Sunday, 26 June 2016

கொங்கு வேட்டுவ கவுண்டர் வரலாறு

வேட்டுவ கவுண்டர் (பூலுவ வேட்டுவ குலம்,மாவலி வேட்டுவ குலம் ,காவல வேட்டுவ குலம் ,வேட வேட்டுவ குலம்,வேட்டுவ குலம்) இனத்தை பற்றிய இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகள்:

ஆயர், வேட்டுவர், ஆடூஉத் திணைப் பெயர். ஆ வயின் வரூஉம் கிழவரும் உளரே. (தொல்காப்பியம் 21) கி மு 300 -400 களில் தோன்றிய தொல்காப்பியத்தில் வேட்டுவ இனத்தை பற்றி கூறப்பட்டுள்ளது . கிபி 100,200,300,400 களில் தோன்றிய இலக்கியத்தில் (அகம் ,புறம் ,நற்றிணை ,ஆற்றுபடை ) வேட்டுவர் இனத்தை பற்றி கூறப்பட்டுள்ளது . கிபி 5ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் ,கிபி 6ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தோன்றிய சிலம்பு -வேட்டுவ வரி வேட்டுவ இனத்தை பற்றி கூறுகிறது . தமிழ் மண்ணில் கிபி 500,600,700,800,900,1000,1100,1200,1300,1400,1500,1600,1700,1800,1900 களில் கிடைத்த கல்வெட்டுகள் ,நடுகற்கள் ,பட்டயங்களில் வேட்டுவர் இனத்தை பற்றி கூறப்பட்டுள்ளது . சங்ககாலத்தில் வேட்டுவர் இனத்தை வில்லர் ,எய்னர் போன்ற சிறப்பு பெயர்களில் அழைக்கபட்டதை இலக்கியங்கள் உறுதிபடுத்துகிறது .வேட்டுவ இனத்தினர் படைதொழில் செய்ததால் வேட்டுவ போர்வீரரை மறவர் ,மழவர் ,இளையர் ,வயவர் என அழைக்கபட்டது . சில வேட்டுவ குலங்களை காவலன் என்றும் ,சில வேட்டுவ குலங்களை பூலுவர் என்றும் ,சில வேட்டுவ குலங்களை மாவலியர் என்றும் ,சில வேட்டுவ குலங்களை வேடர் அல்லது வில்வேடுவர் என்றும் அழைக்கபட்டதை கல்வெட்டுகள் மற்றும் பட்டயங்கள் உறுதிபடுத்துகிறது .
உதாரணம் : வேடர் வேட்டுவர் '..கொடுமுடிநகர் கடந்து வெஞ்சமாக் கூடத்திற்கு வந்து வேடர் வேட்டுவராகிய கம்பழத்தவரை விட்டு செடி கொடி வெட்டி வேலி பண்ணி வைத்து ..' வேடர் வேட்டுவர் -வேட வேட்டுவ குலம் . கம்பழம்-படைவீரர் குழுக்கள் '..சேரன் அந்த பூம்பாறை கோட்டை நகர் ஊர் அதிகாரத்திற்கு வேடர் குண்ணவரில் நாகப்ப மண்ணாடியை வைத்தார் ..' குண்ண -குண்ண வேட்டுவ குலம் .
(சோழன் பூர்வ பட்டயம் ). வேட்டுவர் கலிவெண்பா வேடர் வேட்டுவ குலத்தை பற்றி கூறுகிறது . வேடர் வேட்டுவரின் உட்பிரிவுகள் (குண்ண வேட்டுவ குலம்) பற்றி சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது . பூலுவ வேட்டுவர் '....காசிப கோத்திரத்து பெரியசெட்டி பிள்ளனுக்கும் செட்டி கேசவனுக்கும் செட்டி சிறுகேசவனுக்கு மற்றொன்றும் ஊராள்மை பூலுவ வேட்டுவரில் கேச கன்னனுக்கொன்றும் கண்ணன் பாண்ட வதறையனுக்கும் கோவன் கள்ளைக்கும் ஊராள்மை ஓன்று ..' (1915:99,கிபி 13,திருமுருகன் பூண்டி ) '...அமர மயங்கற மன்னரையில் பூலுவர் காத்தூண் காணியில் நிலம் இரண்டு மாவும் ..' (S.I.I Vol-V,No-260, கோவை ,பேரூர் ,கிபி 13) '.... பெரும்பழனில் இருக்கும் பூலுவன் மேற்செரி வெள்ளைகளில் ராசன் நிறை உடையானான தொண்டைமான் ...' (S.I.I Vol-1,No-338,கிபி 12,பெருமா நல்லூர் )
வெள்ளை (வெள்ளாடு )- வெள்ளை வேட்டுவ குலம் 'ஆய் அம்மன் ' இன்று வெள்ளை வேட்டுவ குலத்தினரின் குல தெய்வம் ஆகும் . பல்லடம் ,பொங்கலூர் கல்வெட்டு 'பூலுவ குடுமரில் பெரிய பிளியனான கண்டிமுடையார் 'என்பவரை பற்றி கூறுகிறது . (பொங்கலூர் கல்வெட்டு, வீர பாண்டியர்,கிபி 13). குடுமி (குடுமர்)-குடுமி வேட்டுவ குலம் '...பூலுவன் சோழன் மனைக்கு வடக்கு மேற்பக்கெல்லை குடுமி சிறுவன் ..' (கரூர் ,வேட்டமங்கலம் கல்வெட்டு(South Indian Temple Inscription,Vol-2,No-736),பாண்டியர்,கிபி 13 ). சோழர் -சோழ வேட்டுவ குலம் . குடுமி -குடுமி வேட்டுவ குலம் குடுமி சிறுவன் பூலுவ வேட்டுவ குலத்தை சேர்ந்தவன் என்பதை இந்த கல்வெட்டுகள் மூலம் அறியலாம். .கொங்கு மற்றும் கோனாட்டு பகுதிகளில் காணப்படும் கல்வெட்டுகளில் குடும,குடுமி என்ற சொல் குடுமி வேட்டுவ குலத்தை குறிக்கும் .
வேட்டுவர் கலிவெண்பா பூலுவ வேட்டுவ குலத்தை பற்றி கூறுகிறது . பூலுவ வேட்டுவரின் உட்பிரிவுகள் (சோழ குலம் ,குடுமி குலம் ,செய்யர் குலம் ,முட்டை குலம் ,பெரும்பற்றார் குலம் ,மயில் குலம் ,வெள்ளை குலம் ,குடதியர் குலம் ,உத்திரர் குலம் ) பற்றி கல்வெட்டுகள் கூறுகிறது . காவல வேட்டுவர் '...உத்தமசோழ சதுவேதி மங்கலத்து இருக்கும் காவலன் கரையரில் செய கங்கனான தம்பிரான் தோழன் ...' (ஈரோடு பெருந்துறை கல்வெட்டு ,கிபி 13) கரையர் -கரைய வேட்டுவ குலம் . வேட்டுவர் கலிவெண்பா காவல வேட்டுவ குலத்தை பற்றி கூறுகிறது . காவல வேட்டுவரின் உட்பிரிவுகள் (கரைய குலம் ,பட்டாலி குலம் (கள்ளிபிலர்,குறும்பிலர்),வேந்த குலம் (வளவர் ),மண்ணடி குலம் ) பற்றி கல்வெட்டுகள் மற்றும் பட்டயங்கள் கூறுகிறது . மாவலி வேட்டுவர் '...இராகுத்த மிண்டன் சொரிவன்னியர் சூரியன் புவனேக வீரன் பதினெட்டு வன்னியரை முதுகு புரங்கண்டான் காங்கேயனை வென்று கடையில் விலை கொண்டான் வேட்டு மாவலிக்கு விரிந்திடோம் பாண்டியன் ..' ( புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-758,திருமெய்யம் ,கி பி 15 )
வேட்டுமாவலிக்கு -வேட்டுவமாவலிக்கு. 'ஸ்ரீ மாவலி வாணகோ வலங்கை மீ .ம ..' (தமபுரி ,அரூர் ,கிபி 8) ஆனைமங்கலம் என்னும் ஊரை ஆண்ட 'வேட்டுவதி வாணகோவரையார் 'பற்றி கல்வெட்டு (செங்கம் நடுகற்கள் 1971/39) கூறுகிறது . வேட்டுவர் கலிவெண்பா மாவலி வேட்டுவ குலத்தை பற்றி கூறுகிறது . மாவலி வேட்டுவரில் உட்பிரிவுகள்( புன்னம் குலம் ,புன்னாடி குலம் ,புன்னகர் குலம் ,புன்னம்குடி குலம் ,பெருமாள் குலம் ,வெங்காஞ்சி குலம் ,இலங்கை குலம் ,உரிமைப்படை குலம் ,நல்வாள் குலம் ) பற்றி கல்வெட்டுகள் கூறுகிறது . பூலுவ வேட்டுவர்(பூலுவர்) ,காவல வேட்டுவர் (காவலன் ), மாவலி வேட்டுவர் (மாவலியர்), வேட வேட்டுவர் (வேடர் ) போன்றோர்கள் வேட்டுவர் இனத்தின் உட்பிரிவுகளாக பட்டயம் மற்றும் கல்வெட்டுகளில் கூறப்பட்டு உள்ளது . தொழில்கள் அடிப்படையில் தமிழ் மண்ணில் சாதிகள் உருவானது .கி மு 300 களில் வேட்டு தொழில் செய்தததால் வேட்டுவ சாதி உருவானது .இதனால்தான் வேட்டுவ சாதியை தொல்குடி என்று இலக்கியங்கள் கூறுகிறது . வேட்டு தொழில் (குடிகாவல் ,போர் தொழில் ) செய்தவர்கள் தங்களது உணவுக்காக மான் ,முயல் ,காட்டு கோழி போன்ற விலங்குகளையும் ,பறவைகளைவும் வேட்டையாடினார்கள் .இதனால் வேட்டுவ இனத்தவர்களை வேட்டவர் அல்லது வேடுவர் அல்லது வேடர் என அழைக்கபட்டது . தமிழ் இலக்கணம் :
வேட்டுவர் - இன பெயர் வேட்டுவன் -ஒருமை ; வேட்டுவர் -பன்மை வெ -குறில் ; வே-நெடில் வ -குறில் ;வா -நெடில் கல்வெட்டுகள் ,செப்பேடுகள் ,ஓலை சுவடிகளில் நெடிலுக்கு (வே ) பதிலாக குறில் (வெ) எழுத்தை பயன்படுத்தினார்கள். உதாரணம் : சேலம் ,ஆத்தூர் கல்வெட்டு (கிபி 13) நில வாளை வேட்டுவ கூட்டத்தை சேர்ந்த ராமன் சோழகோன் என்பவர் நீர் பாசனத்தை பெருக்க கிணறு வெட்டியதை பற்றி கூறுகிறது . அவன் திருச்சி முசிறி கல்வெட்டுகளில் (கிபி 13) 'நிலவாளை வேட்டுவார்' என்று கூறபடுகிறான் .இவன் பாண அரசரின் படை தலைவனாக இருந்ததை இக்கல்வெட்டு கூறுகிறது . முசிறி கல்வெட்டில் குறிலுக்கு (வ ) பதிலாக நெடில் (வா ) பயன்படுத்தபட்டுள்ளது . குடுமி வேட்டுவ குலத்தை 'குடுமியார் ' என்று அழைக்கபட்டதை கோனாட்டு கல்வெட்டுகள் கூறுகிறது . வில்லி வேட்டுவ குலத்தை 'வில்லியர் 'என்று அழைக்கபட்டதை கரூர் கல்வெட்டுகள் கூறுகிறது
நடுகற்கள் ,கல்வெட்டுகள் ,சோழன் பூர்வ பட்டயம் ,அப்பிச்சிமார் காவியம் ,வேட்டுவ கலிவெண்பா ,வேட்டுவ செப்பேடுகள் போன்ற ஆவணம்களில் பேசபட்ட வேட்டுவ குலத்தவர்கள் சங்க இலக்கியத்தில் பேசப்பட்டவர்கள் .சங்க இலக்கியத்தில் பேசப்பட்ட வேட்டுவ குலத்தவர்களை 'பூலுவர்' என்றும் 'காவலன் ' என்றும் 'மாவலியர்' என்றும் 'வில்வேடுவர்' என்றும் அழைக்கபட்டது. சங்க இலக்கியத்தில் பேசப்பட்ட வேட்டுவ குலத்தவர்கள் இன்று வேட்டுவ கவுண்டர் ,புன்னம் வேட்டுவ கவுண்டர் ,பூலுவ கவுண்டர் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை அறிக்கைகள் (ஆங்கிலேயர் காலத்தில் கிபி 1931 வரை சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தபட்டது . கிபி 1985 ஆம் ஆண்டு அம்பாசங்கர் அறிக்கை சாதிகள் பற்றிய பட்டியலை தருகிறது .) கூறுகிறது .