதுவே மனைவியும்
வேட்டச் சிறாஅர் சேட்புலம் படராது புறம் 326/7-8
என்ற அடிகளில் அமைத்துள்ளது
மிளை = வேட்டுவ குடியினர் வாழும் இடங்களை சுற்றி உருவாக்கப்பட்ட காவல் காட்டை (அடர்த்தியான முள் மரங்கள் இருக்கும் பகுதி )
பெரும்பாண் ஆற்றுபடை வேட்டுவ குடியினர் வாழும் குறும்பு பற்றி கூறுகிறது .(வரி 113-137).
ஆய் எயினன் =அழகான எயினன்
ஆய் என்ற சொல்லுக்கு அழகு என்ற பொருள் இருக்கிறது . (அகம் 69/1).
ஆய் பொறி யுழுவை- அழகிய வரிகள் கொண்ட புலி (கலித். 46, 4), ஆய் மலர் -அழகிய மலர் - அகம் 243/1, ஆய் மயில் தோகை-அழகான மயில் தோகை - அகம் 358/2
இங்கு ஆய் என்ற சொல் ஆயர் குடியை குறிக்காது .
சேர அரசனான களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரலும் நன்னன் மேல் போர் தொடுத்தான். நார்முடிச்சேரல், தன்னுடைய படை தலைவன் ஆன வெளியன் வேண்மான் ஆய் எயினன் என்பவனைப் புன்னாட்டின் சார்பாக நன்னன் மேல் போர் செய்யத் துளு நாட்டுக்கு அனுப்பினான். ஆய் எயினன் துளு நாட்டுக்குப் படையெடுத்துச் சென்றபோது மேலே கூறிய மிஞிலி அவனைப் பாழி என்னும் இடத்தில் எதிரிட்டுப் போர் செய்தான். கடுமையாக நடந்த அந்தப் போரில் சேரனுடைய சேனைத் தலைவனான ஆய்எயினன் இறந்துபோனான்.
பொலம்பூண் நன்னன் புன்னாடு கடிந்தென
யாழிசை மறுகில் பாழி யாங்கண்
அஞ்சல் என்ற ஆய் எயினன்
இகலடு கற்பின் மிஞிலியொடு தாக்கித்
தன்னுயிர் கொடுத் தனன் (அகம்.396 : 2-6)
கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன்
நெடுந்தேர் மிஞிலியொடு பொருது களம்பட்டென
(அகம்.148: 7-8)
வேறு இரண்டு அகப்பாட்டிலும் இச்செய்தி கூறப்படுகிறது (அகம். 181: 3-7; 208: 5-9)
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் - அகம் 208/5
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தாயார் பெயர் வெளியன் வேண்மாள் நல்லினி (பதி 2 பதிகம் 3) .
ஆய் வேள் - வேட்டுவ குடியில் ஒரு உட்குழுவின் தலைவன்
வடதிசை அதுவே வான்தோய் இமயம்
தென்திசை ஆஅய்குடி இன்றாயின்
பிறழ்வது மன்னோஇம் மலர்தலை உலகே.புறம் 132\7-9
வானளாவிய இமயம் வடதிசையில் உள்ளது. தென் திசையில் ஆய்குடி ஊர் இல்லை எனின் இப்பரந்த உலகம் தலைகீழாக மாறிவிடும்.
ஆய் என்ற சொல் ஆய் குடி ஊரை குறிக்கும்..
தீம் சுளைப் பலவின், மா மலைக் கிழவன்
ஆஅய் அண்டிரன், அடு போர் அண்ணல் புறம் 129\4-5
மழைக் கணம் சேக்கும் மா மலைக் கிழவன்,
வழைப் பூங் கண்ணி வாய் வாள் அண்டிரன் புறம் 131\1-2
ஆடுநடைப் புரவியும் களிறும் தேரும்
வாடா யாணர் நாடும் ஊரும்
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்,
கோடுஏந்து அல்குல் குறுந்தொடி மகளிரொடு
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப
மேலோர் உலகம் எய்தினன் புறம் 240\1-6
மலைகெழு நாடன் மாவேள் ஆஅய்!
பொதுமீக் கூற்றத்து நாடுகிழ வோயே!
புறம் 135/13,22
தேர்வேள் ஆயைக் காணிய சென்மே! புறம் 135/7
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் புறம் 128
தேர் வேள் ஆயைக் காணிய சென்மே! புறம் 133
நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன்
சுடர்மணிப் பெரும்பூண் ஆய் கானத்துத் அகநானூறு 69/17-18
சுடர்மணிப் பெரும்பூண் ஆய் கானத்துத் அகநானூறு 69/17-18
புலிப்பல் தாலிப் புன்றலைச் சிறாஅர்
மான்கண் மகளிர்க்கு ஆன்றோர் அகன்துறைச்
சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங்குறை
விடர்முகை அடுக்கத்துச் சினைமுதிர் சாந்தம்
புகர்முக வேழத்து மருப்பொடு மூன்றும்
இருங்கேழ் வயப்புலி வரிஅதள் குவைஇ
விருந்துஇறை நல்கும் நாடன் எங்கோன்
கழல்தொடி ஆஅய் அண்டிரன் போல
வண்மையும் உடையையோ? ஞாயிறு!
கொன்விளங் குதியால் விசும்பி னானே. புறம் 374\9-18
புலிப்பல் கோத்த தாலியை அணிந்த சிறுவர்களைப் பெற்ற, மானின் கண்களைப் போன்ற கண்களையுடைய மகளிரின் கணவர்(ஆய் வேள்), அகன்ற நீர்த்துறையில் தம் வில்லால் கொன்ற முள்ளம்பன்றியின் கொழுவிய தசைத்துண்டுகள், மலைப்பிளவுகளையும் குகைகளையுமுடைய மலைப்பக்கத்தில் பெரிய கிளைகளுடன் கூடிய சந்தனமரக்கட்டை, புள்ளிகள் பொருந்திய முகமுடைய யானையின் தந்தம் ஆகிய மூன்றையும், வலிய புலியின் கரிய நிறக்கோடு அமைந்த தோலில் குவித்து விருந்தினர்க்கு குடுக்கும் தலைவன்(ஆய் வேள்) எங்கள் மன்னன்(ஆய் வேள்), கழலவிடப்பட்ட தொடியை அணிந்த ஆய் அண்டிரன் அத்தகைய நாட்டிற்குத் தலைவன். ஞாயிறே, நீ வானில் வெறிதே செல்கின்றாயே! நீ அவனைப் போல வள்ளல் தன்மை உடையவனா?
‘பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி ‘அகநானூறு 7\7 -18
மறம் கொள் வயப் புலி வாய் பிளந்து பெற்ற
மாலை வெண் பல் தாலி நிரை பூட்டி சிலப்பதிகாரம் வேட்டுவ வரி – வரி 27-28
"அஞ்சாமையுடைய வலிய புலியின் வாயைப் பிளந்து பெற்ற வெண் பற்களை ஒழுங்கான மாலையாகக் கோத்த புலிப்பல் தாலி" என்னும் பொருள்படும்படியாக மறங்கொள் வரிப்புலி வாய்பிளந்து பெற்ற மாலை வெண்பல் தாலி நிரை பூட்டி என்கிறது சிலப்பதிகாரம்.
வேட்டுவ குடியினர் தமது பிள்ளைகளுக்குப் புலிப்பல் தாலி அணிவிக்கும் பழக்கம் உடையவர்கள் என்பதை சிலப்பதிகாரம் வேட்டுவ வரி கூறுகிறது .
களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்
பாடுஇன் பனுவல் பாணர் உய்த்தெனக்
களிறில ஆகிய புல்அரை நெடுவெளிற்
கான மஞ்ஞை கணனொடு சேப்ப
ஈகை அரிய இழையணி மகளிரொடு
சாயின்று என்ப ஆஅய் கோயில்; புறம் 127/1-6
களாப்பழம் போன்ற கரிய நிறத் தண்டினையுடைய சிறிய யாழுடன் இனிய பாட்டைப் பாடும் பாணர்கள், ஆய் பரிசாக அளித்த யானைகளை எல்லாம் பெற்றுக்கொண்டு போனதால் யானை கட்டும் நெடிய கட்டுத்தறிகள் வெறுமையாகக் காட்சி அளிக்கின்றன. அவ்விடத்து இப்பொழுது காட்டு மயில்கள் தம் கூட்டத்தோடு தங்கி இருக்கின்றன. பிறருக்கு அளிக்க இயலாத மங்கல அணிகலன்கள் மட்டுமே அணிந்த மகளிர் ஆயின் அரண்மனையில் உள்ளனர்.
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து தம்
சிலை மாண் வல் வில் சுற்றி பல மாண்
அம்பு உடை கையர் அரண் பல நூறி
நன் கலம் தரூஉம் வயவர் பெருமகன்
சுடர் மணி பெரும் பூண் ஆஅய் கானத்து அகம் 69/14-18
ஆய் போர் வீரர்களின் தலைவன் .ஆய் வேளின் வீரர்கள் வில்லுக்கு பீலி அணிந்திருப்பார்கள்.அவர்கள் கையில் மாண்புள்ள அம்பை பிடித்திருப்பார்கள் .அவர்கள் மாற்றாரின் அரண்களை கடந்து அணிகலன்களை கொண்டு வருவார்கள் .ஆய் வேளின் காட்டில் அலரி பூக்கள் மனம் வீசும் .
இங்கு வயவர் என்ற சொல் வேட்டுவ குடியை சேர்ந்த போர் வீரர்களை குறிக்கும் .
பெருமகன் =தலைவன் (ஆய் வேள் )
வேட்டுவ குடியை சேர்ந்த போர் வீரர்களின் தலைவன் ஆய் வேள் (வேட்டுவ குடியை சேர்ந்த தலைவன் )
'ஆய்வேளையும் குறும்பரையும் மடல் மாரு யளித்தோட்டி காட்டு குறும்பு சென்றடைய நாட்டு குறும்பில் செரு வென்று '
(வேள்வி குடி செப்பேடு).
(வேள்வி குடி செப்பேடு).
பாண்டியன் ஆய்வேளையும் ,ஆய்வேளின் வீரர்களையும் (குறும்பர்) குறும்புகளில் வென்றதாக வேள்வி குடி செப்பேடு கூறுகிறது .எனவே ஆய்வேள் வேட்டுவ குல தலைவன் என்பதையும் என்பதையும் அவர் வீரர்கள் வேட்டுவர்கள் என்பதையும் உறுதிப்படுத்துகிறது .
“நாட்டுப்புற மாக்களும் வேட்டுவ தலைவரும்
குறும்பருங் .......' பெருங்கதை, உஞ்சை காண்டம் (வரி 54 -55)
குறும்பருங் .......' பெருங்கதை, உஞ்சை காண்டம் (வரி 54 -55)
காட்டில் வாழும் வேட்டுவ குடி தலைவரும்,வேட்டுவர்களும் ...
வேட்டுவ குடி தலைவரின் வீரர்களை குறும்பர் என்று கூறுவதால் வேட்டுவ குடி தலைவர் எயினர் என்பதையும் அவர் வீரர்கள் எயினர் என்பதையும் உறுதிப்படுத்துகிறது .
'காட்டகத் துறையும் கடு வினை வாழ்க்கை
வேட்டுவர் பயின்ற விடமற் றிந்நிலம் 'பெருங்கதை, உஞ்சை காண்டம் (வரி 107 -108)
வேட்டுவர் பயின்ற விடமற் றிந்நிலம் 'பெருங்கதை, உஞ்சை காண்டம் (வரி 107 -108)
காட்டில் வாழ்ந்து வருபவரும் கடுமையான தொழில்கள் செய்யும் வாழ்க்கை உடைய வேட்டுவ குடியினர் வில் பயிற்சி மூலம் பயின்ற நிலம் .
நெடு வேள் ஆவி -வேட்டுவ குடியில் ஒரு உட்குழுவின் தலைவன்
வண்டு பட ததைந்த கண்ணி ஒண் கழல்
உருவ குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நல் போர் நெடுவேள் ஆவியின்
அறு கோட்டு யானை பொதினி ஆங்கண்
-அகம் 1 பாலை மாமூலனார்
வண்டுகள் மொய்ப்பதால் சிதைவுண்ட தலைமாலையையும், ஒளிரும் கழலையும்,அச்சம்தரும் குதிரைகளையும் உடைய மழவரை(கள்வர் குடியை சேர்ந்த மழவர் ) ஓட்டிய,முருகனைப் போன்ற நல்ல போர்த்திறம் கொண்ட நெடுவேள் ஆவியின் அறுக்கப்பட்ட தந்தங்களையுடைய யானைகளைக் கொண்ட பொதினியில் உள்ள
பொதினி =பழனி மலை
மத யானையும் ,வீரக் கழல் அணிந்த காலும் கொண்ட பேகன் கொடையினால் மடமை அடைவான் .ஆனால் அயலார் படை வந்து போரில் மயங்கி வீழ்ந்த போது பேகன் தன் படையினால் மடமை அடைய மாட்டான் .(புறம் 142)
…………………………ஆவியர் பெருமகன்
பெரும் கல் நாடன் பேகனும் சுரும்பு உண - சிறு 86,87
நெடு வேள் ஆவியின் வீரர்களை ஆவியர் என்றழைக்கப் பட்டனர் .
பொய் இல் செல்வக் கடுங்கோவுக்கு
வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்(பதி எட்டாம் பத்து – பதிகம் )
விச்சியர்- வேட்டுவ குடியில் ஒரு உட்குழுவின் தலைவன்
வில் கெழு தானை விச்சியர் பெருமகன்/வேந்தரொடு பொருத ஞான்றை பாணர் - குறு 328/5,6
விச்சியின் வீரர்களை விச்சியார் என்றழைக்கப் பட்டனர் .
விச்சி மலையை உடையவன் (புறம் 200)
வீரை வேண்மான் வெளியன் தித்தன் – வேட்டுவ குடியில் ஒரு உட்குழுவின் தலைவன்
வீரை வேண்மான் வெளியன் தித்தன் - நற் 58/5
வீரை வேண்மான் =வீரைவேள் மகன்
வெளியன் தித்தன் =வீரைவேள் மகனின் இயற்பெயர்
சினம் கெழு தானை, தித்தன் வெளியன் -அகம் 152/5
வேள் எவ்வி - வேட்டுவ குடியில் ஒரு உட்குழுவின் தலைவன்
பயம் கெழு வைப்பிற் பல் வேல் எவ்வி அகம் 126/13
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன்
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார் அகம் 266/10,11
இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் பூண்
போர் அடு தானை எவ்வி மார்பின் புறம் 233/5,6
இருங்கோவேள் - வேட்டுவ குடியில் ஒரு உட்குழுவின் தலைவன்
வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்
கட்சி காணாக் கடமா நல்லேறு
கடறுமணி கிளரச் சிதறுபொன் மிளிரக்
கடிய கதழும் நெடுவரைப் படப்பை
வென்றி நிலை இய விழுப்புகழ் ஒன்றி
இருபால் பெயரிய உருகெழு மூதூர்க்
கோடிபல அடுக்கிய பொருள்நுமக்கு உதவிய
நீடுநிலை அரையத்துக் கேடும் கேளினி
நுந்தை தாயம் நிறைவுற எய்திய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்
நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை
இகழ்ந்ததன் பயனே; இயல்தேர் அண்ணல்!
எவ்வி தொல்குடிப் படீஇயர், மற்றுஇவர்
கைவண் பாரி மகளிர் என்றஎன்
தேற்றாப் புன்சொல் நோற்றிசிற் பெரும!
விடுத்தனென்; வெலீஇயர்நின் வேலே; அடுக்கத்து
அரும்புஅற மலர்ந்த கருங்கால் வேங்கை
மாத்தகட்டு ஒள்வீ தாய துறுகல்
இரும்புலி வரிப்புறம் கடுக்கும்
பெருங்கல் வைப்பின் நாடுகிழ வோயே! -புறம் 202
பாடியவர்: கபிலர்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.
அருஞ்சொற்பொருள்:
1.வெட்சி = ஒருசெடி; கானம் = காடு. 2. கட்சி = புகலிடம்; கடமா = காட்டுப் பசு, மத யானை. 3. கடறு = காடு; கிளர்தல் = எழுதல். 4. கடி = மிகுதி; கதழ்தல் = விரைதல்; படப்பை = தோட்டம், பயிர் நிலம், நாடு. உரு = அச்சம். 9. தாயம் = உரிமை. 10. ஒலியல் = தழைக்கை. 14. மா = கறுப்பு. 17. அடுக்கம் = மலைச்சாரல். 19. மா = கரிய; தகடு = பூவின் புறவிதழ்; வீ = மலர்; துறுகல் = பாறை. 20. கடுக்கும் = போலும். 21 கல் = மலை.22 .வேட்டுவர் =வேட்டுவ குடியினர்
கொண்டு கூட்டு: புலிகடிமாஅல், அண்ணல், நாடு கிழவோயே, அரையத்துக் கேடும் கேள் இனி; அது கழாஅத்தலையை இகழ்ந்ததன் பயன்; இப்பொழுது, எவ்வி தொல்குடிப் படீஇயர்; இவர் பாரி மகளிர் என்றஎன் புன்சொல்லைப் பொறுப்பாயாக; பெருமானே, நின்னை விடுத்தனென்; வெலீஇயர் நின் வேலே எனக் கூட்டுக.
உரை: வெட்சிச் செடிகள் நிறைந்த காட்டில் வேட்டுவ குடியினர் விரட்டிய மதங்கொண்ட யானை புகலிடம் இல்லாமல், காட்டில் மணியோசையை எழுப்பி, பொன்னின் தூள்கள் சிதறி மிளிருமாறு, வெகு விரைவாக ஓடும் நெடிய மலைப் பக்கத்தில் உள்ள நாட்டில் வெற்றி நிலைபெற்ற, சிறந்த புகழ் பொருந்திய சிற்றரையம், பேரரையம் என்று அஞ்சத்தக்க இரண்டு பழைய ஊர்கள் இருந்தன. கோடிக்கணக்கில் பொருள் கொடுத்து உன் முன்னோர்களுக்கு உதவி, உயர்ந்த நிலையில் இருந்த அந்த அரையம் ஏன் அழிந்தது என்று கூறுகிறேன்; கேட்பாயாக. உன் தந்தையாரிடமிருந்து உரிமையாகப் பெருமளவில் செல்வங்களைப் பெற்று, தழைத்த மாலையுடன் உள்ள புலிகடிமால்! உன்னைப்போன்ற அறிவுடைய உன் முன்னோருள் ஒருவன், புகழ் மிக்க செய்யுள் இயற்றும் கழாத்தலையாரை இகழ்ந்ததின் விளைவுதான் அரையத்தின் அழிவு. நன்கு செய்யப்பட்ட தேர்களை உடையவனே! ”இவர்கள் எவ்வி என்னும் பழங்குடியைச் சார்ந்தவர்கள்; வள்ளன்மை மிகுந்த பாரியின் மகளிர்” என்ற என் தெளிவில்லாத சொற்களைப் பொறுத்துக்கொள்வாயாக!
மலைச்சாரலில், அரும்புகள் அனைத்தும் மலர்ந்த, கரிய அடிமரத்தையுடைய வேங்கையின் கரிய புறவிதழ்களையுடைய ஒளிபொருந்திய பூக்கள் பரவிக் கிடக்கும் பாறை கரிய வரிகளையுடைய புலியின் முதுகைப்போல் உள்ளது. அத்தகைய பெரிய மலைகளுள்ள இடங்களில் ஊர்களையுடைய நாட்டுக்கு உரியவனே! நான் செல்கிறேன். உன் வேல் வெற்றி பெறட்டும்!
சிறப்பு குறிப்பு : இருங்கோ வேள் ,இருக்கு வேள் ஒரு பொருட் பெயர்கள் ஆகும் . இருங்கோ வேள் குடுமி வேட்டுவ குலத்தை சேர்ந்தவனாக கல்வெட்டுகள் கூறுகிறது . இருங்கோ வேள் வேட்டுவ இனக்குழு தலைவன் என்பதையும் அவனுடைய போர் வீரர்கள் வேட்டுவர்கள் என்பதை இப்பாடல் மூலம் அறியலாம் மேலும் இருங்கோ வேளும் ,வேள் எவ்வியும் ஒரே குடியை (வேட்டுவ குடி ) சேர்ந்தவர்கள் என்பதையும் இப்பாடல் மூல அறியலாம் .
வேட்டுவ குடியில் உட்குழு தலைவர்களின் போர் வீரர்கள் வேட்டுவ குடியை சேர்ந்தவர்கள் ஆவார்கள் .
பாரி வேள்-வேட்டுவ குடியில் ஒரு உட்குழுவின் தலைவன்
பறம்பு மலையை ஆண்ட வேள்.
சுரும்புகள் (வண்டுகள்) உண்ணுமாறு தேன் வழங்கும் சிறப்பு உடைய சுரபுன்னைகள் நிறைந்த வழிப்பாதை, அப்பாதையின் வழியே பாரி தன் தேர் மீது ஏறிச் சென்றான். அப்பாதையில், சிறிய பூக்களை உடைய முல்லைக் கொடி பற்றிப் படர்வதற்குக் கொழுகொம்பு இல்லாமல் தவித்தது. இதைக் கண்ட பாரி தான் ஏறி வந்த தேரை அவ்விடத்தில் நிறுத்தினான். அதில் முல்லைக் கொடியைப் படரவிட்டான். இத்தகு இரக்கக் குணம் கொண்டவன் பாரி.
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
................ .................. .......................
பறம்பின் கோமான் பாரி
(சிறுபாணாற்றுப்படை - 89-91)
(வீ = முல்லை பூ; பறம்பு = பறம்பு மலை; கோமான் = அரசன்)
என்று பாடப் பெறுகிறான்.
மலை கெழு நாட! மா வண் பாரி! புறம் 236\3
பாரி வேள்பால் பாடினை செலினே புறம் 105\8
கடந்து அடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே;
79
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல் நாடு;
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;
யாமும் பாரியும் உளமே;
குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே. புறம் 110
வேள் பாரி பற்றி இலக்கியங்கள் கூறுகிறது .
அந்துவன் வேள் - வேட்டுவ குடியை சேர்ந்த அந்துவ வேட்டுவ குல தலைவன் .
குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழாஅன்
வேண்மாள் அந்துவஞ்செள்ளை ஈன்ற மகன் (பதி ஒன்பதாம் பத்து பதிகம் 1,2
)
குமணன் -வேட்டுவ குடியில் ஒரு உட்குழு தலைவன் (வேள் )
முதிர மலை உடுமலை பகுதியில் இருந்தது .
அதிரா யாணர் முதிரத்து கிழவ - புறம் 158/25
பழம் தூங்கு முதிரத்து கிழவன் - புறம் 163/8
வசை இல் விழு திணை பிறந்த - புறம் 159/27
இங்கு திணை என்ற சொல் குமணனின் குடியை குறிக்கும் .
வேற்றுமை இல்லா விழு திணை பிறந்து - புறம் 27/3
இங்கு திணை என்ற சொல் வேந்தர்களின் குடியை குறிக்கும் .
திணை என்ற சொல் குடி என்ற பொருள் உடையது .(குறு 45/5 ,மலை 401 ,பதி 14/20 ,பதி 72/4 ,பதி 85/5 ,புறம் 24/28 ,புறம் 373/28 ).
பாணன் வேள் - வேட்டுவ குடியில் ஒரு உட்குழு தலைவன் (வேள் )
நல்காது துறந்த காதலர் என்றும்
கல் பொரூஉ மெலியா பாடு இன் நோன் அடியன்
அல்கு வன் சுரை பெய்த வல்சியர்
இகந்தனர் ஆயினும் இடம் பார்த்து பகைவர்
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில்
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும்
கனை இரும் சுருணை கனி காழ் நெடு வேல்
விழவு அயர்ந்து அன்ன கொழும் பல் திற்றி
எழாஅ பாணன் நன் நாட்டு உம்பர் -பாலை கல்லாடனார், அகம் 113/9-17
பாணன் பகைவரின் குறும்பில் (அரண் ) இருந்து ஆநிரைரைகளை கவர்ந்து வந்தான் .
எல்லாம் பெரும்பிறிதாக வடாஅது
நல் வேல் பாணன் நன் நாட்டு உள்ளதை
வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை
ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும்
சோலை அத்தம் மாலை போகி - பாலை மாமூலனார், அகம் 325/16-20
தமிழகத்தின் வடபகுதியில் பாணன் நாடு உள்ளது. அந்த நாட்டு வழியில் அவர் சென்றுவிட்டார். வானம் வாள் போல் பளபளக்கும் கோடைக்காலத்தில் சென்றுள்ளார். ஆளைக் கொல்லும் யானை இருக்கும் பாலை வழியில் (அத்தம் )செல்கிறார்.
வலி மிகும் முன்பின் பாணனொடு மலி தார்
தித்தன் வெளியன் உறந்தை நாள்அவை
பாடு இன் தெண் கிணை பாடு கேட்டு அஞ்சி
போர் அடு தானை கட்டி
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே- மருதம் பரணர் அகம் 226/13-17
பாணன், வெளியன் தித்தனோடு உறையூரில் நாள் அவையில் இருந்ததை பார்த்து கட்டி போர் புரியாமல் ஓடி விட்டான் .
வேள்
“ஆயர் வேட்டுவர் ஆடுஉத் திணைப் பெயர்
ஆவயின் வருஉம் கிழவரும் உளரே “
(தொல், அகம் 21)
அருஞ்சொற்பொருள்:
ஆடுஉத் =ஆண் பால் பெயர் ;திணைப் பெயர் =குடிப்பெயர்ச்சொல் (குலம்) ;ஆவயின்=முற்கூறிய ;வருஉம்=வரும் ;உளரே =இருக்கிறார்கள்
கிழவர்=உரியவர்; வேட்டுவர் = ஒரு குடிப்பெயர்ச்சொல்; ஆயர் = ஒரு குடிப்பெயர்ச்சொல்
திணை என்ற சொல் குலம் என்ற பொருளை உடையது .( குறுந்.45/5, புறம்.159, புறம்.27/3, புறம்.24/28, புறம்.373/28,மலை.401, பதி 14/20)
ஆவயின் என்ற சொல் முற்கூறிய என்ற பொருளை உடையது .(தொல்காப்பியம் பொருள் 145,147,243 ; தொல்காப்பியம் எழுத்து 250 :ஐங்குறுநூறு 490/2)
உரை :
ஆயர் குடியை சேர்ந்த ஆண் பெயர் ஆயர் .வேட்டுவ குடியை சேர்ந்த ஆண் பெயர் வேட்டுவர் .ஆயரிலும், வேட்டுவரிலும் உரியவர்கள்(ஊரையும் ,நாட்டையும் உடையவர்கள் (வேட்டுவர் ), ஆடு ,மாடுகளுக்கு உரியவர்கள் (ஆயர் ) இருக்கிறார்கள்.
விளக்கம் :
ஆடு ,மாடுகளை மேய்க்கும் வினை செய்தவர்களுக்கு கால்நடைகள் சொந்தமாக இருந்தது .இவர்களை ஆயர் குடி என்று தொல்காப்பியர் கூறினார் .
ஆடு ,மாடுகளை திருடர்கள் மற்றும் பகைவர்களிடம் இருந்து பாதுக்காக்கும் வினை(வேள் வினை ) செய்தவர்களுக்கு ஊர் சொந்தமாக இருந்தது .இவர்களை வேட்டுவர் குடி என்று தொல்காப்பியர் கூறினார் .
ஒரு மக்கள் குழுவினர்(வில்லர் ) போர் வினை ,குடிகாவல் வினை மற்றும் வேட்டை (வேட்டம்) வினை - வேள் வினை செய்தார்கள் .இந்த செயல்கள் இவர்களது தொழிலாக இருந்தது .இவர்களை தொல்காப்பியர் வேட்டுவர் குடி என்றழைத்தார்.
வேளிர்கள் போர் தொழில் செய்தவர்கள் (புறம் 201/12, 233/5,6; மது 55, அகம் 135/12 , 206/13, 246/12, 331/13, பதி 49/7).
வேட்டுவ குடியை சேர்ந்த உட்குழுத்தலைவர்களை வேள் என்றழைக்கப்பட்டனர் . இதனால் வேட்டுவ குடியினரை வேள் குலத்தவர் என்றழைக்கப்பட்டனர்.
வேட்டுவ குடியில் உட்குழுக்களின் பெயர்கள் ஊர் பெயர் ,நாட்டு பெயர் ,தங்களுடைய தலைவர் பெயர் ,விலங்குகள் பெயர் ,தாவரங்கள் பெயர் ,செய்யும் தொழில்களின் அடிப்படையில் உருவான பெயர்கள்,குன்றுகளின் பெயர் போன்ற பெயர்களில் உருவானதை கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் கூறுகிறது .
வேட்டன செய்யும் வேட்டு வினை கடும் தொழில்
கவர் கணை வாழ்க்கை சவரர் புளிஞர் - பெருங்கதை உஞ்ஞை 55/67-68
வேட்டன –விரும்பியதை; சவரர் =சபரர்
வேள் வினையை வேட்டு வினை என்றழைக்கப்பட்டனர்
'தென்னவன் தொல்லிசை நட்ட குடியோடு தோன்றிய
நல்லினத்தயார் ' (முல்லை கலி 104/3-6)
ஆயர் குடியும் ,வேட்டுவ குடியும் ஒரே காலத்தில் உருவான குடிகளாகும் .
ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலை
ஓங்குநிலை வேங்கை ஒள்ளிணர் நறுவீப்
போந்தைஅம் தோட்டின் புனைந்தனர் தொடுத்துப்
பல்லான் கோவலர் படலை சூட்டக்
கல்ஆ யினையே கடுமான் தோன்றல்!
வான்ஏறு புரையும்நின் தாள்நிழல் வாழ்க்கைப்
பரிசிலர் செல்வம் அன்றியும் விரிதார்க்
கடும்பகட்டு யானை வேந்தர்
ஒடுங்க வென்றியும், நின்னொடு செலவே. (புறம் 265)
உரை: ஊரிலிருந்து வெகு தொலைவில், பாறைகள் சூழ்ந்த பாழிடத்தில், ஓங்கி உயர்ந்த வேங்கை மரத்தின் ஒளிபொருந்திய பூங்கொத்துகளைப் பனங்குருத்துக்களோடு சேர்த்துத் தொடுத்த மாலையைப் பல பசுக்களையுடைய இடையர்கள் சூட்டி வழிபடும் நடுகல்லாயினாயே விரைந்து செல்லும் குதிரைகளையுடைய தலைவன்! மழையுடன் தோன்றும் இடிபோன்ற வலிமையும், வண்மையும் உடைய உன் அடி நிழலில் வாழும் பரிசிலர்களின் செல்வம் மட்டுமல்லாமல் மலர்ந்த மலர்களாலாகிய மாலையணிந்த, விரைந்து செல்லும் வலிமையுடைய யானைகளையுடைய வேந்தர்களின் குறையாத வெற்றியும் உன் இறப்பால் உன்னுடன் மறைந்தனவே.
இப்பாடலில் பேசப்பட்ட தலைவன்(தோன்றல்) வேட்டுவ குடியை சேர்ந்தவன் .இவர் ஊரை உடையவர் .இவர் ஊரில் வாழும் ஆயர் குடியினருக்கு கால்நடைகள் உடையவர்களாக இருந்தனர் .
பகைவர்கள் வேள் ஊரில் ஆயர் குடியினருக்கு சொந்தமான கால்நடைகளை கவர்ந்தனர் .வேட்டுவ குடியை சேர்ந்த தலைவர்கள் பகைவர்களோடு சண்டை போட்டு ஆநிரைகளை மீட்டதை பல நடுகற்கள் கூறுகிறது .
பகைவர்களிடம் இருந்து ஆநிரைகளை மீட்டு வீர மரணம் அடைந்த வேட்டுவ குடியை சேர்ந்த வீரர்களுக்கு நடுகல் எடுக்கப்பட்டனர்.(அகம்269/5-13, புறம் 260,261,263 -265).
போர்களில் வீர மரணம் அடைந்த வேட்டுவ குடியை சேர்ந்த வீரர்களுக்கு நடுகல் எடுக்கப்பட்டனர்.(அகம் 67/5-11,231,மலை 386-391)
'வேள் ஊர் அவ்வன் பதவன் ' (வந்தலக்குண்டில் இருந்து 15 கி. மீ தொலைவில் உள்ள புளிமான் கோம்பை தமிழ் பிராமி கல்வெட்டு கி மு 300)
வேள் ஊரை சேர்ந்த அவ்வன் பதவன் என்பவர் பகைவர் கவர்ந்த ஆநிரை மீட்டு போரில் வீர மரணம் அடைந்தார். இவருக்கு நடுகல் எடுக்கப்பட்டது .
நடுகல் வழிப்பட்டு பாடல்கள்
ஆற்றங்கரை வேட்டுவனே அதிகாரம் பெற்றவனே
துண்டு தடிகாரா தூரப்போன வல்லவனே
வில்லால் மிகுந்தவனே வேட்டுவனே யான் சரணம்
சர்வம் சரணமப்பா சாட்சாங்க தொண்டனிட்டேன்
ஆறு ப்பு நூறுபிழை அடியேன் யான் செய்தாலும்
அப்பா மனம் பொறுத்து அனைவரையும் காத்தருளும்
வெள்ளை குதிரையேரி வெளிப்பட்டு வரவேண்டும்
வெண்கலத்தமுக்கு போட்டு வீசி நீ வரவேண்டும்
மூங்கில் வனத்தை விட்டு வெளிப்பட்டு வாருமப்பா .
காட்டை வளைத்து வில்லாய் பூட்டி
கானாய் கோபவிடும் செந்தலை வேட்டுவா
கோ கோ குமரா கொலுவுக்கு அலங்கார
நீதி வாகனா நித்திய அவதாரா
அரிக்கும் சிவனுக்கும் உற்பத்தியாய் பிறந்த
அரிமால் புத்திரா ஐயனாரப்ப
வேட்டுவ தலைவா வேடியப்பா.
வேள் ஊரில் வாழும் குடிமக்கள் நடுகல் வழிபாட்டு பாடலை பாடி நடுகல்லை வணங்குவார்கள் .
வேள் எனும் வினைச்சொல் விரும்புதல் என விளக்கம் பெறும்.இதுவே பெயர் சொல்லாகும் போது விரும்பப்படும் நபர் எனப் பொருள் படும் .
தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர்
வேள் நீர் உண்ட குடை ஓர் அன்னர் கலி 23/8-9
தோள்களை அணைத்துச் சுகம் கண்டபின் கைவிடப்பட்டவர்கள் விரும்பி நீர் குடித்துவிட்டுத் தூக்கியெறிந்துவிட்ட குடைக்கு( இலைகளால் செய்யப்பட்ட குடை ) ஒப்பானவர்கள்.
தாள் இலாளர் வேளார் அல்லர் புறம் 207/5
முயற்சி இல்லாதவர் விரும்பப்படும் நபர் அல்லர்
முருக கடவுளை நெடுவேள் ,பெருவேள் ,செவ்வேள் ,வேள் ,கந்த வேள் ,முருகவேள் (மலை 164;ஐங் 250 /4;பதி 11 /6;பரிபாடல் 8 /61 ,18 /26 ,3 /37 ,5 /13 ,9 /36;பெருங்கதை உஞ்சை ;42 /56 ;கந்த புராணம் )
மன்மத கடவுளை காம வேள் என்றழைக்கப் பட்டனர் .(கலி ;27 /24தேவாரம் அப்பர் ;242 /1 ,661 /1 ;தேவாரம் சுந்தரர் 53 /3)
மலைக்கு உரிமையானவர்களை மலைகிழவோன் , மலை கிழவோர் என்றழைக்கப்பட்டனர் .(நற்றிணை 28/9;கலி 40/34;அகம் 10/18; ஐங் 204/5) .
முருக கடவுளை குறிஞ்சிக் கிழவ,மலை கிழவோயே என்றழைக்கப்பட்டனர் .(திருமுருகாற்றுப்படை 267 ,317).
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே(தொல் ,அகத்.5)
குன்று பகுதிகளுக்கு மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் தலைவனாகவும் , காட்டு பகுதிகளுக்கு மாயோன் தலைவனாகவும் நீர் பாயும் பகுதிகளுக்கு வேந்தன் தலைவனாகவும் ,மணல் பகுதிகளுக்கு வருணன் தலைவனாகவும் தொல்காப்பியம் கூறுகிறது .
பெரும்பான்மையான வேட்டுவ குடியை சேர்ந்த வேளிர்கள் குன்றுகளையும் (குறிஞ்சி ), குன்றுகளை சுற்றி இருக்கும் காட்டு பகுதிகளையும் (முல்லை ) ஆண்டார்கள் . இதனால் குறிஞ்சி நில தலைவனான முருகனை வேள் என்று அழைக்கப்பட்டார்
இவர்களில் சிலர் மருத நிலம் மற்றும் நெய்தல் நில பகுதிகளையும் ஆண்டார்கள் .
வேண்டி ,வேண்டு -விரும்பு (தொல் பொருள் 6/22,28;5/3)
வேட்ட -வேள்வி ( மது 29,130 ;அகம் 36/22;புறம் 26/11)
வேட்ட - விரும்புதல் (நற் 14/5,372/6’7 ;குறு 143/4;பதி 29/11’12;கலி 12/4,17/18;அகம் 353/13;புறம் 177/8,336/1)
வேட்டு - விரும்புதல் (பட் 234,235, அகம் 144/14 )
வேள்வி - புறம் 251/6,7
வேட்டும் - வேள்வி(புறம் 166/22,23)
வேட்டுவர் குடி -முல் 26
வேட்ட எனும் வினைச்சொல் விரும்புதல் என விளக்கம் பெறும்.இதுவே பெயர் சொல்லாகும் போது விரும்பப்படும் நபர் எனப் பொருள் படும் .
வேட்டவர்,வேட்டவன் (விரும்பியவர் ) - சிந்தா:13 2972/4 ,10/2107/1
வேட்டன பெறாமை துன்பம் விழை நரை பிரிதல் துன்பம் - சிந்தா:13 2799/1
வேட்டன செய்யும் வேட்டு வினை கடும் தொழில்
கவர் கணை வாழ்க்கை சவரர் புளிஞர் - பெருங்கதை உஞ்ஞை 55/67-68
வேட்டன –விரும்பியதை; சவரர் =சபரர்
வேட்டுவ குடியில் உட்குழு தலைவர்களை வேள் என்றழைக்கப்பட்டனர் .
வேட்டுவ குடியில் உட்குழு தலைவர்கள் வேள் வினை (வேட்டு வினை ) செய்தார்கள் .இதனால் வேட்டுவ குடியில் உட்குழு தலைவர்களை வேள் என்றழைக்கப்பட்டனர் .
சமரபிரானை 'யது வம்ஸ கேதோ ' என்று கொடும்பூர் கல்வெட்டு கூறுகிறது .
சமர பிரான் ஒருவனின் முன்னோர் ஒருவனின் இயற்பெயர் யாதவன் .இவன் வழியில் சமர பிரான் வந்ததால் 'யது வம்ஸ கேதோ ' என்று கூறப்பட்டு உள்ளான்.
விக்கிரம கேசரியின் இயற்பெயர்களுள் ஓன்று 'யாதவன்' .இதனால் விக்கிரம கேசரியை 'யாதவ ' என்று கூறப்பட்டு உள்ளான் . இவர்களை ஆயர் குடியினர் என்று கூறுவது தவறான கருத்தாகும்
மாயோன் மேய மன் பெருஞ் சிறப்பிற்
தாவா விழு புகழ் பூவை நிலையும் - பொருள். புறத்:5/10
அரசர்களை புகழ்ந்து பாடும் போது அவர்களை மாயோனாகிய திருமாலுடன் ஒப்பிட்டு வாழ்த்துவது வழக்கம் ,இவ்வகை வாழ்த்தினை தொல்காப்பியம் பூவை நிலை எனக் குறிப்பிடும் . வேட்டுவ குடியை சேர்ந்த வேளிர்களின் குடியிருப்புகள் முல்லை நில குறும்புகளில் இருந்தது .இதனால் வேட்டுவ குடியை சேர்ந்த வேளிர்களை முல்லை நில தலைவனான மயோனோடு தொடர்பு படுத்தி கூறப்பட்டு உள்ளனர்.
மாயோன் மேய காடு உறை உலகமும் - பொருள். அகத்:5/1
மாயோன்(திருமால் ) முல்லை நில தலைவனாக கூறப்பட்டு உள்ளார் .
புலவர் நச்சினார்க்கினியர் அவர்கள், தொல்காப்பியப் பாயிரவுரையிலும் மற்றும் தொல்காப்பிய அகத்திணையியல் 32 ஆம் நூற்பாவுரையிலும் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறார்கள்
”தேவரெல்லாங்கூடி ‘யாம் சேரவிருத்தலின் மேருத்தாழ்ந்து தென்றிசை உயர்ந்தது; இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற்குரியர் என்று அவரை வேண்டிக்கொள்ள, அவரும் தென்றிசைக்கட் போதுகின்றவர்…..துவராபதிப்போந்து, நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும், பதினெண்கோடி (குடி )
வேளிர் உள்ளிட்டாரையும், அருவாளரையுங் கொண்டுபோந்து காடுகெடுத்து நாடாக்கி பொதியிலின்கணிருந்து”
“வேந்துவினையியற்கை” என்ற தொல்காப்பிய சூத்திரத்தின் அவதாரிகையிலும்-“இது, மலையமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும் வேந்தன் தொழில் உரித்தென்கின்றது”
அகத்தியர் வட நாட்டு துவரை பகுதியில் இருந்து நெடுமுடி அண்ணல் (முல்லை நில தலைவன் ,மாயோன் ) வழிவந்த அரசர் 18 பேர்களும் 18 குடியை சேர்ந்த வேளிர்களையும் அருவாளர்களையும் தமிழ் மண்ணிற்கு அழைத்து வந்து காட்டை அளித்து நாட்டை உருவாக்கினார்கள் என்று
பதினெண்குடி வேளிர் =18 வேட்டுவ குல தலைவர்களை குறிக்கும்.
நச்சினார்க்கினியர் புராணக்கதை அல்லது வாய்வழி செய்தியை தழுவி இச்செய்திகளை கூறியுள்ளார் .
“நீயே-வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச்
செம்புபுனைந் தியற்றிய சேணொடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே”
எனக் கூறியிருக்கும் அடிகள் புறநானூற்றில் (201) காணப்படுகின்றன. இதன்பொருள்:- நீதான், வடதேசத்து முனிவர் ஒருவரது யாகத்திற்றோன்றி, செம்பால் அழகாகச் செய்யப்பட்ட மிகப்பெரிய கோட்டையுடைய, வெறுப்பில்லாத பொன்மயமாகிய துவாரகையை ஆண்டு, நாற்பத்தொன்பது தலைமுறையாகவந்த பல வேட்டுவ குல தலைவர்களில் சிறந்த வேட்டுவ குடி தலைவர்(வேளிருள் வேளே) .
.தமிழ் வேட்டுவ குல தலைவரை வட நாட்டு துவரையை ஆண்ட கண்ணபிரானொடு தொடர்பு படுத்தி கபிலர் கூறி உள்ளார்.
வேட்டுவ குடியினர் ஆயர்களின் கால்நடைகளை திருடர்கள் மற்றும் பகைவர்கள் ஆகியோரிடம் இருந்து வேட்டுவ குலத்தலைவர்கள் பாதுகாத்தார்கள் .இதை கல்வெட்டுகளும் இலக்கியங்களும் உறுதிப்படுத்துகிறது .இதனால் தமிழ் வேட்டுவ குடி தலைவரை வட நாட்டு கண்ணனோடு (யாதவன் ) தொடர்பு படுத்தி கூறப்பட்டு உள்ளது .
உலகில் நிலவும் அநீதியை ஒழித்து நீதியை நிலைநாட்டுவதற்காக மாயோனாகிய திருமால் எடுத்த பத்து திரு வடிவங்களுள் ஒன்றே கிருஷ்ண அவதாரம் எனப்பெறும் கண்ணனின் தோற்றமாகும் .இக்கண்ணன் (யதுவன்) வட நாட்டிலுள்ள துவாரகையில் யது குலத்தில் தோன்றினான் .இறைவன் ,இறைவி ஆகியோர்களின் திருப் பெயர்களையும்,அவர்கள் குடி கொண்டுள்ள திரு தலங்களின் பெயர்களையும் இன்றைக்கும் மக்கள் தங்கள் இயற்பெயராக வைத்துக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது .மால் (திருமால்) ,யதுவன் (கண்ண பிரான்),திருக்கொடுங்குன்றமுடையான் போன்ற திருபெயர்களை தமிழ் வேட்டுவ குடியை சேர்ந்தவர்களும் வைத்து கொண்டார்கள் .
கிபி 1530 களில் விஸ்வநாத நாயக்கன் வேட நாயக்கர் சாதியினரை ஆந்திர பகுதியில் இருந்து அழைத்து வந்தான் .இவர்கள் ஆய்க்குடி,பழனி பகுதிகளில் பாளையக்காரர்களாக இருந்தனர் .(டி.2851 ,3118 ,3256) . இந்த பாளையக்காரர்களில் ஒருவர் வம்சாவளியை கூறும்போது 'யெது குல வமுச வரலாற் விபரம் 'என்று கூறியுள்ளார் .இவர்களின் முன்னோர் ஒருவனின் இயற்பெயர் யாதவன் .இதனால் யெது குலம் என்று கூறி உள்ளார் .இவர்கள் என்று பழனி ,தேனி பகுதியில் வேட நாயக்கர் சாதியினராக தெலுங்கு மொழி பேசுவர்களாக வாழ்த்து வருகிறார்கள் .இவர்களை ஆயர் குடியினர் என்று கூறுவது தவறான கருத்தாகும்.
'கள்வன் பெறுவதும், தாமன் கள்வன், மலையமன் நக்கன், காடன், வேம்பன் ‘போன்ற பெயர்களை இடையர்கள் தங்களது இயற்பெயர்களாக வைத்து கொண்டனர். (SII Vol-2,No-95) .
இங்கு இயற்பெயர் எல்லாம் குடி பெயராக கூறுவது தவறான கருத்தாகும்.
பதினான்கு வேளிர்கள் ஒன்று கூடி வந்து கழுவுளின் (ஆயர் குல தலைவன்) காமூரை அழித்து,ஆநிரைகளை கவர்ந்தனர் .(அகம்- 135/10-14,365/11-15: பதிற்-71/13-18). ஆயர்கள் வேள் குலத்தவர்கள் கிடையாது என்பதற்கு இது ஒரு சான்று .
பதினான்கு வேளிர்கள் =14 வேட்டுவ குல தலைவர்கள்
ஆய் என்ற சொல் ஆய்குடி ஊரை குறிக்கும் .ஆய் என்ற சொல் ஆயர் குடியை குறிக்காது .
மதுரை ஆனைமலை கல்வெட்டில் (SII Vol -14 ,No -1) பேசப்பட்ட 'களக்குடி' ஊரை வேள்வி குடி செப்பேட்டில் 'கரவந்தபுர குலம் ' என்று கூறப்பட்டு உள்ளது .
ஆய் என்ற சொல்லின் வட மொழி சொல் யாதவன் .இதனால் ஆய்குடி ஊரை யாதவக்குடி என்றும் அழைக்கப்படும் .
அண்டிரன் ஆய்க்குடி ஊரை உடையவன் .இதனால் அண்டீரனை ஆய் அண்டிரன் என்று அழைக்கப்பட்டான் .
வேட்டுவ குடியினரின் உட்குழுக்களின் குல பெயர்கள் ஊர் பெயர்களில் அழைக்கப்படும் .
'அரைய நாட்டு துடுமலில் இருக்கும் காட்டு வேட்டுவன் முத்தன் சக்கையன்' என்று கரூர் வேட்ட மங்கலம் கல்வெட்டு (கிபி 13) கூறுகிறது.
துடும ஊரை சேர்ந்த முத்தன் சக்கையன் என்பவன் காட்டு வேட்டுவ குலத்தை சேர்ந்த ஒருவனின் பெயர் ஆவான்.
அரைய நாட்டு செப்பேடு (கிபி17 ) 'துடும வேட்டுவர் ' பற்றி கூறுகிறது .
காட்டு வேட்டுவ குலத்தவர்கள் துடும ஊரை சேர்ந்ததால் துடும குலம் ,துடும வேட்டுவர் என்று அழைக்கப் படும் .
இதுபோலத்தான் வேட்டுவ குடியினர் ஆண்ட ஆய்க்குடி ஊரையும் பார்க்க வேண்டும் .
வேட்டுவ குடியினரின் புற மணம்,அக மணம் முறைகள் :
வேட்டுவ குடியில் ஒரு உட்குழுவை சேர்ந்தவர்கள் தங்களுடைய பெண்களை சகோதரிகளாக கருதி வேட்டுவ குடியில் மற்றொரு உட்குழுவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தனர் இதுவே புற மண முறையாகும் . வேட்டுவ குடியினர் மற்ற இனக்குழுவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்யாமல் வேட்டுவ குடியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தனர் .இதுவே அகமணம் முறையாகும் .