Wednesday, 10 August 2022

நாயன்மார்கள்

 

                                                        நாயன்மார்கள்

 

நாயன்மார்கள் என்போர் சைவ அடியார்கள் ஆவார்.  சுந்தரமூர்த்தியார் திருத்தொண்டத் தொகையில் அறுபது சிவனடியார்கள் பற்றிய குறிப்பிட்டுள்ளார். அந்த நூலினை மூலமாக கொண்டு சேக்கிழார் பெரிய புராணத்தினை இயற்றினார். நாயன்மார் எண்ணிக்கை அடிப்படையில் 63 நபர்கள் ஆவார்கள்.

 

திருப்பனந்தாள் கோவிலில் 63 நாயன்மார்களுக்கும் சிலைகள் அமைத்து அவற்றின் வழிபாட்டு செலவுக்காக குங்கிலி கலையன் என்பவன் நில தானம் அளித்ததை திருப்பனந்தாள் கோவில் கல்வெட்டு(கிபி 1185;1914:40) ஓன்று கூறுகிறது.

 

திருவேட்டுவப் பெருமாளுக்கும் மற்றுள்ள தேவர்களுக்கும் திருப்படி மாற்றுகுடலாக ஸ்ரீ பாதத்து நீர்வரத்து கொடுத்த நிலமாவதுஎன்று திருப்பனந்தாள் கல்வெட்டு கூறுகிறது.

இதில் 63 நாயன்மார்களை கல்வெட்டில்திருவேட்டுவப் பெருமாளுக்கும் மற்றுள்ள தேவர்களுக்கும்என்று கூறப்பட்டு உளளனர்.

திருவேட்டுவப் பெருமாள் -வேட்டுவ குடியை சேர்ந்த அரசர்கள்

 மற்றுமுள்ள தேவர்கள் - மற்றுமுள்ள  நாயனார்கள்

இக்கல்வெட்டில் முதலில் அரச குல நாயன்மார்களை கூறிய பிறகு அரச குலம் அல்லாத நாயன்மார்களை கூறியுள்ளார்கள்.

வேட்டுவர் குடியில் உட்குழுக்களை( முன்னை குலம், சோழர் குலம், பாண்டிய குலம் சேர குலம், குடுமி குலம், குறும்ப குலம் ,காளத்தி குலம் ) பற்றி வரலாற்று அறிவு இல்லாதவர்கள் தான் 63 நாயன்மார்களில் கண்ணப்பர் மட்டுமே வேட்டுவ குடியை சேர்ந்தவர் என்று கூறி வருகிறார்கள்.

 

குடுமி வேட்டுவ குலம்:

'.... பொங்கலூர் நாட்டு கீரனூர் குடுமரில் சுந்தன் அதிசிய சோழனான குலோத்துங்க சோழ இருங்ககோளன் இந்நாயனார் திருவாகிச்வரமுடையார்'

(S.I.I Vol-V, No-278, கி பி 1218,கீரனூர் )

 

இருக்குவேள் குடுமி குலத்தை சேர்ந்தவன் என்பதை இக்கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகிறது .

 

''ஸ்வஸ்தி விக்கிரமசோழதேவருக்கு யாண்டு ஏழாவது இக்கோவில் திருநிலைவாரணையும் பொங்கலூர் நாட்டு கீரனூரில் இருக்கும் ஐங்கை குடுமிச்சிகளில் சோழன் உமையால் அனுந்திர பல்லவ அரசி தருமம்

(பல்லடம் செலகரிச்சல் கல்வெட்டு, கிபி 1280)

ஐங்கை  = கொற்றவை

குடுமிச்சி-பெண்பால் பெயர்

குடுமர்  -ஆண்பால் பெயர்

.

'பொங்கலூர் நாட்டு குண்டோடத்தில் குடுமிச்சிகளில் சிங்கன்கோவியார் சிறு அங்கராயன் மனைக்கிழத்தி '(குண்டடம்; கிபி1219; 1920:117).

குடுமிச்சி-பெண்பால் பெயர்

குடுமர்  -ஆண்பால் பெயர்

 

குடுமி குலத்தை சேர்ந்த பெண்களை குடுமிச்சி என்று கல்வெட்டுகளில் அழைக்கப் பட்டனர் .

 

'ஸ்வஸ்தி ஸ்ரீ வீரபாண்டிய தேவருக்கு யாண்டு 6 வது கிழங்கு நாட்டு வேட்டமங்கலத்து ஊரும் அரையர்களும் இளமாடமும் எங்களூர் நாயனார் புற்புவன முடையருக்கு  நாங்கள் நீர்வார்த்து குடுத்த நிலமாவது கீழ்பாற்கெல்லை தண்ணீர் கிணற்று இட்டெரிக்கு தென்னிட்டேரிக்கு மேற்கு தென்பார்க்கெல்லை பூலுவன் சோழன் மனைக்கு வடக்கு மேல்பாற் கெல்லை  குடுமி சிறுவன் தரைக்கு  கிழக்கு வடபார்க்கில்லை கழபகன்  தோட்டத்துக்கு தெற்கு இன்நான் கெல்லைக்கு உட்பட்ட  நிலமும் கிணறும் நீர்வார்த்து கொடுத்தோம் வேட்டமங்கலத்தில் புற்புவன முடையருக்கு வேட்டமங்கலத்து ஊரோம் '(கிபி கரூர் வேட்டமங்கலம் ) '(SITI vol-2 No-736; வேட்டமங்கலம் கல்வெட்டுகள், கிபி 1271)

 

பூலுவன் =பூலுவ வேட்டுவ குலத்தை குறிக்கும் .

சோழன் =பூலுவ வேட்டுவ குலத்தை சேர்ந்த ஒருவனின் இயற்பெயர்

குடுமி =குடுமி வேட்டுவ குலத்தை குறிக்கும்.

சிறுவன் =குடுமி வேட்டுவ குலத்தை சேர்ந்த ஒருவனின் இயற்பெயர்

வேட்டமங்கலம் =வேட்டு மங்கலம்

அரையர்களும் =வேட்டுவ குலத்தை சேர்ந்த ஆள்பவர்களை குறிக்கும் .

கிழங்கு நாட்டு வேட்டமங்கலம் ஊரில் கரடி வேட்டுவ குலத்தவர்கள் ,பூலுவ வேட்டுவ குலத்தவர்கள் மற்றும் குடுமி வேட்டுவ குலத்தவர்கள் வாழ்ந்து வந்ததை வேட்ட மங்கலம் கல்வெட்டுகள் கூறுகிறது .இவர்களை அரையர்கள்(வேளிர்) என்று அழைக்கப் பட்டு உள்ளனர் .

[வேட்டமங்கலத்து ஊரும் அரையர்களும் =வேட்டமங்கல ஊரை ஆள்பவர்களை குறிக்கும்.

துடியலூர் ஊரும் ஊராளிகளும் =துடியலூர் ஊரை ஆள்பவர்களை குறிக்கும் .

துடியலூர் ஊரும் ஊரார் =துடியலூர் ஊரின் குடிமக்களை குறிக்கும் .

தாரமங்கல ஊரும் முதலிகளும் =தாரமங்கல ஊரின் அதிகாரிகளை குறிக்கும் .

பேரூர் ஊரும் நகரத்தோம்" (SII Vol-5 No-244)

பேரூர் ஊரும் நகரத்தார் =பேரூர் ஊரின் வணிக குடிகளை குறிக்கும் .]

 

ஆள்கொண்ட தேவரான தன்மராயருக்கு தென் கடம்பாண்டாரான தன்மாராயர் கல்வெட்டி கொடுத்துள்ளார் .இதற்கு சாட்சி கையெழுத்து யிட்டவர்களில் குடுமியார்(குடுமி வேட்டுவர்),சுந்தரபாண்டிய தேவர் மற்றும் சேந்தமங்க நாட்டவர்கள் ஆவார்கள் .(PSI-410)

 

 

குடுமி வேட்டுவ குலத்தை சேர்ந்த ஆண்களை குடுமர்,குடுமி, குடுமியார் என்றும் பெண்களை குடுமிச்சி என்றும் அழைக்கப்பட்டதை இக்கல்வெட்டுகள் உறுதிப்படுத்தும்.

 

 

இங்கு குடுமி என்ற சொல் குடுமியாமலையை  குறிக்கும் சொல் .

இருக்குவேள் குலத்தவர்கள் குடுமியான் மலை பகுதியில் இருந்து கொங்கு நாட்டுக்கு வந்து கொங்கு நாட்டை ஆண்டார்கள் .இதனால் இவர்களை குடுமி ,குடுமர்,குடுமிச்சி என்று அழைக்க பட்டனர் . குடுமி குலத்தவர்கள் தென் வழி நாட்டில் ஊராளிகளாக இருந்தார்கள் .இதனால் இவர்களை தென் குடுமர் என்று அழைக்க பட்டனர்.

 

 

திருச்சி குளித்தலை ,திருப்பராய்த்துறை தாறு காவனேஸ்வரர் கோவில் கல்வெட்டு (கிபி 963 ;SII Vol-8 No-612 ) ஓன்றுவேட்டுவன் ஆதித்த பிடாரிபற்றி கூறுகிறது.

குடுமி வேட்டுவ குலத்தை சேர்ந்த ஒருவரை வேட்டுவன் என்று அழைக்கப்பட்டதை இக்கல்வெட்டு உறுதிப்படுத்தும்.

 

குடுமி வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்களைகுடுமி குலம்என்று அழைக்கப்பட்டதை வேட்டுவர் கலிவெண்பா உறுதிப்படுத்தும்.

 

கீரனுர் குடுமி வேட்டுவரில் செம்பராய கவுண்டன் என்பவரை பற்றி முத்தூர் பட்டயம் கூறுகிறது.

குடுமி வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்களை குடுமி வேட்டுவர் என்று அழைக்கப்பட்டதை இப்படடயம் உறுதிப்படுத்தும்.

 

குடுமி வேட்டுவ குலத்தவர்களை குடுமியார், குடுமி, குடுமிச்சி, குடுமி குலம், வேட்டுவர், குடுமி வேட்டுவர் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

இடங்களி நாயனார் குடுமி வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்.

 

மின்னை வேட்டுவ குலம்;

முனை என்ற சொல் இலக்கண விதிப்படி முன்னை, மின்னை என்று அழைக்கப்படும்.

முனை என்ற சொல் தோன்றல் விகாரத்தில் முன்னை என்று எழுதப்படும் .

முன்னை என்ற சொல் மருவு புணர்ச்சியில் மின்னை என்று மருவும்

முனையதியரையன் குல மாணிக்கன் இராமதேவன்என்பவரை பற்றி கல்வெட்டு கூறுகிறது. வேட்டுவ குடியை சேர்ந்த குறுநில தலைவர்கள் பெயரில் குலங்கள் உருவாகும் என்பதை இக்கல்வெட்டு உறுதிப்படுத்தும்.

 

முனையதரையன் வேட்டுவன் ஆளவந்தான் இருங்கோளனேன்என்பவரை பற்றி ஜம்பை கல்வெட்டு கூறுகிறது.

முனையதியரையன் குலத்தை சேர்ந்த ஒருவரை முனையதரையன் வேட்டுவன் என்று அழைக்கப்பட்டதை இக்கல்வெட்டு உறுதிப்படுத்தும்.

 

முன்னை வேட்டுவன்பற்றி கோசனம் கல்வெட்டு கூறுகிறது .முன்னை வேட்டுவ குலத்தை சேர்ந்த ஒருவரை முன்னை வேட்டுவன் என்று அழைக்கப்பட்டதை இக்கல்வெட்டு உறுதிப்படுத்தும் .மின்னை( முன்னை) வேட்டுவ குலத்தவர்களை முன்னை குலம் என்று அழைக்கப்பட்டதை வேட்டுவர் கலிவெண்பா உறுதிப்படுத்தும்.

 

மின்ன வேட்டுவ குலத்தை சேர்ந்த ஒருவரை 'முன்னை வேட்டுவன் ' என்றும் 'மின்னை வேட்டுவன் ' என்று கூறப்பட்டதை தென்னிலை செப்பேட்டில் கூறப் பட்டு உள்ளது .

மின்னை வேட்டுவ குலத்தவர்களை மின்ன குலம் ,மின்னை வேட்டுவர், முன்னை வேட்டுவர், வேட்டுவர் என்று இன்றும் அழைக்கப்படுகின்றனர்.

 

நரசிங்க முனையத்தரையர் மின்ன வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்.

 

குறும்பில வேட்டுவ குலம்( பட்டாலி வேட்டுவ குலம்)

 

பெரு நம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன் பெருமிழலை குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன் - தேவா-சுந்:396/2

குறும்ப நாயனார் மிழலை பகுதியை சேர்ந்ததால் பெருமிழலை குறும்பர் என்று அழைக்கப்பட்டனர்.

 

வேட்டுவ குடியினர் முல்லை நிலத்தில் வாழ்ந்த இடங்களை குறும்பு என்று அழைக்க பட்டத்தை குறிப்பதாக

வில்லோர் குறும்பில் ததும்பும் அகம் 261/14

கொடு வில்  எயினர் குறும்பில் சேப்பின் பெரும் 129

புறவே புல்லிருந்து பல்லாயத்தான்

வில் இருந்த வெங்குறும்பின்று புறம் 386/12-13

வேட்டு புழை அருப்பம் மாட்டி காட்ட - முல் 26

அருமிளை இருக்கை யதுவே மனைவியும்

வேட்டச் சிறாஅர் சேட்புலம் படராது புறம் 326/7-8

என்ற  அடிகளில்  அமைத்துள்ளது

 

மிளை = வேட்டுவ குடியினர் வாழும் இடங்களை சுற்றி உருவாக்கப்பட்ட காவல் காட்டை (அடர்த்தியான முள் மரங்கள் இருக்கும் பகுதி )

பெரும்பாண் ஆற்றுபடை  வேட்டுவ குடியினர் வாழும் குறும்பு பற்றி கூறுகிறது .(வரி 117-133).

 

ஸ்வஸ்தி ஸ்ரீ கோ அபிமானசோழ ஸ்ரீ ராஜாதிராஜ தேவற்குத் திருவெழுத்திட்டுச் செல்லா நின்ற திருநாளி யாண்டு பத்தாவது நாயகவிச்சி நாயசிலம்பியேந் குறும் புள்ளரில் எந் மணவாளந் காவன் அரையனைச் சாத்தி எடுப்பிச்ச பிடாரி கோயில் இது ரக்ஷிப்பாந் காலிற் பொடி எந்தலை மேலிது

 (திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் பட்டாலிக் கிராமம் எனும் ஊரில் கொங்கு சோழ அரசன் ஆட்சியில் இந்த கல்வெட்டு வெட்டப்பட்டு உள்ளது. ( ஆவணம். இதழ் 7, 1996, பக். 31)

நாயகவிச்சி நாயசிலம்பி என்பவள் தன் கணவனுக்கு பிடாரி கோவில் எடுத்தாள்.

மணவாளர்=வேட்டுவ இனக்குழு தலைவர் ;நாயன் =தலைவன்;நாயவிச்சி =தலைவி 

குறும்பர் என்ற சொல்லில் இருந்து குறும்பிலர் என்ற சொல் உருவானது.குறும்பிலர் என்ற சொல் தோன்றல் விகாரத்தில் குறும்பில்லர்

குறும்பர் என்ற சொல் வேட்டுவ குலத்தவர்களை  குறிக்கும். குறும்ப நாயனார் வேட்டுவ குலத்தை சேர்ந்தவர் . குறும்ப நாயனாரின் கிளை சுற்றத்தை(பங்காளி உறவு) குறும்பில்லர் என்று அழைக்கப்படும்.

 

பட்டாலி வேட்டுவ குலத்தவர்களை குறும்பில்லர்(குறும்ப நாயனார்) குலம் என்று கல்வெட்டுகளில் அழைக்க பட்டனர் .கிபி 1090களில் இருந்து இவர்களது கல்வெட்டுகள் கொங்கு நாட்டு பகுதியில் கிடைக்கிறது . வேட்டுவ குடியில் ஒரு உட்குழு பெயர் (குறும்பர்) தங்களது தலைவர் பெயரில் அழைக்கப்பட்டதை இக்கல்வெட்டு உறுதிப்படுத்தும்.

 

 

காங்கேய நாட்டு பட்டாலியில் காவலன் குறும்பில்லரில் போடன் மனைக்கிழத்தி கோவி” ( கிபி 1285;காங்கேயம் பட்டாலி ஊர்;1920:271)

 விஜயமங்கலத்து பட்டாலி வேட்டுவன் சொக்க கூறன் “(கிபி 13;விஜயமங்கலம் ;SITI Vol-3 part-1 No-1092).இக்கல்வெட்டுகள் குறும்பிலர் குலத்தினரை பட்டாலி வேட்டுவர் என்று அழைக்கப்பட்டதை உறுதிப்படுத்தும்.

 

பட்டாலி கிராமத்தில் காவலியர் என்று அழைக்கப்பட்ட பட்டாலி வேட்டுவ குலத்தை சேர்ந்த அனுமந்த கவுண்டருக்கு சொந்தமான நிலங்களை கிபி 1792 இல் உத்தமக்காமிண்டன் வம்சாவளியினர் (பழைய கோட்டை வேளாள தலைவர்) ரூபாய் 200 கொடுத்து விலைக்கு வாங்கியதை சர்க்கரை பட்டயம் கூறுகிறது.

காவலன் என்ற சொல் பட்டாலி வேட்டுவ குலத்தவரின் சிறப்பு பெயர் என்பதையும் பட்டாலி வேட்டுவ குலத்தவர்களை குறும்பில்லர் என்று அழைக்கப்பட்டதையும் இந்த வரலாற்று சாசனங்கள் உறுதிப்படுத்தும்.

 

'நீர்கொண்டு பாய பட்டாலிவதி என்கிற வாய்க்காலில் விழவிட்டு ஜெயங்கொண்ட சோழ நல்லூருக்கு நீர் பாய '(1908 :434 ;கிபி 1193 )                               

'அணுக்கியார் பல்லவன் பட்டாலி நங்கை' திருவீழி நாதர் கோவிலுக்கு கொடை அளித்ததை பற்றி தஞ்சை, நன்னிலம் திருவீழி மிழலை கல்வெட்டுகள் கூறுகிறது. (1908:384,கிபி1054 ).

'அணுக்கியார் பல்லவன் பட்டாலி நங்கை'  'பட்டாலி ஈஸ்வரம் ' கோவிலுக்கு கொடை அளித்ததை திருவீழி நாதர் கோவில் கல்வெட்டுகள் கூறுகிறது. (1908:393).

மிழலை பகுதியில் 'பட்டாலிவதி' என்ற பெயரில் ஒரு வாய்க்கால் இருந்தது . (1908 :434).

'உய்யக் கொண்டார் வளநாட்டு வேண்ணாட்டு திருவீழி மிழலை ' என்று கல்வெட்டு கூறுகிறது (1938 -39:235)

வேண்ணாட்டு = வேள் +நாடு .

மிழலை   மற்றும் திருபுனவாயில் ஊர்களை  வேள் எவ்வி ஆண்டு வந்ததை சங்க இலக்கியம் கூறுகிறது . திருபுனவாயில் பகுதியில் வேட்டுவ குடியினர் வாழ்ந்து வந்ததை சுந்தர மூர்த்தி நாயனார் கூறுகிறார்

 

மிழலை பகுதியில் இருந்து பட்டாலி வேட்டுவ குலத்தவர்கள் கொங்கு நாட்டுக்கு வந்தார்கள் என்பதை இக்கல்வெட்டுகள் உறுதிப்படுத்தும். ஆகவே குறும்ப நாயனார் பட்டாலி வேட்டுவ குலத்தை சேர்ந்தவர் ஆவார்.

 பட்டாலி வேட்டுவ குலத்தவர்களை பட்டாலி குலம் ,பட்டாலி வேட்டுவர் ,வேட்டுவர் என்று இன்றும் அழைக்கப்படுகிறார்கள்.

 

சோழ வேட்டுவ குலம்:

தமிழ் சோழர்கள் சோழ வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்கள்.

 

திணை என்ற சொல் குடி (குலம் ) என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது .(பொருள். அகத்:21/1;குறிஞ்சி-205;மலை-401;குறு-45/5;பதி-14/20,31/13,72/14,85/5;புறம்  24/28,27/3,159/27,373/28).

 

 

குடி  என்ற சொல் குலம் என்ற பொருளில் பயன்படுத்த பட்டது .(தொல் சொல் பெயர் 162/1 ,தொல் பொருள் கள 112/33;புறம் ;333/14 , 202/14,375/6,164/13;பெரும் 137 ,166; பதி 13/23; மது 131).

 

"கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே

வாளோடு முன்தோன்றி மூத்த குடி " 

(புறப்பொருள் வெண்பாமாலை குடிநிலை 35)

 மூத்த குடி = பழமையான இனக்குழு  

 

 

வேட்ட சிறாஅர் சேண் புலம் படராது - புறம் 326/8

வேட்ட சிறாஅர்= வேட்டு சிறாஅர் (வேட்டுவ குலத்தை சேர்ந்த சிறுவர்கள்)

 

……………………………………………………..தன்னூர்

வேட்டக் குடி  தொறுங் கூட்டு ………………- புறம் 333/13,14

 

வேட்டக் குடி  =வேட்டுக் குடி (வேட்டுவ குலத்தினர் )

 

எவ்வி தொல் குடி படீஇயர் மற்று இவர் - புறம் 202/14

எவ்வி தொல் குடி =எவ்வியின் குலம் (வேட்டுவ குடியில் ஒரு உட்குழுவினர் )

 

இன்மை தீர்க்கும் குடி பிறந்தோயே - புறம் 164/13

இன்மை தீர்க்கும் குடி = குமணனின் குலம் (வேட்டுவ குடியில் ஒரு உட்குழுவினர் )

 

"ஆராச் செருவிற் சோழர் குடிக்கு உரியோர்

ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து. (பதிற்று பத்து பதிகம் 5)

 

ஒருவீர் தோற்பினும் தோற்பதும் குடியே புறம் 45 /5

இங்கு சோழனின் இனக்குழுவை குடி(வேட்டுவ குடியில் ஒரு உட்குழுவினர்) என்று அழைக்கப்பட்டு உள்ளனர் .

 

சோழர் குடி =சோழ குலம்

"சோழ குல வாய்க்கால் (குடந்தை, பாணபுரீஸ்வரர் கோவில்; கிபி 1222)

 

"செம்பிய கீழானடி நல்லுரில் ஏழரை எண்பட்ட குடி இருக்கிற குடிகளிலே              வெள்ளான் குடியிலே இரன்டு குடியும் பூலுவ குடியிலே இரண்டு குடியும் ......."(அவிநாசி கல்வெட்டு ;கிபி 1274; SII  Vol -26  No -196)

 

பூலுவ குடி =பூலுவ வேட்டுவ குலத்தை குறிக்கும் .

வெள்ளான் குடி =வேளாள சாதியை குறிக்கும் .

இரண்டு குடியும் =இரண்டு குடும்பமும் .                       

 

கூலம் பகர்நர் குடி புறந்தராஅ - பதி 13/23

கூலம் பகர்நர் குடி = வாணிக குடி

 

ஏரின்வாழ்நர் குடி முறை புகாஅ - புறம் 375/ 6

ஏரின்வாழ்நர் குடி = வேளாளர் சாதி

 

துடியன் பாணன் பறையன் கடம்பனென்று

இந்நான் கல்லது குடியும் இல்லை புறம் 335 /7 -8

 

குடி என்ற சொல் துடியன்குடி, பாணன்குடி, பறையன்குடி, கடம்பன்குடி போன்ற இனக்குழுவை குறிக்கும்

 

வீவு இல் குடி பின் இரும் குடி ஆயரும் - கலி 105/7

இரும் குடி ஆயரும் = ஆயர் குடி

 

ஏத்தினர் தரூஉம் கூழே நும் குடி/வாழ்த்தினர் வரூஉம் இரவலரதுவே - புறம் 122/6,7

இங்கு மலையமானின் இனக்குழுவை குடி என்று அழைக்கப்பட்டு உள்ளனர் .

 

குலம் (குடி ) என்ற சொல் இனக்குழுவை குறிக்கும் .

 

ஆர மார்பின் சேரர் குலத்து உதித்தோர் - வஞ்சி 30/205

தொடி விளங்கு தடக்கை சோழர் குலத்து உதித்தோர் - புகார் 10/250

 

படை விளங்கு தட கை பாண்டியர் குலத்தோர்

   அறனும் மறனும் ஆற்றலும் அவர் தம் - மது 23/206,207

 

சூழும் மதுரையார் கோமான்தன் தொல் குலமே

   மலைஅரையன் பெற்ற மட பாவை தன்னை - வஞ்சி 29/125,126

சூழ்தரும் வஞ்சியார் கோமான் தன் தொல் குலமே

   எல்லா நாம் - வஞ்சி 29/129,130

 

வில் தொழில் வேடர் குலனே குலனும்

   ஐயை திருவின் அணி கொண்டு நின்ற - மது 12/90,91

எய் வில் எயினர் குலனே குலனும்


பாய் கலை பாவை அணி கொண்டு நின்ற - மது 12/94,95

வேய் வில் எயினர் குலனே குலனும்

   ஆனை தோல் போர்த்து புலியின் உரி உடுத்து - மது 12/98,99

 

சோழ குலத்தை சோழன் குடி ,செம்பியர் ,வளவர் ,சென்னி, கதிரவன் குலம், சோழ குலம்,செம்பிய வேட்டுவர்,சோழ வேட்டுவர், செம்பிய குலம், வேட்டுவர் என்று அழைக்கப்பட்டனர்.

 

பாண்டியனை "பாண்டிய குலபதி  வரகுணமகாராஜா " என்று கூறுகிறது .(SII Vol-14, No-123)

"இராஜகுலவர் காணிப்பற்று" என்று நிலம் இருந்தது என இரண்டாம் ராஜராஜ சோழன் கால குடந்தை கல்வெட்டு சுட்டிக்காட்டுகிறது. (கி.பி1150; 1931-32:103).

 

கிழங்கு நாட்டு வேட்டமங்கலத்து நடுவிற்சேரி கரடி வேட்டுவரில் செய்யப்பிள்ளையென் “( கிபி 13; வேட்டமங்கலம் ஊர்)

 

'வாய்த்தபுகழ் மங்கலத்து வந்தெதிர்த்த மாற்றலரைச் சாய்த்தமருள்

வென்ற சயம்பெருக  சீர்த்தபுகழ் நிக்குவணம் கற்பொறிக்கப்பட்

டான் கரடி குலச் சொக்கனேந்தலே உலகில்தான் '

(ஈரோடு பழமங்களம் நடுகல் கிபி 11; 1977:217)

கரடி வேட்டுவ குடியை  சேர்ந்த பழமங்கலம்   ஊராளி சொக்கன் என்பவன் முதலாம் ராஜேந்திர சோழனுக்கு ஆதரவாக  போரில் இறந்ததற்காக எடுக்க பட்ட நடுகல் . (சிலர் கரைய குலச் என்றும் படிக்கிறார்கள் .வேட்டுவரில் கரைய வேட்டுவ குலம் ஒரு உட்குழுயும் இருக்கிறது ).

 

கரடி வேட்டுவ குலத்தவர்களை கரடி குலம் என்று இக்கல்வெட்டில் அழைக்கப்பட்டு உள்ளனர்.

கரடி வேட்டுவ குலத்தவர்களை கரடி குலம், கரடி வேட்டுவர், வேட்டுவர் என்று இன்றும் அழைக்கப்படுகிறார்கள்.

 

சோழ மண்டலத்து கண்டியூர் விளக்கத்தரையன் அம்பலவன் பொன்னர் மேனியான் பொன்னம்பல கூத்தன்கோவிலுக்கு கொடை அளித்ததை பற்றி திருப்பூர் பெருமா நல்லூர் கல்வெட்டுகள் கூறுகிறது. (கிபி 1268 ,1270 ,1279 ) . இவர் பாண்டிய மன்னனின் அதிகாரியாக இருந்தார்.

 

விளக்கு வேட்டுவ குடியை சேர்ந்த ஒருவர் அரசாட்சி செய்ததால் விளக்கத்தரையர் என்று அழைக்கப்பட்டனர்.

 

'ஓங்கும் பெரும் புகழ் ...உய்ய நின்றடியோனா...ம் புயது குருகுலத்  ...ற் சந்தி கட்டி .தெல்.... திரு  நெல்லிநாதன் திருக் கரத்தே வாங்குங்   கபாலத்திடும்  பலியேற்கையை  மாற்றினனே பூங்கமழ் சோலை சிற்றூருடையோனே ஓங்கிய பெரும் புகழ்  உய்ய நின்றாடும் பங்கய மடத்தை விரும்பிய பனைப் தோட்  கொங்கலர் நறுத்தார் குருகுலத்தரையன் போன் புனை கலனோடு போனகம் பெறுகத்  தன பெயர் வழுவாச் சந்தி கட்டி  ஒலிக்கு கய நெடு நீர்  நெல்லியலுயர்ந்தவன்  பலி குலத்  திரக்கை மாற்றினன் வருந்தே தார் சிறந்த மணிமவுலிச் சுந்தரபாண்டியற்கு  தழைத்த பதினேழான்டில்த்  தங்காளி சற்கும் கார் சிறந்ததெனக் கோயிற் கற்றளியுஞ்  செய்து  சவுரியுடனாலுடையாள் தற்பித்து  குடுத்தான் வார் சிறந்த முலையவள் வேண்டடுவன் சோறனுய நின்றான் வயற்சிற்றை பதிக்கதிபன்  மல்லிவள நாடன்  தார்  சிறந்த படை மன்னன்  தென்னவன்  தன் தோழன் செங்கை முகில் குருகுலக்கோன் சேர்ந்தவர்  மானேந்தியேய்'(சிவகாசி வட்டம், திருத் தங்கல் நெல்லிநாதர், கிபி 1233, 1922:575)

குரு வேட்டுவ குடியை சேர்ந்த ஒருவர் அரசாட்சி செய்ததால் குருகுலத்தரையர் என்று அழைக்கப்பட்டனர்.

குருகுலத்தரையனின் கிளை சுற்றத்தை(பங்காளி உறவு) குரு வேட்டுவ குலம் என்று அழைக்க பட்டனர் .

இதன் அடிப்படையில் வேட்டுவ குடியில் பல உட்குழுக்கள் உருவானது .

 

  " முத்தூர் காவலன் வளவரில் உத்தமசோழ பல்லவரையன் மகன் சிங்கனான "(முத்தூர் சோழீஸ்வரர் கோவில்; கிபி 1211; 1910:165)

முத்தூர் காவலன் வளவரில் உத்தமசோழ பல்லவரையன் மகன் சிங்கனான அங்கராயன்'என்பவர் முத்தூர் சோழ ஈஸ்வரர் கோவிலில் நந்தா விளக்கு வைத்ததை   முத்தூர் சோழ ஈஸ்வரர் கல்வெட்டு கூறுகிறது.

முத்தூர் காவலன் =முத்தூர் ஊரை காப்பவன் .

வளவர் =செம்ப( செம்பியன் ) வேட்டுவ குலத்தை குறிக்கும் .

" காங்கைய நாட்டில் காடவூரில் காவலன் வளவரில்.....சோழாண்டியேன் "  (கிபி 1215;பட்டாலி ஊர் ;1920:265).

காங்கேய நாட்டு காடவூரில் காவலன் வளவரில் .........சோழாண்டி ' என்பவள் பட்டாலி ஈஸ்வரர் கோவிலில் நந்தா விளக்கு வைத்ததை பற்றி காங்கேயம் பட்டாலி கல்வெட்டு கூறுகிறது .                                                           

வளவர் =செம்ப( செம்பியன் ) வேட்டுவ குலத்தை குறிக்கும் .

காடவூர் காவலன்= காடவூர் ஊரை காப்பவன் .

செம்பிய வேட்டுவர் கோநாட்டை ஆண்டதால் செம்பியன் கோனாடு ,செம்பியன் கானாடு என்று அழைக்கப் பட்டது .(PSI No -338,999)

 

"கோவி ராஜகேசரி பன்மற்க்கு 3 ஆவது யாண்டு ஒல்லையூர் கூற்றத்து நெரிஞ்சிக்குடி உதைய் மாத்தான ஈஸ்வரத்துப் பெருமாளுக்குக் கிழார் கூற்றத்து நெற்றகுடிக்கா ....... உடையான் திறலன் பெருமாளான .சன்னி வேட பேரரையன் வைத்த திரு நொந்தா விளக்கு ஒன்றுக்கு ஆடு 30 (PSI No -20; கிபி 10)

சன்னி வேட =சென்னி வேடர்

செம்பிய வேட்டுவ குடியினரை சென்னி வேடர் என்று அழைக்கப்பட்டனர்.

குண்ண வேட்டுவ குடியினரை குண்ண வேடர் என்று மெக்கென்ச்சி ஆவணத்தில் கூறப்பட்டு உள்ளது .( மெக்கென்சி ஆவணம் டி 2955).

 

"ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு ஐம்பத்து அஞ்சாவது வடகரை நாட்டு குளவாற்றுரிலிருக்கும் ஊராளி செம்ப வேட்டுவன் தொண்டயன் பிள்ளனான சயங்கொண்ட சோழ கொங்காள்வான் இக்குளம் அட்டி காலும் வெட்டி விச்சேன் இது ஆக்குவான் பாதம் எந்தலை இது அழிப்பான் வழி அறுவான்" (கொடிவேரி கல்வெட்டு; கிபி 1125).

செம்பிய வேட்டுவ குலத்தை சேர்ந்த தொண்டயன் பிள்ளன் ஆன செயங்கொண்ட சோழ கொங்காள்வான்  என்பவன் முதலாம் குலோத்துங்க சோழனின் ஊராழ்வானாக இருந்தவன் . இவன் குளம் வெட்டி வைத்ததையும் ,கால்வாய் வெட்டி வைத்ததையும் இக்கல்வெட்டு கூறுகிறது . இவர் முதலாம் குலோத்துங்க சோழனின் ஊராளியாக இருந்தவர் .

 

அரவக்குறிச்சி தாலுக்கா கிராம கணக்கரிடம் இருந்த பண்டைய கணக்குகள் வரலாறுகளில் மணலூர் நாட்டில் வாழ்ந்த வேட்டுவ குடியினரின் நில எல்லைகள் பற்றி கூறப்பட்டு உள்ளது .(D .3139). சோள வேட்டுவன் பற்றி கூறப்பட்டு உள்ளனர் .

 

சோழ வேட்டுவ குலத்தவர்களை செம்ப செம்பிய வேட்டுவர் சோழ வேட்டுவர், வளவர், மும்முடி வேட்டுவன் என்று கல்வெட்டுகளில் அழைக்கப்பட்டு உள்ளனர்.

இன்று சோழ வேட்டுவ குலத்தவர்களை செம்ப வேட்டுவர், சோழ வேட்டுவர் என்று அழைக்கப்படுகிறது.

கோச்செங்கட் சோழன் புகழ்சோழன் மற்றும் மங்கையர்க்கரசியார்  ஆகியோர்கள் சோழ வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்கள்.

 

பாண்டிய வேட்டுவ குலம்:

பாண்டியனை "பாண்டிய குலபதி  வரகுணமகாராஜா " என்று கூறுகிறது .(SII Vol-14, No-123).

'திருபுவனத்து ராசாக்கள் தம்பிரான் பராக்கிரம பாண்டிய தேவர் மகன் இராகூத்த பெருமாள் ' என்பவர் ஈரோடு பெருந்துறை காத்தாங்கண்ணி பகுதியில் ஊராளியாக இருந்தவர். (கிபி 1518 ,SII  VOL -24,NO -197 பெருந்துறை கல்வெட்டு ).

 

பருத்திப்பள்ளி யூராளி பாண்டிய வேட்டுவரில் அதியமான் நடுவில் நங்கனேன்” (நாமக்கல் பருத்தி பள்ளி ஊர் சீகாழி நாதர் கோவில், கிபி 1230; 1915:148)

பாண்டிய வேட்டுவ குலத்தை சேர்ந்த நடுவில் நங்கன் என்பவர் பருத்தி பள்ளி ஊரின் ஊராளியாக இருந்தார் . இவர் பருத்திபள்ளி ஊரில் கோவிலை காட்டினார் .

 

வாழரசரில் பாண்டி குலத்தில் பாண்டி கவுண்டரும் "(தூரன் குல செப்பேடு;கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் காலம் (கிபி 1682 - 1689 )  .

வாழரசரில் பாண்டி குலத்தில் பாண்டி கவுண்டரும் -அரச குலத்தவரில் பாண்டிய வேட்டுவ குலத்தை சேர்ந்த பாண்டி கவுண்டர் என்பவரை குறிக்கும்.

பாண்டிய வேட்டுவ குலத்தவர்களை பாண்டிய குலம் என்று அழைக்கப்பட்டதை வேட்டுவர் கலிவெண்பா கூறுகிறது.

பாண்டிய வேட்டுவ குலத்தவர்களை பாண்டிய குலம், பாண்டிய வேட்டுவர், வேட்டுவர் என்று இன்றும் அழைக்கப்படுகிறார்கள். நெடுமாறன் பாண்டிய வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்.

 

சேர வேட்டுவ குலம்:

பாரியூரில் இருக்கும் பனைய வேட்டுவரில் போந்த பிளையனேன்என்பவரை பற்றி பாரியூர் கல்வெட்டு(கிபி 12;1910:191) கூறுகிறது .

 

வேட்டு லியும் கறயறும் வெங்கோச்சியும் இளமகன் இவ்வூருக்கு பாடிகாவலாகவும் இக்குடி நீங்கா திருவிடையாட்ட (இரவிகோதை செப்பேடு கிபி 10)

வேட்டு =வேட்டுவ குடி

விலியும் =வேட்டுவ குடியில் ஒரு உட்குழுவின் பெயரை குறிக்கும் (வில்லி குலம் ).

கறயறும் =வேட்டுவ குடியில் ஒரு உட்குழுவின் பெயரை குறிக்கும் (கரைய  குலம் ).

வெங்கோச்சி=வேட்டுவ குடியில் ஒரு உட்குழுவின் பெயரை குறிக்கும் .(வெங்கோச்சி குலம் ) .

 

வில் வேட்டுவ குலத்தவர்களை வில்லி குலம் என்று அழைக்கப்பட்டதை வேட்டுவர் கலிவெண்பா உறுதிப்படுத்தும் .வில்லி வேட்டுவ குலத்தவர்களை வில்லி குலம் ,வில்லி, பனைய வேட்டுவர், சேர குலம் , சேர வேட்டுவர் என்று அழைக்கப்பட்டனர் .

 

இன்றும் வில்லி வேட்டுவ குலத்தவர்களை வில்லி குலம், வில்லி வேட்டுவர், வேட்டுவர் என்று அழைக்கப்படுகிறது.

சேரமான் பெருமாள் வில்லி வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்.

காளத்தி வேட்டுவ குலம் :

காளத்தி வேட்டுவ குலத்தவர்களைகாளத்தி குலம்என்று அழைக்கப்பட்டதை வேட்டுவர் கலிவெண்பா கூறுகிறது.

 

கண்ணப்பர் காளத்தி வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்.