கொடும்பாளூர் வேள் - குடுமி வேட்டுவ குல தலைவன் :
இருக்கு வேளிர்களை கல்வெட்டுகளில்
“இருக்குவேள்”, “இருக்கு வேளார்”, “இருக்கு வேளான்” (PSI -9, 22, 26)
‘மஹிமாலைய இருக்குவேளார்’ (1904:349)
‘பிராந்தகன்
இருங்கோளராகிய சிறிய வேளர் ‘(SII Vol-13, No120)
'கொடும்பாளூர் வேளிர் இருங்கோளன்’ (SII Vol -3, No-119,120)
'சேனா பதியம் செய்கிற பிராந்தகன் சிறிய வேளான் ஆன திருக் கற்றளி பிச்சனேன்'(1908:291).
‘ஈழத்து பட்ட கொடும்பாளூர் வேளான் சிறிய வேளான் மகன் வேளான் சுந்தர சோழன்’ (SII
Vol-5, No 980; 1896:116).
“கொடும்பாளூர் பிராந்தகன் இருங்கோளன் ஆன சிறிய வேளார் "(SII
Vol-13 part-3, No-119)
'கொடும்பாளூர் ராஜேந்திரசோழ இருக்குவேளார் '(SII Vol-4, No-544; கிபி 1059)
‘பிராந்தகன் குஞ்சிரமல்லனான வீரசோழ இளங்கோ வேளானேன்’ (PSI
No-255)
"உறத்தூர் கூற்றத்து கொடும்பாளூர் உடையார் சேனாதிபதிகள்
மதுராந்தக இளங்கோவேளான்"(கிபி 10 ; PSI No -191
)
போன்ற பெயர்களில் கூறப்பட்டு உள்ளனர்
.
இருக்குவேள்,இருங்கோளன், இருங்கோவேள் என்பன ஒரு பொருட் பெயர்களாகும் .
இக்கல்வெட்டுகள் வேள் என்ற சொல்லில் இருந்து வேளிர் ,வேளர் ,வேளார் ,வேளான் போன்ற
சொற்கள் பிறந்ததை உறுதி படுத்துகிறது .மேலும் இருங்கோ வேள் ,இருக்கு வேள் போன்ற பெயர்கள்
ஒருபொருட் பெயர்கள் என்பதையும் உறுதிப்படுத்தும் .
'ஸ்ரீ கொற்றம் பூதி நிரை பின் போடிய் பட்ட இடம்'
(திருச்சி வடசேரி ஊர் நடுகல் கிபி 10, தமிழ்நாடு கல்வெட்டுகள் 2004 தொடர் எண் 33/1990)
ஆநிரை மீட்கும் போரில் இறந்த கொடும்பாளூர் வேளிருக்கு நடுகல் எடுக்க பட்டு
உள்ளது .
"இருங்கோளப்பாடி பெண்ணாகடக் கூற்றம்” (1945-50:198)
'இருங்கோளப்படி பிடவூர் நாடு ' (1906:312)
'இருங்கோளப்படி நாட்டு விளந்தை கூற்றம் '(1916:230)
விருதராஜ பயங்கர வள நாட்டு மேற்காநாட்டு இருங்கோளப் பாண்டி நாடு '(1928-29:211)
கிபி 11 ஆம் நூற்றாண்டுகளில் கோநாட்டை ஆண்ட
இருங்கோளன் (இருக்கு வேளிர்) பெயரில்
சில நாடுகளை சோழ அரசர்கள்
உருவாக்கினார்கள் .
இருக்கு வேளிர் =இருங்கோ வேள்
இருங் என்ற சொல் இருக்கு என்று மருவியது .
குடுமி :
குடுமி என்ற சொல் குடுமியாமலையை குறிக்கும் சொல் ஆகும் .
"குன்று
சூழ்நாட்டு ஒல்லையூர் கூற்றத்து கோனாட்டு நாயனார் குடுமியாமலை நாயனார் குடுமிநாத
சுவாமி காரியத்துக்கு கடவார்" (PSI No-867; கிபி 15)
கோனாட்டில்
குடுமியாமலை இருந்ததை இக்கல்வெட்டு கூறுகிறது .
குடுமி என்ற சொல் குடும என்று மருவும் (மருவு புணர்ச்சி )
மகிமாலையை இருக்குவேள் வம்சாவளியினர் கிபி 940 களில் இருந்து கிபி 1320 வரை கொங்கு
நாட்டை சோழர்கள் பெயரில் அரசாட்சி செய்தார்கள் .
'...பொங்கலூர் நாட்டு கீரனுரான கொழுமம்கொண்ட சோழநல்லூர் உடையார்
சுந்தன் அதிசய சோழனான குலோத்துங்க சோழ இருங்ககோளன் மணவாட்டி இளையாண்டியேன்" (S.I.I
Vol-V, No-266,கி பி 1218,கீரனூர் )
உடையார் -மன்னர்
இருக்கு வேள் -குலோத்துங்க சோழ இருங்ககோளன்(கி பி 1196-1207)
'.... பொங்கலூர் நாட்டு கீரனூர் குடுமரில் சுந்தன் அதிசிய
சோழனான குலோத்துங்க சோழ இருங்ககோளன் இந்நாயனார் திருவாகிச்வரமுடையார்'
(S.I.I Vol-V, No-278, கி பி 1218,கீரனூர்
)
இருக்குவேள் குடுமி குலத்தை
சேர்ந்தவன் என்பதை இக்கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகிறது .
''ஸ்வஸ்தி விக்கிரமசோழதேவருக்கு யாண்டு ஏழாவது இக்கோவில்
திருநிலைவாரணையும் பொங்கலூர் நாட்டு கீரனூரில் இருக்கும் ஐங்கை குடுமிச்சிகளில்
சோழன் உமையால் அனுந்திர பல்லவ அரசி தருமம்’
(பல்லடம் செலகரிச்சல் கல்வெட்டு, கிபி 1280)
ஐங்கை = கொற்றவை
குடுமிச்சி-பெண்பால் பெயர்
குடுமர் -ஆண்பால் பெயர்
.
'பொங்கலூர் நாட்டு குண்டோடத்தில் குடுமிச்சிகளில்
சிங்கன்கோவியார் சிறு அங்கராயன் மனைக்கிழத்தி '(குண்டடம்;
கிபி1219; 1920:117).
குடுமிச்சி-பெண்பால் பெயர்
குடுமர் -ஆண்பால் பெயர்
குடுமி குலத்தை சேர்ந்த பெண்களை குடுமிச்சி என்று கல்வெட்டுகளில் அழைக்கப்
பட்டனர் .
இங்கு குடுமி என்ற சொல் குடுமியாமலையை
குறிக்கும் சொல் .
இருக்குவேள் குலத்தவர்கள் குடுமியமலை பகுதியில் இருந்து கொங்கு நாட்டுக்கு
வந்தனர் .இதனால் இருக்குவேள் குலத்தவர்களை
குடுமி குலத்தவர்கள் என்று அழைக்கப் பட்டனர் .
இருக்கு வேளின் பங்காளிகள் :
'பொங்கலூர்
நாட்டு குண்டோட முதலிகள் குடுமரில் காடன் உலகை வலம் வந்தான் '(குண்டடம், கிபி 1251)
முதலிகள்=முதன்மையானவர்கள்
'பொங்கலூர்
நாட்டு குண்டோடத்தில் குடும்மரில் இருங்கோளன் காவனா....'(குண்டடம், கிபி 1159)
குடுமர் என்ற
சொல் தோன்றல் விகாரத்தித்தில் குடும்மர்
என்று அழைக்கப் படும் .
'தென்வழி
நாட்டு ஏழூர் ஊராளி தென் குடுமரில் சிங்கன் சோழனான அணுத்தரப் பல்லவரையன்'(பேரூர் பட்டிஈஸ்வர், கிபி 13)
'கரை வழி
நாட்டு ஏழூர் தென் குடுமரில் ஆரியன் உலகுய்ய வந்தானான வீரராஜேந்திர அணுத்தரப்
பல்லவரையன்'(கடத்தூர், கொங்க
விடங்கேஸ்வர் கிபி 1233)
'கரை வழி நாட்டு
ஊராளி தென் குடுமரில் சிங்க சோழனான இராசராச தேவன் '(கடத்தூர்
திருமருதுஉடையார், கிபி 12)
'கரை வழி
நாட்டு ஏழூர் தென் குடுமரில் அணுத்தரப் பல்லவரையன்'(தாராபுரம்,கிபி 1230).
(குடுமி
வேட்டுவ குலத்தவர்கள் தென் வழி நாட்டில் ஊராளிகளாக இருந்ததால் தென் குடுமர் என்று
அழைக்கப்பட்டனர்.)
'குடுமி தேவர்
எழுத்து ' (பழனி,
SII VOL -5, NO -287,கிபி 1275)
பழனி
சுப்பிரமணியர் கோவில் வடக்கு சுவர் கல்வெட்டு வீர பாண்டியனின் 25 ஆம்
ஆண்டை(கிபி 1275 ) சேர்ந்தது . இக்கல்வெட்டில் ஒப்பம்
எட்டவர்களில் ஒருவர் "குடுமி தேவர் " ஆவர்
" ..பட்டாலிவூரோம்
.......குண்டை யூராளி தோட்டத்துக்கு மேற்கும் .." ( காங்கேயம் பட்டாலி ஊர் ;
கிபி 1278 ;1920 :258 )
குண்டை யூராளி =
குண்டடம் ஊராளி
குடுமி வேட்டுவ குலத்தை சேர்ந்த குண்டடம் ஊராளி பட்டாலி ஊரில் காணி வைத்து இருந்ததை
இக்கல்வெட்டு மூலம் அறியலாம்
" கோனாடனான கடலடையாதிலங்கை கொண்ட சோழ வளநாட்டு குன்று சூழ் நாட்டு திரு
நலக்குன்ற நாயனார் குன்றிடங்கொண்ட நாயனார்
திருக்கோவில் முன்னாள் அனாத காலமாக பூசை இல்லாமல் இருந்து நவபிறிதிட்டையாக பூசை
நடத்துகையில் பூசை முதலுக்கு இந்நாடு உறத்தூர் கூற்றத்து அண்ணல்வாசல் பற்று
அந்தன்குடி முன்னாள் நயினார் குடுமியார் நயினார் திருநாமத்துக் காணி மூன்றத்
தொன்று நீக்கி இருகூறும் விட்ட பெரு நான்கெல்லைக்கு விட்ட குடி காடு ...நஞ்சை
புஞ்சை எப்பேற்பட்டனவும் திருநாமத்துக்
காணியாக கல்வெட்டி கொடுத்த ஸ்ரீ கண்ட கோபால
நாஞ்சில் பசிபால கலாளி நொதஞ்சிமன் சியல ...சோழ ராஜ்ஜியத் தாபநாச ...தெப்ப
நாயக்கர் குமரன் இராகுவ நாயக்கர் தம்முடைய தர்மமாக கோயில் நவபிறிதிட்டை பண்ணி
நிற்ற கைக்கு சந்திராதித்த வரை செல்ல கடவதாகவும் ..வழுத்தூர் அஞ்சு நாட்டார்
சொற்படிக்கு இக்கோவில் கணக்கு மீனவராயர் எழுத்து " (PSI No -741 ).
நயினார் குடுமியார் = மன்னர்
குடுமியார் (கோநாட்டை அரசாட்சி செய்தவர்)
“நயினார் மாவலி வாணாதிராயர் “(PSI No -815; கிபி 1497).
நயினார் என்ற சொல் மன்னரை குறிக்கும் என்பதை இக்கல்வெட்டு உறுதிப்படுத்தும் .
குடுமி வேட்டுவர் கோ நாட்டை ஆண்டதால்
"குடுமி கோனாடு " என்று கல்வெட்டுகளில் அழைக்கப் பட்டனர் .(PSI No -906; கிபி 15).
முன்னாளில் (அந்த காலத்தில் ) கோயில் பூசை இல்லாமல் இருந்து பூசை நடைபெற்றது
.இந்த பூசை நடைபெறுவதற்கு கோனாட்டை ஆண்ட
மன்னரான குடுமி வேட்டுவன் அண்ணல்வாசல் பகுதியில் நிலத்தை கோவிலுக்கு திரு
நாமத்து காணியாக கொடுத்தார் .விஜயநகர வேந்தர் ஆட்சியிலும் அந்த நிலத்தை
அக்கோவிலுக்கு திருநாமத்து காணியாக
கொடுக்கப் பட்டு உள்ளது.
"கோ சடை பன்மரான திருபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ வீர
பாண்டிய தேவருக்கு யாண்டு 27 வைத்து ஆவணி மதம் 2 தியதி நாள் தென்கோனாட்டு சீகாநல்லூர் குடுமியார் உதையப்பெருமாள்
உள்ளிட்டாருக்கு புல்வயல் அஞ்சு நிலை ஊரக இசைந்த ஊரவரோம் தீர்வு முறி குடுத்த
பரிசாவது .." (PSI No -600 ;கிபி 13 ).
சண்டையை தீர்த்து வைத்ததற்கு புல்வயல் ஊரார் தென்கோனாட்டு சீகாநல்லூர் குடுமி
வேட்டுவ குலத்தை சேர்ந்த (குடுமியார் )உதயபெருமாளுக்கு தீர்வு முறி பரிசு கொடுத்தார்கள்.
"குலசேகர தேவருக்கு 32 வது ஆள்கொண்ட தேவரான தன்மராயர் அனைவாடுகையில் இவர்க்கு இளையாவொருடன் மரித்த
ஆவுடை நாச்சியார் தாயார் தினாண் டாலுக்கு
சந்திராதித்தவரை இறையிலி ஆக காரிமங்களது வயலில் ஒன்றும் வன்னிய கண்டன்
வயக்கல் தடி முழு துமுருணியும் 35 வதிலே
ஏவல் காரிமங்கலத்து நாயனாருக்கு குடி நீங்கா காராங் காணி ஆக விளைஞ்ச ஆண்டை ஐங்கல
நெல்லு கடமை இறுத்து போதவேணுமென்று
செல்லுகையில் திருப்படியிலே நீர்வார்த்து திருசூழதாபனம் பண்ணி திரு
மண்டபத்திலே இக்கல்வெட்டி கொடுத்தேன் தென் கடம்பாண்டாரான தன்மாராயனேன் குடுமியார்
எழுத்து சுந்தரபாண்டிய தேவர் எழுத்து
சேந்தமங்கல நாட்டவர் எழுத்து " ( PSI No-410)
ஆள்கொண்ட தேவரான தன்மராயருக்கு தென் கடம்பாண்டாரான தன்மாராயர் கல்வெட்டி
கொடுத்துள்ளார் .இதற்கு சாட்சி கையெழுத்து யிட்டவர்களில் குடுமியார் , சுந்தரபாண்டிய தேவர் மற்றும் சேந்தமங்க
நாட்டவர்கள் ஆவார்கள் .
இருக்கு வேள்
குடுமியாமலை பகுதியை சேர்ந்ததால் இருக்கு
வேள் குலத்தவர்களை குடுமி (குடும ) என்று அழைக்கப் பட்டனர் .
இருக்கு வேளின் கிளை சுற்றத்தினர் குடுமியான் மலை பகுதியில் இருந்து கொங்கு
நாட்டுக்கு வந்து கொங்கு நாட்டை ஆண்டார்கள் .இதனால் இவர்களை குடுமி ,குடுமர்,குடுமிச்சி
என்று அழைக்க பட்டனர் . குடுமி குலத்தவர்கள் தென் வழி நாட்டில் ஊராளிகளாக
இருந்தார்கள் .இதனால் இவர்களை தென் குடுமர் என்று அழைக்க பட்டனர்.
இருக்குவேளிர் குடுமி வேட்டுவ குடியை சேர்ந்தவன் என்பதற்கு
ஆதாரம் :
ஆதாரம் 1:
"ஸ்வஸ்தி ஸ்ரீ கோவி ராஜகேசரி பன்மற்கு 6 வது பருவமான மதிநாள் பசும்
பஞ்சமி நாள் மூலங்கிளமை வெள்ளிபொது முன்கொற்குறி
இது நாளிது பருவமாக உறையூர்க் கூற்றத்து நின்றுந் துணிந்து பொயத் தரம்பற்றூர் நாட்டுப்படை ஏவிய பிரமதேயம் ஈசானமங்கலத்து நன்பகலாவணத்தியன்ற விலையாவணமாவது
இவ்வூர்ப் பாரதாயன் கண்டன் வீரநாராயணனேன் இவ்வூர்க் கீழர் என்னுடைய திருமாலிருஞ் சோலை வயக்க வென்று
பேர்கூவப்படும் செய்யைத் தஞ்சாவூர் கூற்றத்து
தஞ்சாவூர் பெருமாள் பெண்டாட்டி வேட்டுவன் ஆதித்த பிடாரிக்கு விற்றற் கிசைந்த எல்லை கீழ்பாற்கெல்லை தெற்கு நோக்கிப் பாய்ந்த
கண்டன் வாய்க்கு மேர்கு தென்பார்க்கெல்லை கிழக்கு நோக்கிப்போன தெருவுக்கு
வடக்கு மேற்பார்க்கெல்லை பருடை நிலத்துக்கு கிழக்கு வடபாற்க்கெல்லை இக்கண்டன்
வாய்க்கெய் தெற்கும் இவ்விசைத்த பெருநான்கெல்லைக்குட்பட்ட நிலம் உண்ணிலம் ஒழிவின்றி அஞ்நூற்றுச் சின்னம் பாத்தியும் உண்ணிலம் ஒலிவின்றி
மிகுதிக்குறைவு உள்ளடங்க விற்றுக்குடுத்து கொண்ட விலைப் பொருள் வெடெல் விடகு கல்லாற் றுளைப்பொன் முப்பத்தின் கழஞ்சும் ஆவணக்காளியிலேய் நிறை நிருபித்துக் கொண்டு இந்நிலம்
விலைக்கர விற்றுப் பொருளறக் கொண்டு
இது வேய் விலையாவணமும் பொருள் மாவறுதிப் பொருள் செலவோலையும் இதுவே
யாவதாகவும் விற்று விலையாவணம் செய்து குடுத்தேன் வேட்டுவன் ஆதித்த பிடரிக்குப்
பாரதாயன் கண்டன் வீரநாராயணனேன் ஐம்பருடை பிரமப்
பெருந்திணைக் காய்க் கணக்கெழுதுகிற
துவ்வோருடையான் காமன் சிறப்பனென் இவை என்னெழுத்து இப்படி ஏற்றி விற்று குடுத்தேன்
கண்டன் வீரநாராயணனேன் இவை என்னெழுத்து இந்நிலத்தை இவ்வாண்டேய் சோழப்பெருந்தேவியான பட்டன் மல்லியேன் எங்கள்
ஆச்சி வேட்டுவன் ஆச்ச (ஆதித்த ) பிடாரி இவ்வூர்
பாரதாயன் கண்டன் வீரநாராயணனிடை
விலைகொண்டு உடைய திருமாலிருஞ் சோலை
வயக்களென்று பேர் கூவப்படும் சேய்யை
இவரிடைப் பெற்றுடைய செய்ப் பிரமதேயம்
வெடெல் விடகு மங்கலத்து நான் எடுப்பித்த அம்பலத்துக்கு அம்பலப்புறமாக
செய்து குடுத்து இதுக்கு நவநதன் செய்த படி இந்நிலம் ஐந்நூற்று சின்னம் பாத்தியால்
வகைசெய்வார் நீக்கி சுவாமி ஆட்டை வட்ட நெல்
6 ....தண்ணிரட்டும் பிராமணனுக்கு நிசதி நெல் ..ருவர் பிராமணர் உண்ண இவ்
நெய் அட்டுவிப்பதாக நிசத நெய் 40 ம் ஆக நிசத்தி நெல்லு பெ
....நாயறு முதல் ஐஞ்சு திங்களுக்கு நெல்
....அம்பலமெழுகுவாளுக்கு நிசத்தி நெல் க்
...ஆட்டைவட்டம் நெல் 14 விளக்கெண்ணெய் நிசத இவ் நெல் ஆட்டை வட்டம் நெல் ...ங்கு
காவனுக்கு நெல் ...திங்களால் நிசதம் இருவர் பிராமணர் உண்ண நிசதம் அரிசி 10 அகுத்தல் ..நால்வருக்கு க கறிகும் உப்புகு
நெல் 3 ஆக நிசதி நெல் ஆக ஐஞ்சு திங்கணாளைகு நெல் 36 புதுகுப் புறத்துக்கு ஆட்டைவட்டம் நெல்லும் ஆக நெல் 7 ணா ..கும் நிவந்தமாக இவ்வூர்
சபையாரை இரஷிப்பாராகச் சந்திராதித்தவல்
நிற்க செய்து கண்மேல் வெட்டுவித்தேன் சோழப்பெருந்தேவியான பட்டன் மல்லியேன்
“(திருச்சி குளித்தலை ,திருப்பராய்த்துறை தாறு
காவனேஸ்வரர் கோவில் ;கிபி 963 ;SII Vol-8 No-612).
பெண்டாட்டி -பெண்
ஆச்சி =தாய்
வேட்டுவன் ஆதித்த பிடாரி = பூதி ஆதித்த பிடாரி (சோழப்பெருந்தேவியான பட்டன் மல்லியின் தாய் ).
பூதி (இருக்கு வேள்) வேட்டுவ குடியை சேர்ந்ததால் பூதி ஆதித்த பிடாரியை
வேட்டுவன் ஆதித்த பிடாரி என்று
இக்கல்வெட்டில் கூறி உள்ளார்கள் .
சோழப்பெருந்தேவியான பட்டன் மல்லியேன் -சோளனின் மனைவி
பூதியின் குடி பெயர் வேட்டுவன் .இதனால் பூதியை வேட்டுவன் என்று கூறப்பட்டு
உள்ளது .
'வீரசோள இளங்கோவேள் ஆயின பராந்தகன் குஞ்சரமல்லர்' (கிபி 10; SII Vol-8 No-694)
"சிறிய வேளான் மகள் குஞ்சிர மல்லி” பற்றி ஒரு கல்வெட்டு கூறுகிறது.
(கிபி 10;SII Vol-13 No-246)
பராந்தக சிறிய வேளாரின் மகளின் இயற்பெயர் 'குஞ்சர மல்லி ' ஆகும் .
இருக்கு வேள் வம்சாவளியினர் மல்லி என்ற பெயர் வைத்து இருந்தார்கள் .
பூதி ஆதித்த பிடாரி ,பூதி
ஆதித்த படாரி பற்றி கல்வெட்டுகள்
கூறுகிறது .(SII Vol -8 Nos-618-621,623) இவள் உடன் பிறந்தவனை
கல்வெட்டில் பூதி ஆதித்த பிடாரன், பூதி ஆதித்த படாரன் என்று
அழைக்கப் பட்டனர். (SII Vol -8 Nos-601,624). இவர்கள் பூதி
விக்கிரம கேசரியின் மகன் மற்றும் மகள் ஆவார்கள் .
'கன்னர தேவன்
தேவியார் பூதி மாதேவடிகள் '(கிபி 922; SII Vol-8
No-665)
கன்னர தேவன்
ஆதித்த சோழனின் மகன் ஆவான் .
'சோழ பெருமானடிகள்
திரு உடன்பிறந்தார் நங்கை வரகுண பெருமானார் '(SII Vol-13 No-240; கிபி 10)
'பராந்தக
இளங்கோ வேளார் தேவியர் வரகுண பெருமானார்'(SII Vol -3 No-113;
கிபி 10)
சோழ மன்னர்களும்
,இருக்கு வேளிர்களும் மாமன் மச்சான்
உறவினர்கள் ஆவார்கள் .
பாரதாயன் கண்டன் வீரநாராயணன் என்பவர் வேட்டுவன் ஆதித்த பிடாரிக்கு
விலை ஆவணம் செய்து கொடுக்கிறான் .சோழப்பெருந்தேவியான பட்டன் மல்லி ( பூதி
ஆதித்த பிடாரியின் மகள்) இந்நிலத்தில்
வரும் வருவாயை பிரதேயத்தை சேர்ந்த
பிராமணர்களுக்கு உணவு அளிக்க இவ்வூர்
சபையினரிடம் நிவந்தம் செய்து கொடுத்ததை
பற்றி செய்தி .
இக்கல்வெட்டு பூதியை (இருக்கு வேள் )
வேட்டுவன் என்றே கூறியுள்ளது .
ஆதாரம் 2:
குடுமி என்ற சொல் வேட்டுவ குடியில் ஒரு உட்குழு பெயர்
என்பதற்கான ஆதாரம் :
'ஸ்வஸ்தி ஸ்ரீ வீரபாண்டிய தேவருக்கு யாண்டு 6 வது கிழங்கு நாட்டு வேட்டமங்கலத்து ஊரும் அரையர்களும் இளமாடமும் எங்களூர்
நாயனார் புற்புவன முடையருக்கு நாங்கள்
நீர்வார்த்து குடுத்த நிலமாவது கீழ்பாற்கெல்லை தண்ணீர் கிணற்று இட்டெரிக்கு
தென்னிட்டேரிக்கு மேற்கு தென்பார்க்கெல்லை பூலுவன் சோழன் மனைக்கு வடக்கு மேல்பாற்
கெல்லை குடுமி சிறுவன் தரைக்கு கிழக்கு வடபார்க்கில்லை கழபகன் தோட்டத்துக்கு தெற்கு இன்நான் கெல்லைக்கு
உட்பட்ட நிலமும் கிணறும் நீர்வார்த்து
கொடுத்தோம் வேட்டமங்கலத்தில் புற்புவன முடையருக்கு வேட்டமங்கலத்து ஊரோம் '(கிபி கரூர் வேட்டமங்கலம் ) '(SITI vol-2 No-736; வேட்டமங்கலம்
கல்வெட்டுகள், கிபி 1271)
பூலுவன் =பூலுவ
வேட்டுவ குலத்தை குறிக்கும் .
சோழன் =பூலுவ
வேட்டுவ குலத்தை சேர்ந்த ஒருவனின் இயற்பெயர் அல்லது சிறப்பு பெயர்.
குடுமி =குடுமி
வேட்டுவ குலத்தை குறிக்கும்.
சிறுவன் =குடுமி
வேட்டுவ குலத்தை சேர்ந்த ஒருவனின் இயற்பெயர் அல்லது சிறப்பு பெயர்.
வேட்டமங்கலம்
=வேட்டு மங்கலம்
அரையர்களும்
=வேட்டுவ குலத்தை சேர்ந்த ஆள்பவர்களை குறிக்கும் .
கிழங்கு நாட்டு வேட்டமங்கலம் ஊரில் கரடி வேட்டுவ குலத்தவர்கள் ,பூலுவ வேட்டுவ குலத்தவர்கள் மற்றும் குடுமி
வேட்டுவ குலத்தவர்கள் வாழ்ந்து வந்ததை வேட்ட மங்கலம் கல்வெட்டுகள் கூறுகிறது
.இவர்களை அரையர்கள்(வேளிர்) என்று
அழைக்கப் பட்டு உள்ளனர் .
[வேட்டமங்கலத்து
ஊரும் அரையர்களும் =வேட்டமங்கல ஊரை ஆள்பவர்களை குறிக்கும்.
துடியலூர் ஊரும்
ஊராளிகளும் =துடியலூர் ஊரை ஆள்பவர்களை குறிக்கும் .
துடியலூர் ஊரும்
ஊரார் =துடியலூர் ஊரின் குடிமக்களை குறிக்கும் .
தாரமங்கல ஊரும்
முதலிகளும் =தாரமங்கல ஊரின் அதிகாரிகளை குறிக்கும் .
“பேரூர் ஊரும்
நகரத்தோம்" (SII Vol-5 No-244)
பேரூர் ஊரும்
நகரத்தார் =பேரூர் ஊரின் வணிக குடிகளை குறிக்கும் .]
'கீரனுர்
குடுமி வேட்டுவரில் செம்பராய கவுண்டன் 'என்பவரை பற்றி
முத்தூர் பட்டயம் கூறுகிறது.
பொங்கலூர்
கீரனூரில் குடுமி வேட்டுவ குலத்தவர்கள் வாழ்ந்ததை இப்பட்டயம் உறுதி படுத்துகிறது .
'கிழக்கு
நிலம் ஒரு மாவும் வேட்டுக் களத்து வடக்கு அழகிய சோழப் பல்லவரையன் நிலத்துக்கு '(பழனி கீரனூர் வாகீஸ்வரர் கோவில் கிபி 12, SII VOL-5, NO-281)
கீரனூரில் நில
எல்லைகள் பற்றி கூறப் பட்டுள்ளது .இதில் கீரனூரில் வேட்டு களம் என்ற பெயரில் நில
பகுதி இருந்தது .
வேட்டு =வேட்டுவ
குடி பெயரை சுட்டும் ;களம்=நில
பகுதியின் பெயர் .
பொங்கலூர்
கீரனூரில் குடுமி வேட்டுவ குலத்தவர்கள் வாழ்ந்ததை
இக்கல்வெட்டும் உறுதி
படுத்துகிறது.
கொங்கு நாட்டில்
பல இடங்களை வேட்டுக்காடு ,வேட்டுக் காட்டு வலசு,வேட்டுவன்
காடு ,வேட்டுவ பாளையம்
என்று அழைக்கப் படுகிறது .
குடுமி வேட்டுவ
குலத்தவர்களை குடுமியார் ,குடுமி
குலம் ,குடுமி வேட்டுவன் ,குடுமி
வேட்டுவர் ,வேட்டுவன் ,வேட்டுவர் ,குடும குலம் என்று அழைக்கப்படுகிறது .
குடுமி
வேட்டுவர் :
இங்கு குடுமி
என்ற சொல் வேட்டுவ குடியில் ஒரு உட்குழு பெயரை குறிக்கும் .
இங்கு வேட்டுவர்
என்ற சொல் வேட்டுவ குடியை குறிக்கும் .
இருக்கு வேள்
குலத்தவர்கள் இன்று குடுமி வேட்டுவ குலத்தவர்களாக வாழ்ந்து வருகிறார்கள் .
கோனாட்டுக்
கொடிநகரங் கொடும்பாளூர் அந்நகரத்தினில்
இருக்குவேளிர்குலத் தரசளித்து மன்னியபொன்னம்பலத்து மணிமுகட்டில் பாக்கொங்கில்
பன்னுதுலைப் பசும்பொன்னால் பயில்பிழம்பாம் மிசையணிந்த பொன்னெடுந்தோள் ஆதித்தன் புகழ்மரபிற் குடிமுதலோர்(பெரிய
புராணம் ,இடங்கழி நாயனார் ,பாடல்
எண் 2,3)
கொடும்பாளூர் கோனாட்டின் தலைநகராகும். இது
புதுக்கோட்டைக்கும் மணப்பாறைக்கும் இடையில் உள்ளது.
தலைவன் (இருக்குவேள்) பெயரில் வேட்டுவ குடியில் உட்குழு பெயர்கள்
அழைக்கப்பட்டனர்.இதனால் இடங்கழி நாயனாரை இருக்குவேளிர் குலம் என்று அழைக்கப் பட்டு
உள்ளார்.
ஓமலூர் ,தாரமங்கலம்
பகுதிகளை' குன்றத்தூர் துர்க்கம் என்று கல்வெட்டுகளில் அழைக்கப்பட்டது .(SII
VOL-7 No-7).
‘பிரசோற்பதி
வருஷம் ஆவணி மாதம் 5 தேதி குண்ணத்தார் துர்க்கத்திலிருக்கும்
குண்ணாம் வேட்டுவரில் பெரிய கவுண்டன் மகன் ஆவுடைக் கவுண்டன் துர்கம் சண்டையில்
பட்டத்துக்கு அவன் மகன் வாமலை கவுண்டன் உபையம்'(நாமக்கல்
திருச்செங்கோடு நடுகல் கிபி 1511).
குன்றத்தூர்
துர்க்கம் பகுதிகளை அரசு ஆட்சி செய்த
குன்னாடி வேட்டுவனுக்கும்,மைசூர் உடையாருக்கும் குன்றத்தூர்
துர்கத்தில் (கோட்டை ) நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்த ஆவுடை கவுண்டனுக்கு இவனது
மகன் நடுகல் எடுத்தான்.
துர்கம் =கோட்டை
குன்ன வேட்டுவ
குலத்தை சேர்ந்தவர்களை குன்ன வேடர் என்றழைக்க பட்டனர் .இவர்கள் தாரமங்கலம் ,ஓமலூர்
பகுதிகளை கிபி 1500 வரை ஆண்டார்கள் .(
மெக்கென்ச்சி ஆவணம் ,D.2955).
நில பகுதியின்
அடிப்படையில் குண்ணம் வேட்டுவர் குல பெயர்
உருவானது .
"வேடர்கள்
பாளையக்காரர்களாய் இராஜ்யம் பண்ணி கொண்டு
வந்தார்கள் .அந்த வேடர் ராச்சியம் பண்ணனது சேர சோழ பாண்டியருக்கு பிற்காலம் வேடர்
பாளையப்பட்டு இருந்தது வேடர் நாளையில்
பொடிராசு கெட்டியன் நாளது அசலு பேரு பட்டது -சக்கர நுணுக்கம் -1- சரம்பள்ளியில் தென்மனை காவேரிபுரம் அந்தி ஊரு இந்த இடங்களில் அவாள் கட்டி விச்ச கோட்டைகள்
இருக்கின்றன .இன்னும் இது முதலான இடங்களில் தேவஸ்தானம் முதலானது பிரசித்தம் பண்ணி
விச்சி இருக்கிறார்கள் ..................குண்ண வேடன் எண்ணப்பட்டவன் அமராவதி பட்டணம் என்று தன்னுடைய பட்டணத்திற்கு
பேர் வெச்சிக் கொண்டு இராச்சியம்பாரம்
பண்ணி கொண்டு இருந்தார் அந்த அமராவதி பட்டணத்தில் குண்ண வேடன் வம்ஸத்தில்
சிறிது பேர் ஆண்டிருக்கிறார்கள் "(அந்தியூர் தாலுக்கா
சரம்பள்ளி கணக்கு பிள்ளை கைபீது, மெக்கென்ச்சி ஆவணம்,
D.2955).
'அந்த
கிராமத்து உள்க்கோட்டை வேடர்கள் கட்டி விச்சுது வெளிக்கொட்டை மைசூரு கருத்தாக்கள்
கட்டி விச்சுது'(காவேரிபுரம் மிட்டா மணியக்காரர் கைபீது டி 3313)
குன்ன வேட்டுவ
குலத்தை சேர்ந்தவர்களை குன்ன வேடர் என்றழைக்க பட்டனர் .இவர்கள் குன்றத்தூர்
துர்கம் பகுதியை தலைமை இடமாக வைத்து தாரமங்கலம் ,ஓமலூர் பகுதிகளை கிபி 1511 வரை ஆண்டார்கள் . இவர்கள்
அந்திவூர்,காவேரிபுரம் ,சரம்பள்ளி ,தென்மலை (சங்ககிரி கோட்டை ) போன்ற
பகுதிகளில் கோட்டை கட்டி ஆட்சி செய்தார்கள் .
.
'கெட்டி என்ற
பேர் பெத்து வெள்ளாளன் சீயாத்தின படியினால் கெட்டி முதலியார் என்று பேர் வந்து '. (மெக்கென்ச்சி ஆவணம், D.2955).
தாரமங்கலம்
பகுதியை ஆட்சி சேந்த குன்னாடி வேட்டுவனுக்கு முதுகில் சீய் கட்டி வந்தது .இந்த
சீய் கட்டியில் இருந்து சீயை உறிஞ்சி குணப்படுத்திய வெள்ளாளனுக்கு தாரமங்கலம்
பகுதியை உரிமை ஆக்கினான் .இதனால் கெட்டி (கட்டி ) என்ற பேர் வந்தது .வேட்டுவ
மன்னனின் அரசியல் அதிகாரியாக இருந்ததால் முதலியார் என்றழைக்கப்பட்டான் .
சங்ககிரி
பகுதிகளை குன்றத்தூர் துர்கம்
என்றழைக்கப்பட்டது .(தாரமங்கலம் கல்வெட்டு,SII
Vol-7,No-27,28 )
குன்றத்தூர் துர்கம்
பகுதியை ஆண்ட குன்னாடி வேட்டுவ குடியினர் மைசூர் உடையர்களை எதிர்த்து கலகம் செய்து
இருக்கிறார்கள் .இதனால் இப்பகுதிகளை மைசூர் உடையார்கள் கெட்டி முதலியர்களிடம்
கொடுத்து இருக்கிறார்கள் .கெட்டி முதலியர் பூவாணிய நாடு மற்றும் பூந்துறை நாடு
போன்ற நாடுகளில் வரி வசூல் செய்து மைசூர்
உடையார்கள் மற்றும் மதுரை நாயக்க மன்னர்களுக்கு கொடுத்து வந்தார்கள் . வெள்ளாள
குடியை சேர்ந்த கெட்டி முதலியார்கள்
காணியாட்சியை வைத்து இருந்தனர் .இவர்கள் மைசூர்
உடையார்கள் மற்றும் மதுரை நாயக்க மன்னர்களின்
அதிகாரிகளாக இருந்தனர் .
இது போல
குடுமியான் மலை பெயரை அடிப்படையாக வைத்து குடுமி வேட்டுவ குலம் உருவானது . இன்று
குடுமி வேட்டுவ குலத்தினர் சென்னிமலை அருகே உள்ள 'பிராட்டி அம்மன் ' தெய்வத்தை குல
தெய்வமாக வணங்கி வருகிறார்கள் .
கொடும்பாளூர்
வேள் குடுமி வேட்டுவ குல தலைவன் ஆவான் .
இருக்கு வேளின் வம்சாவளியினர் இன்று குடுமி வேட்டுவ குலத்தவர்களாக வாழ்ந்து
வருகிறார்கள் .
'விடேல் விடுகு இளங்கோ அதியரையனாயி............விக்கிரம பூதி
மகள் ...' பற்றி
கல்வெட்டு கூறுகிறது. (SII VOL-7 No-924)
இளங்கோவேள் கல்வெட்டில் இளங்கோ அதிஅரையர் என்று கூறப்பட்டு உள்ளது .
'ஸ்வஸ்திஸ்ரீ நன்மங்கலம் சிறக்க ஸ்ரீ வீர ராஜேந்திர தேவருக்கு
ஆண்டு இருபத்தொன்பதாவதின் எதிர் ஒன்பதாவது வடகரை நாட்டில் பட்டிலிருக்கும் ஊராளிகளில்
கொடும்பூர் வேட்டுவரில் பெரிய தேவன் மகன் பெரிய பிள்ளையான பெரிய தேவன் நாயனார்
வாகிசுரமுடையருக்கு சந்தியா தீபம் மூன்று
விளக்கெரிப்பதாக கோவில் செய்கிற பிராமணர் கைக்கொண்ட அச்சு ஸ்ரீயக்கி பழஞ்சலாகை
ஒன்றும் குடுத்தோம் இது குடங்கொடு கோவில்
புகுவான் யாதொருவர் மூன்று விளக்கு
எரிப்போம் ஆக பன்மகேஸ்வர இரட்சை '(பட்டலூர் வாகீஸ்வரர்
கோவில் கிபி 1245;ஈரோடு மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி -1 தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 2007 தொடர் எண் 97/2005)
'ஸ்வஸ்திஸ்ரீ நன்மங்கலம் சிறக்க ஸ்ரீ வீர ராஜேந்திர தேவருக்கு
ஆண்டு இருபத்தொன்பதாவதின் எதிர் அஞ்சாவது
மார்கழி மாதம் முதலாக வடகரை நாட்டில் பட்டிலிருக்கும் ஊராளிகளில் கொடும்பூர்
வேட்டுவரில் பிள்ளையென் வாகிசுரமுடையருக்கு சந்திராதித்ய பலமும் மூன்று விளக்கு
ஏற்றுவோமாகவும் குடமும் குச்சியும் கொண்டு கோவில் புகுவான் யாதொருவர் திரு விளக்கு வச்சு ........பெற்று
வருவார்களாகவும் இவ்விளக்கு ...தப்புகில் மண்ணும் கண்ணுமிழக்க கடவர்களாகவும்
வாகீஸ்வரமுடையார் இரட்சை ''(பட்டலூர் வாகீஸ்வரர் கோவில் கிபி 1241;ஈரோடு மாவட்ட
கல்வெட்டுகள் தொகுதி -1 தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 2007 தொடர் எண் 99/2005)
'கொடும்பை நெடுங்குளம் கோட்டகம்'(சிலம்பு
காடு காண் காதை)
கொடும்பாளூரை கொடும்பை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது .
கல்வெட்டுகளில்' கொடும்பை' யை கொடும்பூர் என்று கூறப்பட்டு உள்ளது .
கொடும்பாளூர் பகுதியில் இருந்து
கொங்கு நாட்டு குடி பெயர்ந்த வேட்டுவ குலத்தவர்களை கொடும்பூர் வேட்டுவர்
என்று கல்வெட்டுகளில் அழைக்கப்பட்டு உள்ளனர் .
‘காட்டு நாடான செயசிங்க
குலகால வளநாட்டு காட்டு நாடு' (PSI -483)
காட்டு வேட்டுவ குலத்தவர்கள் காட்டு நாட்டை சேர்ந்தவர்கள் .
'கொற்றங்குடி குளத்தால் நீர் பாயும் நடுவில் வேட்டுவன் ஆன
தனியானைவிட்ட நல்லூர். .. இப்படி சோழிய இந்நடுவில் வேட்டுவன் ஆன தனியானைவிட்ட
நல்லூர் ' (திருமெய்யம் வளவர் மாணிக்கம்; PSI no-492)
'காட்டு நாடான பாண்டிகுலாசனி வளநாட்டு செய்ய சிங்க வளநாட்டு
சுண்டை மலைநாட்டு சோற்று பாலை’ (PSI-972)
சுண்டை வேட்டுவ குலத்தினர் பெயரில் ஒரு நாடு உருவாக்கபட்டு இருக்கிறது .
புதுக்கோட்டை பகுதியில் 'பாலையூர் நாடு' இருந்தது .(PSI-850)
பால வேட்டுவ குலத்தவர்கள் பாலையூர் நாட்டை சேர்ந்தவர்கள் .
‘வடபாற்கெல்லை பால வேட்டார் வாய்க்காலுக்கு” (SII
Vol-13, No-31)
பால வேட்டார் என்ற சொல் பால வேட்டுவ
குலத்தை குறிக்கலாம் .
"புத நாடு” (கிபி 13; PSI No-452)
புத என்ற சொல் பாத ,பதர்
,பதரை என்று மருவும்
பாத வேட்டுவ குலத்தவர்கள் புத நாட்டை
சேர்ந்தவர்கள்
"கொங்கு நாட்டு அரசர்கள் சோழ நாட்டில் இருந்தும், பாண்டிய நாட்டில் இருந்தும் கேரளத்திற்கு எதிராக தங்களுக்கு உதவுவதற்கு
வேட்டுவர்களை அழைத்து வந்தனர் என வழக்கு வரலாறு கூறுகிறது .ஒன்பதாம் நூற்றாண்டின்
பிற்பகுதியில் சோழ மன்னர் ஆதித்திய வர்மன் கொங்கு நாட்டை வெற்றி கொள்ள உதவியவர்கள்
இவ்வேட்டுவர்களே என வழக்கு வரலாறு கூறுகிறது" (தென்இந்திய குடிகளும்
குலங்களும்-தொகுதி 7, வேட்டுவர் (தமிழ்)).
வேட்டுவ குடியினர் சோழ மற்றும் பாண்டிய நாடுகளில் இருந்து கொங்கு நாட்டு
வந்தனர் என்பதை தமிழ் வேட்டுவர்
குடிபெயர்ச்சி வரலாறு கூறுகிறது .
ஆதாரம் 3:
"தென் குடுமர் பூலுவர் மரபை சேர்ந்தவர்களாக குறிக்கப்
பெறுகின்றனர்" (கோயமுத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி -2, 2007 பக்கம் -i)
பாண்டியரின் ஆட்சியை சேர்ந்த பொங்கலூர் கல்வெட்டு 'பூலுவ குடுமரில் பெரிய பிளின்னான
கண்டிமுடையார் ' என்பவரை பற்றி கூறுகிறது . வேட்டுவர் சாதியை
'பூலுவர்' என்றும் 'காவலன் ' என்றும் 'மாவலியர்'
என்றும் 'வில்வேடுவர்' என்றும்
போன்ற சிறப்பு பெயர்களில் அழைக்க பட்டனர்.
'பெரும்பழனில்
இருக்கும் பூலுவன் மேற்செறி வெள்ளைகளில் இராசன் நிலையுடையான் ஆன தொண்டைமான் '(கிபி 13; SITI Vol-1 No-338)
பூலுவன்
-வேட்டுவ குலத்தவரின் சிறப்பு பெயர்
வெள்ளைகளில் -வெள்ளை வேட்டுவ குலத்தை குறிக்கும்
.
'துடியலூரில்
ஊரும் ஊராளிகளும் ...மேற்படியூரில் பூலுவன் .ண்டைகளில் வில்வராயன் எழுத்து '(கோவை வட மதுரை கல்வெட்டு; கிபி 13)
பூலுவன்
-வேட்டுவ குலத்தவரின் சிறப்பு பெயர்
.ண்டைகளில்
-சுண்டை வேட்டுவ குலத்தை குறிக்கும்.
வேட்டுவர் என்ற
சொல் ஒரு குடிப்பெயர் சொல் ஆகும் .
பூலுவர் ,காவலன் ,மாவலியர் ,வில்வேடுவர் அல்லது வேட்டைக்காரன் அல்லது வேடர் போன்ற பெயர்கள் வேட்டுவ குடியினரின் சிறப்பு
பெயர் சொல் ஆகும் .
வேட்டுவ குடியினரை வேட சாதி ,சத்திரிய சாதி ,முத்துராசாக்கள் (பழமையான ராஜாக்கள் )சாதி போன்ற சிறப்பு
பெயர்களால் அழைக்கப்பட்டதை மெக்கென்ச்சி கைபீதுகள் கூறுகிறது (டி .2967,3074,3039,3037)
ஆதாரம் 4:
வெட்சிக்
கானத்து வேட்டுவர் ஆட்டக்
கட்சி காணாக்
கடமா நல்லேறு
கடறுமணி கிளரச்
சிதறுபொன் மிளிரக்
கடிய கதழும்
நெடுவரைப் படப்பை
வென்றி நிலை இய விழுப்புகழ் ஒன்றி
இருபால் பெயரிய
உருகெழு மூதூர்க்
கோடிபல அடுக்கிய
பொருள்நுமக்கு உதவிய
நீடுநிலை
அரையத்துக் கேடும் கேளினி
நுந்தை தாயம்
நிறைவுற எய்திய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்
நும்போல்
அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த
செய்யுள் கழாஅத் தலையை
இகழ்ந்ததன் பயனே; இயல்தேர் அண்ணல்!
எவ்வி
தொல்குடிப் படீஇயர், மற்றுஇவர்
கைவண் பாரி மகளிர் என்றஎன்
தேற்றாப்
புன்சொல் நோற்றிசிற் பெரும!
விடுத்தனென்; வெலீஇயர்நின் வேலே; அடுக்கத்து
அரும்புஅற
மலர்ந்த கருங்கால் வேங்கை
மாத்தகட்டு
ஒள்வீ தாய துறுகல்
இரும்புலி வரிப்புறம் கடுக்கும்
பெருங்கல்
வைப்பின் நாடுகிழ வோயே! -புறம் 202
அருஞ்சொற்பொருள்:
1.வெட்சி =
ஒருசெடி; கானம் = முல்லை காடு. 2. கட்சி
= புகலிடம்; கடமா = விரைந்தோடும் மான்கள். 3. கடறு = காடு; கிளர்தல் = எழுதல். 4. கடி = மிகுதி; கதழ்தல் = விரைதல்; படப்பை = தோட்டம், பயிர் நிலம், நாடு. உரு = அச்சம். 9. தாயம் = உரிமை. 10. ஒலியல் = தழைக்கை. 14. மா = கறுப்பு. 17. அடுக்கம் = மலைச்சாரல். 19. மா = கரிய; தகடு = பூவின் புறவிதழ்; வீ = முல்லை மலர்; துறுகல் = பாறை. 20. கடுக்கும் = போலும். 21 கல் = மலை.22 வேட்டுவர் =வேட்டுவ குடியினர்.
புலிகடி மாஅல் = புலியை கொன்ற இருங்கோவேள்
உரை: வெட்சிச் செடிகள் நிறைந்த காட்டில் வேட்டுவ குடியினரால் விரட்டப்பட்ட மான்கள் புகலிடம் இல்லாமல், காட்டில் மணியோசையை எழுப்பி, பொன்னின் தூள்கள் சிதறி மிளிருமாறு, வெகு விரைவாக
ஓடும் நெடிய மலைப் பக்கத்தில் உள்ள நாட்டில் வெற்றி நிலைபெற்ற, சிறந்த புகழ் பொருந்திய சிற்றரையம், பேரரையம் என்று
அஞ்சத்தக்க இரண்டு பழைய ஊர்கள் இருந்தன. கோடிக்கணக்கில் பொருள் கொடுத்து உன்
முன்னோர்களுக்கு உதவி, உயர்ந்த நிலையில் இருந்த அந்த அரையம்
ஏன் அழிந்தது என்று கூறுகிறேன்; கேட்பாயாக. உன்
தந்தையாரிடமிருந்து உரிமையாகப் பெருமளவில் செல்வங்களைப் பெற்று, தழைத்த மாலையுடன் உள்ள புலிகடிமால்! உன்னைப்போன்ற அறிவுடைய உன் முன்னோருள்
ஒருவன், புகழ் மிக்க செய்யுள் இயற்றும் கழாத்தலையாரை
இகழ்ந்ததின் விளைவுதான் அரையத்தின் அழிவு. நன்கு செய்யப்பட்ட தேர்களை உடையவனே!
”இவர்கள் எவ்வி என்னும் பழங்குடியைச் சார்ந்தவர்கள்; வள்ளன்மை
மிகுந்த பாரியின் மகளிர்” என்ற என் தெளிவில்லாத சொற்களைப் பொறுத்துக்கொள்வாயாக!
மலைச்சாரலில், அரும்புகள் அனைத்தும் மலர்ந்த, கரிய அடிமரத்தையுடைய
வேங்கையின் கரிய புறவிதழ்களையுடைய ஒளிபொருந்திய பூக்கள் பரவிக் கிடக்கும் பாறை
கரிய வரிகளையுடைய புலியின் முதுகைப்போல் உள்ளது. அத்தகைய பெரிய மலைகளுள்ள
இடங்களில் ஊர்களையுடைய நாட்டுக்கு உரியவனே! நான் செல்கிறேன். உன் வேல் வெற்றி
பெறட்டும்!
சிறப்பு குறிப்பு : இருங்கோ வேள் ,இருக்கு வேள் ஒரு பொருட் பெயர்கள் ஆகும் . இருங்கோ வேள் குடுமி
வேட்டுவ குலத்தை சேர்ந்தவனாக கல்வெட்டுகள் கூறுகிறது . இருங்கோ வேள் ஊரில் வேட்டுவ
குடியினர் வாழ்ந்தார்கள் என்பதையும் ,இருங்கோ வேள் வேட்டுவ குடி தலைவன் என்பதையும் ,இருங்கோ வேளின் படை வீரர்கள் வேட்டுவ குடியினர் என்பதையும் இப்பாடல் மூலம்
அறியலாம் .இருங்கோ வேளும் ,வேள் எவ்வியும் ஒரே குடியை
(வேட்டுவ குடி ) சேர்ந்தவர்கள் என்பதையும் இப்பாடல் கூறுகிறது ..
புலிகடிமாஅல் = புலியை கொன்ற இருங்கோவேள்
வேட்டுவ
குடியில் உட்குழு தலைவர்களின் போர் வீரர்கள் வேட்டுவ குடியை சேர்ந்தவர்கள்
ஆவார்கள் .
கோனாட்டில்
வேட்டுவ குடியினர் வாழ்ந்தார்கள் என்பதையும் ,கோநாட்டை வேட்டுவ குடியினர் ஆண்டார்கள் என்பதையும் இப்பாடல்
உறுதிப்படுத்தும் .
ஆதாரம் 5:
கேரளாண்டரான
நிஷதராயர் மகளார் திருகொடுங்குன்றமுடையானான நிஷதராஜர் தேவியார்
கண்ணுடையப் பெருமாளான பிராட்டி ஆழ்வார்
-(ஆண்டு 39 ; PSI -168) .
கேரளாண்டரான
நிஷதராயர் -சோழ வேட்டுவ ராஜா
திருகொடுங்குன்றமுடையானான
நிஷதராஜர் -குடுமி வேட்டுவ ராஜா
செம்பிய வேட்டுவர் கோ நாட்டை ஆண்டதால்
"செம்பியன் கோனாடு " என்று கல்வெட்டுகளில் அழைக்கப் பட்டனர் .(PSI No -229; கிபி 13).
கோநாட்டை செம்பியன் கோனாடு ,குடுமி கோனாடு என்றழைக்கப்பட்டது .(PSI No-229,906)
ஆதாரம் 6:
இருக்குவேளிர்கள் போர்த்தொழில்
செய்தவர்கள் ஆவார்கள் .
இருக்கு வேளிர்களை கல்வெட்டுகளில்
“இருக்குவேள்”,
“இருக்கு வேளார்”, “இருக்கு
வேளான்” (PSI -9, 22, 26)
‘மஹிமாலைய
இருக்குவேளார்’ (1904:349)
‘பிராந்தகன் இருங்கோளராகிய சிறிய
வேளர் ‘(SII Vol-13, No120)
'கொடும்பாளூர்
வேளிர் இருங்கோளன்’ (SII Vol -3, No-119,120)
'சேனா பதியம்
செய்கிற பிராந்தகன் சிறிய வேளான் ஆன திருக் கற்றளி பிச்சனேன்'(1908:291).
‘ஈழத்து பட்ட
கொடும்பாளூர் வேளான் சிறிய வேளான் மகன் வேளான் சுந்தர சோழன்’ (SII Vol-5,
No 980; 1896:116).
“கொடும்பாளூர்
பிராந்தகன் இருங்கோளன் ஆன சிறிய வேளார் "(SII Vol-13 part-3, No-119)
'கொடும்பாளூர்
ராஜேந்திரசோழ இருக்குவேளார் '(SII Vol-4, No-544; கிபி
1059)
‘பிராந்தகன்
குஞ்சிரமல்லனான வீரசோழ இளங்கோ வேளானேன்’ (PSI No-255)
"உறத்தூர்
கூற்றத்து கொடும்பாளூர் உடையார் சேனாதிபதிகள் மதுராந்தக இளங்கோவேளான்"(கிபி
10; PSI No -191)
போன்ற பெயர்களில்
கூறப்பட்டு உள்ளனர் .
இருக்குவேள்,இருங்கோளன்,
இருங்கோவேள் என்பன ஒரு பொருட் பெயர்களாகும் .
இக்கல்வெட்டுகள்
வேள் என்ற சொல்லில் இருந்து வேளிர் ,வேளர் ,வேளார் ,வேளான்
போன்ற சொற்கள் பிறந்ததை உறுதி படுத்துகிறது .
நுந்தை தாயம்
நிறைவு உற எய்திய - புறம் 202/9
இருங்கோவேள்
தந்தைக்கு பின் வேள் என்னும் பொறுப்பை பெற்றவன் .ஆகவே வேள் என்னும் சொல் ஒரு பதவியை குறிக்கும் சொல் ஆகும் .
'ஸ்ரீ கொற்றம்
பூதி நிரை பின் போடிய் பட்ட இடம்'
(திருச்சி
வடசேரி ஊர் நடுகல் கிபி 10, தமிழ்நாடு கல்வெட்டுகள் 2004 தொடர் எண் 33/1990)
ஆநிரை மீட்கும்
போரில் இறந்த கொடும்பாளூர் வேளிருக்கு நடுகல் எடுக்க பட்டு உள்ளது .
'இராசராச ஜெயங்கொண்ட சோழனான சேனாபதி இருக்கு வேள்'(SII
Vol-8 No 754; அதி ராஜேந்திரசோழன்).
இவர் அதி ராஜேந்திரசோழனின் படை தளபதியாக இருந்தவர் .
'ஈழத்து பட்ட கொம்பாளூர் வேளான் சிறிய வேளான் மகன் வேளான்
சுந்தரசோழன் '(SII Vol- 5 No 960)
"சேனா பதியம் செய்கிற பிராந்தகன் சிறிய வேளான்
திருக்கற்றளி பிச்சனேன்” (குடந்தை திரு களித்திட்டை கல்வெட்டு; கிபி 964)
இவர் சுந்தரசோழ அரசரின் படை தளபதியாக
இருந்தவன் .
''கொம்பாளூர் உடையார் சேனாபதிகள் மதுராந்தக இளங்கோ வேள் '(PSI
N0-191)
'கொடும்பாளூர் பிராந்தக இருங்கோளன் ஆகிய சிறிய வேளார் '(SII
Vol-3 No-119; கிபி 10)
'இராஜராஜன் செயங்கொண்ட சோழன் ஆன சேனாபதி இருக்கு வேள்'(அதிராஜேந்திர சோழன்; SII Vol-8 No-754)
இக்கல்வெட்டுகள் இருக்கு வேளிர்கள் போர் தொழில் செய்தவர்கள் என்பதை
உறுதிப்படுத்தும் .
வேட்டுவ குடியினரும் போர் தொழில் செய்ததை கல்வெட்டுகளும் ,சங்க மற்றும் காப்பிய கால இலக்கியங்கள்
உறுதிப்படுத்தும் .
ஆதாரம் 7:
Chiefdoms and the
structure of power
“The level of power
represented by the velir seems to be the most archaic and lineage conscious .A
hill chief called Irunko-vel one of the traditional five vel is mentioned in a
couple of poems as vedar Koman ,the chief of vedar ,to have belonged to a long
line of 49 generations of chiefs(PN 202,201) .The poems show that the velir
chieftains held sway over the kurinchi and Mullai traits.....sometimes the hill
chiefs are called vettuvar . This would suggest that the term vel derived from
vet”
(Cultural History
of kerala vol-1(edited by) Rajan Gurukkal and Raghava Varier,published by the
goverment of kerala in 1997,page 199-200)
இந்நூலின் ஆசிரியர் இருங்கோவேள் வேட்டுவ குல தலைவனாக கூறியுள்ளார் .
மறுப்புகள் :
சமரபிரானை 'யது வம்ஸ
கேதோ ' என்று கொடும்பூர் கல்வெட்டு கூறுகிறது .
சமர பிரான் ஒருவனின் முன்னோர் ஒருவனின் இயற்பெயர் யாதவன் .இவன் வழியில் சமர
பிரான் வந்ததால் 'யது வம்ஸ கேதோ ' என்று கூறப்பட்டு உள்ளான்.
விக்கிரம கேசரியின் இயற்பெயர்களுள்
ஓன்று 'யாதவன்' .இதனால்
விக்கிரம கேசரியை 'யாதவ ' என்று
கூறப்பட்டு உள்ளான் . இவர்களை ஆயர் குடியினர் என்று கூறுவது தவறான கருத்தாகும்
கிபி 1530 களில் விஸ்வநாத நாயக்கன் வேட
நாயக்கர் சாதியினரை ஆந்திர பகுதியில் இருந்து அழைத்து வந்தான் .இவர்கள் ஆய்க்குடி,பழனி பகுதிகளில் பாளையக்காரர்களாக
இருந்தனர் .(டி.2851 ,3118 ,3256) . இந்த
பாளையக்காரர்களில் ஒருவர் வம்சாவளியை கூறும்போது 'யெது குல வமுச வரலாற் விபரம் 'என்று
கூறியுள்ளார் .இவர்களின் முன்னோர் ஒருவனின் இயற்பெயர் யாதவன் .இதனால் யெது குலம்
என்று கூறி உள்ளார் .இவர்கள் இன்று பழனி ,தேனி பகுதியில் வேட
நாயக்கர் சாதியினராக தெலுங்கு மொழி பேசுவர்களாக வாழ்ந்து வருகிறார்கள் .இவர்களை
ஆயர் குடியினர் என்று கூறுவது தவறான கருத்தாகும்.
'தட்டாரில் பறையன் சோண்டனறன் சேனாதிபதி தட்டானும், (கொங்கு நாட்டு கல்வெட்டுகள் கோயம்புத்தூர் மாவட்டம் எண் -73 கிபி 13 அன்னுர் கல்வெட்டு முதற் பாதிப்பு:டிசம்பர்
2003, மகாகவி பாரதியார் நூலகம்)
தட்டாரில் -தட்டார் குடியை குறிக்கும் .
பறையன் சோண்டனறன் -தட்டார் குடியை சேர்ந்த ஒருவரின் இயர்ப் பெயரை குறிக்கும் .
'கள்வன் பெறுவதும், தாமன் கள்வன், மலையமன் நக்கன், காடன், வேம்பன்
‘போன்ற பெயர்களை இடையர்கள் தங்களது இயற்பெயர்களாக வைத்து கொண்டனர்.
(SII Vol-2,No-95) .
இங்கு இயற்பெயர் எல்லாம் குடி பெயராக கூறுவது தவறான கருத்தாகும்.
மாயோன் மேய மன் பெருஞ் சிறப்பிற்
தாவா விழு புகழ் பூவை நிலையும் - பொருள். புறத்:5/10
அரசர்களை புகழ்ந்து பாடும் போது அவர்களை மாயோனாகிய திருமாலுடன் ஒப்பிட்டு
வாழ்த்துவது வழக்கம் ,இவ்வகை
வாழ்த்தினை தொல்காப்பியம் பூவை நிலை எனக் குறிப்பிடும் . வேட்டுவ குடியை சேர்ந்த
வேளிர்களின் குடியிருப்புகள் முல்லை நில குறும்புகளில் இருந்தது .இதனால் வேட்டுவ
குடியை சேர்ந்த வேளிர்களை முல்லை நில தலைவனான மயோனோடு தொடர்பு படுத்தி கூறப்பட்டு
உள்ளனர்.
மாயோன் மேய காடு உறை உலகமும் - பொருள். அகத்:5/1
மாயோன்(திருமால் ) முல்லை நிலத்தில் புணர்பவனாக
.கூறப்பட்டு உள்ளார் .
புலவர் நச்சினார்க்கினியர் அவர்கள், தொல்காப்பியப் பாயிரவுரையிலும் மற்றும் தொல்காப்பிய
அகத்திணையியல் 32 ஆம் நூற்பாவுரையிலும் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறார்கள்
”தேவரெல்லாங்கூடி ‘யாம் சேரவிருத்தலின் மேருத்தாழ்ந்து தென்றிசை
உயர்ந்தது; இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற்குரியர் என்று
அவரை வேண்டிக்கொள்ள, அவரும் தென்றிசைக்கட்
போதுகின்றவர்…..துவராபதிப்போந்து, நிலங்கடந்த நெடுமுடியண்ணல்
வழிக்கண் அரசர் பதினெண்மரையும், பதினெண்கோடி (குடி) வேளிர்
உள்ளிட்டாரையும், அருவாளரையுங் கொண்டுபோந்து காடுகெடுத்து
நாடாக்கி பொதியிலின்கணிருந்து”
“வேந்துவினையியற்கை”
என்ற தொல்காப்பிய சூத்திரத்தின் அவதாரிகையிலும்-“இது, மலையமாதவன்
நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த
வேளிர்க்கும் வேந்தன் தொழில் உரித்தென்கின்றது”
அகத்தியர் வட நாட்டு துவரை பகுதியில் இருந்து நெடுமுடி அண்ணல் (முல்லை நில
தலைவன் ,மாயோன் ) வழிவந்த அரசர் 18 பேர்களும் 18 குடியை சேர்ந்த வேளிர்களையும்
அருவாளர்களையும் தமிழ் மண்ணிற்கு அழைத்து
வந்து காட்டை அளித்து நாட்டை உருவாக்கினார்கள் என்று
பதினெண்குடி வேளிர் =18 வேட்டுவ குல தலைவர்களை குறிக்கும்.
நச்சினார்க்கினியர் புராணக்கதை அல்லது வாய்வழி செய்தியை தழுவி இச்செய்திகளை
கூறியுள்ளார் .
“நீயே-வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச்
செம்புபுனைந் தியற்றிய சேணொடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே”
எனக் கூறியிருக்கும் அடிகள் புறநானூற்றில் (201) காணப்படுகின்றன. இதன்பொருள்:- நீதான், வடதேசத்து முனிவர் ஒருவரது யாகத்திற்றோன்றி, செம்பால்
அழகாகச் செய்யப்பட்ட மிகப்பெரிய கோட்டையுடைய, வெறுப்பில்லாத
பொன்மயமாகிய துவாரகையை ஆண்டு, நாற்பத்தொன்பது
தலைமுறையாகவந்த பல வேட்டுவ குல
தலைவர்களில் சிறந்த வேட்டுவ குடி தலைவர்(வேளிருள் வேளே) .
.தமிழ் வேட்டுவ குல தலைவரை வட நாட்டு துவரையை ஆண்ட கண்ணபிரானொடு
தொடர்பு படுத்தி கபிலர் கூறி உள்ளார்.
வேட்டுவ குடியினர் ஆயர்களில் கால்நடைகளை திருடர்கள் மற்றும் பகைவர்கள்
ஆகியோரிடம் இருந்து வேட்டுவ குலத்தலைவர்கள் பாதுகாத்தார்கள் .இதை கல்வெட்டுகளும்
இலக்கியங்களும் உறுதிப்படுத்துகிறது .இதனால் தமிழ் வேட்டுவ குடி தலைவரை வட நாட்டு
கண்ணனோடு (யாதவன் ) தொடர்பு படுத்தி கூறப்பட்டு உள்ளது .
உலகில் நிலவும் அநீதியை ஒழித்து நீதியை நிலைநாட்டுவதற்காக மாயோனாகிய திருமால்
எடுத்த பத்து திரு வடிவங்களுள் ஒன்றே கிருஷ்ண அவதாரம் எனப்பெறும் கண்ணனின்
தோற்றமாகும் .இக்கண்ணன் (யதுவன்) வட நாட்டிலுள்ள துவாரகையில் யது குலத்தில் தோன்றினான் .இறைவன் ,இறைவி ஆகியோர்களின் திருப் பெயர்களையும்,அவர்கள் குடி கொண்டுள்ள திரு தலங்களின் பெயர்களையும் இன்றைக்கும் மக்கள்
தங்கள் இயற்பெயராக வைத்துக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது .மால் (திருமால்) ,யதுவன் (கண்ண பிரான்),திருக்கொடுங்குன்றமுடையான்
போன்ற திருபெயர்களை தமிழ் வேட்டுவ குடியை சேர்ந்தவர்களும் வைத்து கொண்டார்கள் .
‘ஏற்றார்க்கு இடதார் இல்லை என்பது இன்றறிந்தோம்
சீற்ற திருமால் செருவேற்க மற்றிலாப்
பொன்னிட்டான் சென்னி கொடிப்
பின்னிட்டான் சேரமான்
பொன்னிட்டான் கொற்கையார் வேந்து '
‘அடுகயலை முன்னாளில் ஆடகத் குன்றிட்ட
வடுமறைந்து போயும் மறையா முடுகு சமர்
மாற்றோர் தொழும் திருமால் மாயுதைப்ப
மேல் வழுதி
தோற்றோடிப் போன சுவடு '
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கல்வெட்டுகளில் மாவலி வாணன் மன்னரை ‘திருமால்’ என்றழைக்கப்பட்டனர் .(SII
Vol-4, N0-348:1890:25)
கழுவுள் காமூரை
உடையவன் கழுவுளை 'ஆன்பயம்
வாழ்நர்'என்று கூறப்பட்டனர்.(அகம் 365/11-15;பதிற் 71/13-18)
கொல்லும் போரும் நீங்காத சிறந்த புகழும் விண்ணளாவும் பெரிய குடையும் கொண்ட
பதினான்கு வேளிர்கள் கழுவுளின் காமூரை அழிந்தனர் .(அகம் 135/10-14).
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை எருதுகளையும்,கன்றுகளையும் பசுக்களையும் கவர்ந்து வர
விரும்பி புலால் நாற்றம் வீசும் வில்லுடைய வீரர்களுடன் மோர் கடைய மத்தில் கயிறு
ஆடாத விடியற் காலத்தில் போய் பசுவின் பயனால் வாழும் கழுவுளை தலைவணங்க செய்து
அவனுடைய காமூரை அழைத்தான் .(பதிற் 71/13-18)
கழுவுள் சேர அரசனுக்கு பயந்து புறங்காட்டி ஓடி விட்டான் .( பதிற் 88/7)
பதினான்கு வேளிர்கள் ஒன்று கூடி வந்து கழுவுளின் (ஆயர் குல தலைவன்) காமூரை
அழித்து,ஆநிரைகளை கவர்ந்தனர் .(அகம்-
135/10-14). ஆயர்கள் வேள் குலத்தவர்கள் கிடையாது என்பதற்கு இது ஒரு
சான்று .
பதினான்கு வேளிர்கள் =14 வேட்டுவ குல தலைவர்கள்
குடும்பு :
"...செய்த பரிசாவது குடும்பு முப்பதாய் முப்பது
குடும்பிலும் அவ்வக் குடும்பிலாரேய் கூடி கானிலத்துக்கு மேல் இறை நிலம் உடையான்
தன் மனையிலே..........பொன் வாரியத்துக்கும் முப்பது குடும்பிலும் முப்பது
குடவோலையிட்டு சேரியால் ஒருத்தரை குடவோலை பறித்து பன்னிருவரிலும் அறுவர்
பஞ்சவாரவாரியம் ஆவதாகவும் அறுவர்பொன்வாரியம்." ( உத்திரமேரூர் கல்வெட்டு ;கிபி 10 ;1904-1905, பக்கம் 136-138)
"ஆண்டு தோறும் குடும்பு மாறி இடவும் இடுமடத்து
கட்டளைக்குப் பொருந்தினாரை இடவும் பிடாகை காலுக்கு பிராமணக் குடும்பு செய்தல்
குடிகீழ்...” (1897:104; SII VOL -6, No -58;கிபி 12)
குடும்பு என்ற சொல் பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட ஊரிலுள்ள
விளைநிலங்களின் பாகுபாட்டை குறிக்கும் .
குடும்பாட என்றால், உழுகுடிப் பணிசெய்ய என்றும், குடும்பு என்ற
சொல்லுக்குக் குடியைக் (குடும்பத்தைக்) குறிக்கும் சொல் என மதுரை தமிழ்ப்
பேரகராதியும் பொருள் தருகிறது.
குடும்பு ,குடும்பம்
போன்ற சொல்லுக்கும் குடுமி (குடும) என்ற சொல்லுக்கும் எந்த தொடர்பும் கிடையாது .
"விஸ்ணு வர்ம்ம குடும்பிய குல வர்த்த நஸ்ய லிகித”
இதன் பொருள் : ஸ்ரீ விஸ்ணுவர்மனின் குடும்பமும் குளமும் வளர எழுதியது "
என்பதாகும் .இவன் கதம்ப குலத்தை சேர்ந்த மன்னன் ஆவான் .
(கேரளா, வயநாடு சுல்தான் பத்தேரி எடக்கல்
மலைக்குகை கல்வெட்டு; கிபி 5; ஆவணம்
இதழ் 9 1998 பக்கம் -2)
குடும்பிய என்ற சொல் குடும்பத்தை குறிக்கும் .இது ஒரு குடிப்பெயர் கிடையாது .
"பள்ளர் சில சமயங்களில் தங்களை
அழைத்துக்கொள்ளும் பட்டப் பெயர் .பள்ளன்களின் சாதி தலைவனுக்கான பட்ட பெயரும் இதுவே”
(தென்னிந்திய குலங்களும் குடிகளும் தொகுதி – 4)
பள்ளர் குடியை
சேர்ந்தவர்களின் பட்ட பெயர் குடும்பன் ஆகும் .
குடும்பன் என்ற
சொல்லும் ,குடுமி
(குடும ) என்ற சொல்லுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.